Congress or ADMK - whis is a bigger threat to DMK ?

What should the DMK fear ? Congress or ADMK ?

Congress: Disappointment, frustration in Congress

ADMK :
Minority' DMK Government will not last even one year: Jayalalithaa

MDM TRACKER
MDM=MARVELLOUS DMK MANIFESTO

HotMachiHot will be keeping track of Poll Promises made by DMK. These were picked from “emeng.pdf” [in Tamil] downloaded from DMK’s website. As and when they are fulfilled, we would date it and mark it as completed. The idea here is have an audit trail for every election promise that DMK made during 2006 Tamil Nadu elections and keep track of its execution [If any].

--- Vaitheegan.

SCORE BOARD
3 OUT OF 37


MARVELLOUS FEATURES OF THIS MANIFESTO 2006
1. Quality Rice at Rs.2 per Kilo to make women feel happy at heart.

After the swearing-in, Mr.Karunanidhi signed three orders implementing the poll promises of the DPA, [May 15th 2006]
2. Free colour TV to every family for women’s recreation and general knowledge.
3. Restoration of Financial Assistance for marriage – Increased to Rs.15,000/-
4. Rs.45 per day as training allowance again to the members of Self-Help Groups.
5. Maternity assistance to pregnant women at Rs.1000 per month for 6 months!
6. Free gas stove to all poor women!
7. Educational fee increased several fold will be reduced and restored to earlier level.
8. With Nutritious meal to students, egg will be given twice a week. - Read More..[May 15th 2006]
9. Monthly financial assistance up to Rs.300 to the unemployed youth.
10. Employment opportunity to three lakh youth in the vacant posts in Government departments.
11. Self-Help Groups to the unemployed youth.
12. Free computer Training to the youth in rural areas.
13. Waiver of all cooperative loans of the farmers.
14. Free electricity to Weavers in addition to farmers.
15. Assignment of 2 acres of land to the landless poor families.
16. Waiver of cooperative loans in the event of death of farmers!Read More..[May 15th 2006]
17. Selection of Teachers on the basis of registration seniority in the Employment Exchange – Among them 50% will be women!
18. Free electricity to farmers, who had got priority connection on payment of special deposits!
19. All concessions withdrawn will be restored to Government employees and teachers
20. Financial assistance to the families of the deceased
21. Government employees and road workers and employment to their legal heirs
22. Third Police Commission to redress the grievances of Police force and refurbish them!
23. We will implement the recommendations of the Sixth Pay Commission as an when they are announced
24. All the vacancies in Government Departments, Schools, Colleges and Hospitals will be filled – The system of contract employment will be abolished
25. Separate Welfare Boards to the unorganized labour ; Rs.300/- per month as pension to the members
26. Immediate provision of housing to all the fishermen and others affected by Tsunami!
27. Opportunity will be given to all the trained persons from all castes to act as Archakas in the temples
28. Reservation Act for Muslims and Christians
29. Opposition to foreign investment in retail trade
30. Old age pension increased to Rs.400/-
31. Physically Handicapped pension increased to Rs.500/-
32. Installation of Kannagi statue in the same place, removed by the ADMK Government
33. Bus fares raised by the ADMK regime will be reduced to the level of railway fares
34. We will reduce cinema out-door shooting charges enhanced by Jayalalitha Government
35. We will reestablish MGR Film City gradually razed to the ground by Jayalalitha regime
36. We will put up early a statue and memorial for “Nadigar Thilagam” Sivaji
37. We will declare the Birth day of Kamarajar on the 15th July as the day of opening of educational eye and organize celebrations in the schools.



எதிரும் புதிரும்

http://epaper.dinamalar.com/Web/Article/2006/05/13/001/13_05_2006_001_009.jpg

ஒரு ஜனநாயக அரசில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி எப்படி செயல் பட வேண்டும் என்று பத்தி பத்தியாக பேசுவதும், எழுதுவதும் வாடிக்கையாகக் கொண்ட கலைஞர் இன்று தங்கள் அரசின் எதிர்க்கட்சி வலுவாக இருப்பதைக்கண்டு என்ன சொல்கிறார் ?

"நான் மகிழ்ச்சியோடு பதவி ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோதே அவர்கள் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எதிரே விஷப் பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டும்"

ஆக, ஊருக்குத் தான் உபதேசம். தனக்கென்று வரும்போது தள்ளாடுகிறது. ஒரு பழுத்த அரசியல் வாதி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் ஆகப் போகும் ஒரு அரசியல் தலைவர், தம் தொண்டர்களுக்கு கூற வேண்டிய செய்தியா இது ? நேற்றைக்குத்தான் "எங்கள் அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடு படாது" என்று பேட்டி அளித்தார். இன்று விஷப் பாம்புகள் என எதிர்க்கட்சியினரை வர்ணிக்கிறார்.

இந்த நேரத்தில் இரு விஷயங்களை குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

(1) சோனியாவை வாஜ்பாய் நடத்திய விதம்
(2) பிரமோத் மகாஜனுக்கு பிற அரசியல் தலைவர்கள் சூட்டிய இறுதிப் புகழாரம்.

வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த போது, சோனியாவிற்கு உரிய மதிப்பு தந்து, பெரிய தலைவர்கள் வரும்போதெல்லாம், அவரை அழைத்து கலந்து பேசுவது, என்று அரசியல் நாகரிகத்தை காத்தவர் வாஜ்பாய். சோனியா வெளி நாட்டவர் என்ற முத்திரை தவிர, வேறு எந்த விதத்திலும் இவர்கள் தரம் குறைவாக பேசியது இல்லை. அது போல, சோனியாவும், வாஜ்பாயை பற்றி என்றும் தரக் குறைவாகப் பேசியது இல்லை. அதுவல்லவொ நாகரிகம்? தற்போது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மீது கட்சி சார்பின்றி எல்லோரும் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர். அவரை பற்றி யாரும் தரக்குறைவாக பேசியதாக எந்த நாளேடும் செய்தி வெளியிடுவதில்லை.

அது போல, இப்போது பிரமோத் மகாஜன் இறந்த உடன், அவருடைய பரம அரசியல் வைரியான சரத் பவார் மேடையில் அவருக்கு புகழாரம் சூட்டி, தன் கண்ணியத்தையும் , மகாஜன் நடந்து கொண்ட விதத்தையும் உறுதிப்படுத்தினார்.

கல்வி வளம் மிக்க தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது ? ஒரு ஆட்ச்சிக்காலத்தில் அம்மையாரை துகில் உரிந்து மானபங்கப் படுத்தினர். அதற்கு பதிலடியாக நள்ளிரவில் கைதாக்கி ரோட்டில் கொண்டு நிறுத்தினார் அந்த அம்மையார் (அந்த வடுக்கள் மாறப் போகிறதா ?) . "கழுதை விட்டையில் முன் விட்டை என்ன பின் விட்டை என்ன " என்று ஒரு தமிழில் ஒரு வசனம் உண்டு. இப்படி எவன் வேட்டியை உருவலாம், எவள் புடவையை உரியலாம் என்று அலைகின்ற நம் தமிழ் நாட்டில், யாரை நம்பி ஓட்டுப் போடுவது ? சரி அப்படியே போட்டு தொலைத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சீறிக்கொண்டு எப்போது கவிழ்க்கலாம் என்கிற சிந்தையில் ஆட்சி செய்தால் நம் நாடு எப்படி உருப்படுவது ?

தமிழில் ஒரு வினோதம் : "வாக்கு அளித்தவன்" என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு.

வாக்கு அளித்தவன் = ஓட்டு போட்ட்டவன்
வாக்கு அளித்தவன் = வாக்குறுதி அளித்தவன் = அரசியல்வாதி

முதலாமவன் வாழ இரண்டாமவன் உழைக்க வேண்டும். முதலாமவன் தன் கடமையை செய்து விட்டான். இரண்டாமவன் தன் கடமையை செய்யாமல் எங்கேடா சண்டை போடுவது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறான். இப்படி எதிர் அணியில் இருந்து கொண்டு மக்களுக்காக உழைக்கிறேன் என்று பொய் சொல்லும் இரு கட்சிகளும் நல்லது என்ன செய்வார்கள் என்பது பெரிய புதிராகத் தான் இருக்கிறது. பகைமையை மறந்து நாட்டுக்காக உழையுங்கப்பா !

ஒளிமயமான எதிர்காலம்!

எதிரே விஷப்பாம்புகளுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு நாம் இருக்க வேண்டும் - முதல்வர். கருணாநிதி



குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகி விட்டது தமிழகம் - முன்னாள் முதல்வர் ஜெ.



ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!



- மைக்செட் முனுசாமி

பி.கு:- ஹாட் மச்சி ஹாட்டின் நூறாவது பதிவு. ரசிகர்கள் தயவு நாற்காலிகளின் மீது ஏறி நின்று நடனம் ஆட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

நடந்தவை, நடப்பவை!

நடந்து முடிந்த தேர்தலில், திமுக கூட்டணி வென்றுள்ளது...வாழ்த்துக்கள். ஒரு தேர்தலில் கொள்கைகள் என்ன, செய்ய இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் என்ன, கடந்த ஆட்சியில் நடந்த கோளாறுகள் என்ன, போன்றவற்றை வாதித்து, ஆட்சியைப் பிடிக்கும் காலம் போய்...என்னென்ன இலவசமாகக் கொடுக்கப்படும் என்று ஆசை காட்டி, குங்குமம் பாணியிலேயே இந்தத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சொல்லப்போனால், இது மிகப்பெரிய தவறான முன்னுதாரணத்தை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக, பாமர மக்களை நோக்கி வீசிய இந்த பிரம்மாஸ்திரங்கள், எதிர்பார்த்த வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளது. படித்தவர்களிடத்தில் இது பெரிய அளவில் எடுபடவில்லை என்பதை, தேர்தல் முடிவுகளே ஜம்மென்று காட்டிக்கொடுக்கிறது. (டி.வியும், அரிசியும் அவர்களைக் கவருமென்று எதிர்பார்க்கவும் முடியாது. கம்ப்யூட்டர் கவர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது).



சன் டிவியில் நேற்று நக்கீரன் கோபால் பேசும் போது, "மதுரையிலே ஒரு அம்மா கை சின்னத்தைப் பார்த்துட்டு, ஓட்டுப் போட மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. வெளிலே பையன் ஒருத்தன் பார்த்துக் கேட்டவுடனே, 'சூரியன்லே போட்டா தானே டிவி கெடைக்கும்னு சொன்னாங்க'னு சொல்லவும், அந்தப் பையன் சூரியனும், கையும் சேர்ந்து தான் போட்டி போடுது...போய்க் கை சின்னத்துலேயே போடுங்கன்னு சொல்லியிருக்கான். அந்த அளவுக்கு டிவி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு" என்று சொன்னார். அது எத்தகைய தாக்கம், யார் மீது ஏற்படுத்தியிருக்கிறது, என்பதையெல்லாம் இதை விட அழகாக சொல்ல முடியாது! அதாவது, அரசியல் மீதான ஆர்வமோ, தேர்தல் நடைமுறைகளோ, எதிர்கால நலன்களைப் பற்றியதொரு விழிப்புணர்வோ இல்லாத ஏழை மக்களை..இந்த டிவி அறிவிப்பும், அரிசி அறிவிப்பும் அடியோடு அசைத்துப் பார்த்திருக்கிறது. அதற்காக அந்த மக்களைக் குறை கூட முடியாது...அவர்களை அதே போன்றதொரு நிலையிலேயே ஆணி அடித்து வைத்திருக்கும் இரு கழக அரசியலைத் தான் குறை சொல்ல வேண்டும்.


முதல்வர். ஜெயலலிதாவின் பிரச்சார முறை, அணுகுமுறை போன்றவையும் இந்தத்
தோல்வியிலிருந்தாவது மாறித் தொலைக்க வேண்டும். கூட்டணித் தலைவர்களான வை.கோவுடனும், திருமாவுடனும் ஒரே மேடையில், ஒரு பொதுக்கூட்டம் கூட பேசவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை! அவர் வசித்துக் கொண்டிருக்கும் வானவீதியிலிருந்து இறங்கி வந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம், வீதியில் வரும் வேனிலிருந்தே இறங்கி பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றால் எப்படி? (இறங்கின சில இடங்களும், போட்டோகிராபர் சகிதமாக ஒரு போலித்தன்மை தெரிந்தது. இன்னும் மக்களோடு நெருங்கி வர வேண்டும், அந்த முயற்சியில் ஒரு உண்மை புலப்பட வேண்டும்). ஊர் ஊராக சென்று, புள்ளி விவரங்களைப் படிப்பதற்கு பெயர் பிரச்சாரமில்லை! ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சித் தலைவரான சோனியாவைத் திட்டுகிறேன் பேர்வழி என்று, பல படிகள் இறங்கிப் பேசியது போல...எதிர்கட்சியினரை வசை மழையில் நனைக்காமல் கண்ணியத்தைக் காத்ததற்கு ஒரு சபாஷ் சொல்லி வைக்கலாம். மற்றபடி, இது பத்திரிக்கைகள் கணித்தபடி 'மரண அடியோ', 'தர்ம அடியோ' இல்லை என்பதே அவருக்குப் பெரிய ஆறுதலாய் இருக்க வேண்டும். நாளையே காங்கிரசும், பா.ம.கவில் சிலரும் ஒத்துழைத்தால்....அரியணை ஏறவும், அல்லது ஒரு காங்கிரஸ் ஆட்சியோ அமையும் வாய்ப்பும் கூட இருக்கிறது என்ற உண்மையும் இந்தத் தேர்தல் முடிவுகளில் புதைந்திருப்பதைப் பலர் கவனிக்காமல் இல்லை! 96ல் இருந்த ஜெ.வுக்கும், 2001ல் பார்த்த ஜெ.வுக்கும் பல நல்ல வித்தியாசங்கள் ஆங்காங்கே தென்பட்டது. இனி இந்தத் தோல்வி மூலம், இன்னும் சில நல்ல மாற்றங்களும், பக்குவமும் அவருக்கு ஏற்பட்டால்....அவருக்கும், அவரது அரசியல் வாழ்விற்கும் நல்லது!


அதிமுகவோ, திமுகவோ...இவை இரண்டில் எது வென்றாலும், தோற்றாலும்,
அதற்கான காரணங்களை அட்டகாசமாக அடுக்கி வைக்க முடியும் என்ற உண்மையே, தமிழக அரசியலின் பலவீனம் தான். அதாவது காமராஜர் சொன்ன மட்டைகள், தமிழக அரசியலை இன்னும் குட்டையாகவே வைத்திருக்கிறது என்பது தான் கசப்பான நிதர்சனம். விஜய்காந்துக்கு விழுந்த ஓட்டுக்களில் பாதி, இந்த அரசியல் கலாச்சாரம் பிடிக்காதவர்களின் கோப வாக்குகள் தான். அதுவும் 'கூத்தாடி, ஒரு இரவு தங்க வைத்து விட்டு,சோறு போட்டு விட்டு அடுத்த நாள் அனுப்பி விட வேண்டும்' என்றெல்லாம் 'டாக்டர்' ராமதாஸ் நேரடியாக விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்தும், பல்லாயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் விஜய்காந்த் ஜெயித்திருக்கிறாரென்றால், வாக்களர்களின் கோப வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும். விஜய்காந்தின் வெற்றி பலரால் ஆர்வமாகக் கவனிக்கப்பட்டதும், இந்த வெற்றியானது சாதி அரசியலுக்கு சின்னதாய் ஒரு குட்டு (சம்மட்டி அடி என்றெல்லாம் சொல்லும் காலம் இன்னும் தமிழகத்தில் வரவில்லை!) வைத்திருப்பதும்...கடந்த தேர்தலின், சந்தோஷமான தருணங்களில் ஒன்று.


பா.ம.க, ம.தி.மு.க, வி.சி போன்றவை எல்லாம் இந்தத் தேர்தலில்
வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்களின் லட்சியங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் கொஞ்சமாவது
நடந்தேறியிருக்கிறது. மேற்கூறிய கட்சிகளில், பா.ம.கவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது.. அவர்களின் அடாவடி அரசியல் கொஞ்சம் இதனால் அடங்கினால் தமிழகத்திற்கு நல்லதே! குறிப்பாக நடிக, நடிகைகளை மிரட்டுவது, சினிமா தலைப்புகளில் தமிழ் பெயர் வேண்டும் என்று போராடுவது என்றெல்லாம் ஜல்லி அரசியல் நடத்துவதை விட வேண்டும். (ராமதாஸ் + திருமா) தமிழ் பாதுகாப்பு இயக்கமானது, சீரிய முறையில் தமிழைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பல வழிகள் இருக்கிறது. இவர்கள் நினைக்கும் சீர் திருத்தமானது, கல்விச்சாலையில் தொடங்கப்பட வேண்டுமேயொழிய, திரையரங்குகளில் அல்ல!


தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் விட்ட அறிக்கையில்,
'மாச்சர்யங்களை மறந்து எதிர்க்கட்சியானது அரசியல் நடத்த வரவேண்டும்' என்று வேண்டுகோள்
விடுத்திருக்கிறார். நேருக்கு நேர் பார்த்துக்கொண்டால், முகத்தைத் திருப்பிக்கொண்டு போகும் தலைவர்களின் நிலை மாற வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு, ஜெ.வும் ஒத்துழைத்து, கலைஞரும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். கடந்த கால சரித்திரத்தைப் பார்க்கும் போது, இரண்டு கட்சியினருமே அழகாகப் பேசி விட்டு, அடிதடியில் இறங்கும் வல்லமை படைத்தவர்கள். 'மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நீயே அந்த மாற்றமாக இரு' என்பது போல, வை.கோ வீடு தாக்கப்பட்டதற்கும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் முன்னிலையில் ஜூ.வி நிருபர் தாக்கப்பட்டதற்கும் கலைஞர் இப்போதே வன்மையாகக் கண்டித்து அறிக்கை விட்டு, அந்த மாற்றத்தை ஆரம்பித்து வைத்தாரேயானால் நன்றாக இருக்கும். ஜெயலலிதா பத்திரிக்கை நிருபர்களோடு நிறைய பேச முயற்சிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, கலைஞர் கொஞ்சம் பேச்சைக் குறைப்பதும் நல்லதாயிருக்கும். ஏனெனில் சில சமயங்களில், வார்த்தை ஜாலம், இலக்கிய நயமென்ற பெயரில் பல கருத்துக்களை சொல்லி விட்டு, அதை சமாளிப்பதற்கும், வாதம் செய்வதற்காக இன்னும் பல விஷயங்களை அடுக்குவதற்கும் நேரமும், சக்தியும் வீணடிக்கப்படுகிறது.



கலைஞருக்குக் கிடைத்திருப்பது ஒரு அரிய வாய்ப்பு. அதாவது எண்பத்து மூன்று வயதில், அரியணை ஏறுவது என்பது மக்கள் அளித்திருக்கும் மிகப் பெரிய பரிசு. அதை அவர் அழகாய் உபயோகப்படுத்தி, பல நல்ல விஷயங்கள் செய்வாரேயானால், மக்களின் ஞாபக சக்தியின் மேல் பாரம் போட்டு...பல புண்ணியங்களைத் தேடிக் கொள்ளலாம். அதாவது அவரின் கடந்த காலத் தவறுகள் வெகு சுலபமாய் மறக்கவும், மன்னிக்கப்படவும் கூடுமென்று கூறுகிறேன். ஆனால், அவருக்கு முன்னால் ஆட்சி ஒரு சவால் என்றால், அவர் அளித்த வாக்குறுதிகள் மிகப்பெரியதொரு சவால். 'அண்ணா போல மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்று வாய் ஜாலங்களில் வர்ணஜாலம் காட்டி விட்டுத் தப்பிக்க முடியாது. மக்கள் இப்போது மிகத் தெளிவாக இருக்கிறார்கள். டி.வி போன்ற குறுகியகால சந்தோஷங்களை நிறைவேற்றுவது என்பது அவரே தேடிக்கொண்டதொரு சவால் என்றால், தமிழகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி, பல முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டியது அவர் கடமை என்றும் சொல்லலாம்.


இவை எல்லாவற்றையும் விட, கலைஞர் ஒரு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ பதவியில் இருந்து விட்டு, இளைஞரான ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து விலகுவது அவரது கட்சிக்கும், தமிழகத்திற்கும் நல்லது. உணர்ச்சி வசப்படாமல், கொஞ்சம் நிதானமாக அலசுவோம். ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது என்பது ஆண்டாண்டு காலமாய் திமுகவில் நடந்தே வருகிறது. என்ன தான், கலைஞர் இல்லை, இல்லை என்று இரண்டு முறை சொன்னாலும், மூன்றாவது முறையாக, 'ஸ்டாலினுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கிறது' என்று அவரே பொறுக்க முடியாமல் சொல்லி விடுவார். ஸ்டாலினும் மேயராக இருந்த போது, சுறுசுறுப்பாக செயல்பட்டு...நல்ல பெயர் வாங்கினாரென்பதும் மறுக்க முடியாது! விஜய்காந்த் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் இந்த நிலையில், ஸ்டாலினால் தான் அதை எதிர்கொள்ள முடியும்.எல்லாவற்றையும் விட, ஸ்டாலினிடம் கலைஞர் போல் வசீகரமான பேச்சுக்கலை எல்லாம் இல்லை. ஆனால், அவரிடம் நிர்வாகத் திறன் இருக்கிறது. எனவே, இது போன்றதொரு சூழ்நிலையில், முதல்வராகக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அவர் நல்ல பெயர் வாங்கினாலொழிய, வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை! நிர்வாகத்தில் சிறந்து விளங்கினால், வசீகரமான பேச்செல்லாம் தேவையும் இல்லை. சொல்லப்போனால், பேச்சுக்காக ஓட்டுப் போடும் காலமெல்லாம் மலையேறி விட்டது என்பதும் நிஜம். பேச்சுக்கலை வசீகரத்தின் ஒரு பகுதியே ஒழிய, வாக்குகளுக்கு முழுமுதற்காரணமாய் இனி இருக்க முடியாது. ஸ்டாலினால் நிர்வாகத் திறனால் மட்டுமே, அந்த வசீகரத்தை உருவாக்கிக்கொள முடியும் என்பது எனது கருத்து.


இது எல்லாவற்றையும் விட, திமுகவின் சிண்டு இப்போது காங்கிரஸின் கையில் என்பது தமிழக மக்களின் வாக்குகளினால் கிடைத்திருக்கும் ஒரு பெரிய விஷயம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற எக்ஸ்டிரிமிஸ்ட் காங்கிரஸ்காரர்களை சமாளித்து, திமுக அரசாங்கம் நடத்த வேண்டுமென்பது தமிழகத்திற்கு நன்மை பயக்கும். இப்போது எல்லாரும் புன்னகை, கை குலுக்கல் என்று மகிழ்ச்சியோடு இருந்தாலும், நாளடைவில் இந்த இரு கட்சியினரும் மாறுபடும் சூழ்நிலைகளும், சங்கதிகளும் நடக்க பல வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் காங்கிரஸ்காரர்கள் இந்த தமிழ், கற்பு போன்ற விஷயங்களை வைத்து அராஜகம் செய்ய விட மாட்டார்கள் என்பது அவர்களின் மேல் இருக்கும் மிகச்சிறியதொரு நம்பிக்கை. ஆனால், நாரோடு சேர்ந்த பூவும், நாறிப்போகாமல் இருக்க வேண்டும் என்பது பிரார்த்தனைகளில் ஒன்று.



இந்தியாவிலேயே தமிழக வாக்காளர்கள் போல், ஒரு அக்மார்க் அசத்தல்காரர்கள் யாரும் கிடையாது என்பது இந்தத் தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை, ஆனால் மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும்...அதே சமயம், அந்த மாற்றமானதும், ஒரு கிடுக்கிப்பிடியோடு இருக்க வேண்டும், ஜாதி அரசியல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற பல உண்மைகளை, சர்வசாதாரணமாக பெரும்பான்மையான பொதுமக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இதெல்லாம், எப்படி அழகாக ஒவ்வொரு முறையும் தமிழகத் தேர்தல் முடிவுகளில் அழகாய் பிரதிபலிக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான சதவிகிதமும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. அடுத்த தேர்தலில், இது போன்ற இலவச அறிவிப்புகளையும், மக்கள் புறக்கணித்தார்களேயானால் நன்றாக இருக்கும். கடந்த காலங்களை வைத்துப் பார்க்கும் போது,அந்தக் காலமும் தமிழகத்தில் வரத்தான் போகிறது என்பதில் நம்பிக்கை நிறையவே இருக்கிறது.



ஆக மொத்தம், 'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று நம்பி, புதிய அரசுக்குப் பூக்களைக் கொடுப்போம்.



- மைக்செட் முனுசாமி

பி.கு:- எலெக்ஷன் டயத்துலே, நம்ம ஹாட் மச்சி ஹாட் மச்சிக்கு நீங்கள்லாம் படையெடுத்து வந்து அசத்திப்புட்டீங்க மக்கா...நெம்ப சந்தோஷம்! 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை' அப்படீங்கறா மாதிரி, யார் சொன்னா என்ன, சொல்லாட்டி என்ன...புள்ளி விவரங்கள் ஒங்களோட ஆதரவை சோக்காக் காட்டிக் கொடுக்குதே! சொல்லப்போனா ஹாட் மச்சி ஹாட் மட்டுமில்லை... இட்லி வடை, சாம்பார் மாபியான்னு, இந்த எலெக்ஷன்லே எல்லா பிளாகுமே கலக்கிப்போட்டுடுச்சு! அப்பப்போ வந்து கமெண்ட் போட்டு, அங்கங்கே எங்களைப் பத்திப் பேசி, லிங்க் கொடுத்த எல்லாருக்கும் 'சலாம் நமஸ்தே!' - வர்ட்டா அண்ணாத்தே! Did you listen this HMH song?

The Vaitheegan Show [#11]

DMK will form the next Tamil Nadu government.Congress extended their “unconditional” support to the DMK ministry. DMK managed to squeeze in and win the election, and to be fair it was not a complete wash out for AIADMK. AIADMK has won many seats in Chennai, which was often portrayed as DMK’s coatU tie nu…. City people did not buy Dmk’s manifesto, while rural folks seems to have fallen for Free TV and Gas stoves and other generous schemes that will nearly wipeout even Kuberan’s Gajana. At this time we should remember that CFO [Chief Financial Officer] of India has approved and stated this is possible. [????????]

Congress has won 30+ seats, which is a blessing in disguise for Tamil Nadu. Tamil Nadu after a long time has some common representation in Delhi and Tamilnadu. Congress MLAs generally are known for weak back bone configurations. We need to wait and see what they do for the state. One good thing is DMK cannot Yap about Delhi talking to Gopalapuram directly. DMK needs the “unconditional support”. Using its MP strength in Delhi, DMK & their Allies cannot black mail the central government. To keep both the parties in check there is an invisible political gear that needs 24/7 lubrication.

Media savvy Mr., Dayanidhi Maran has attributed this win to their Election Manifesto. Hope his grand father and DMK tondargal are not offended by this statement. Speaking to the Rediff.com, he said funds for Rice subsidy and Free TV Schemes will be yanked off from various liquor contractors [Eg: Midas] affiliated to AIADMK. However Vaitheegan is waiting to see who gets the Free TV and free cable connection supply contract. Our reporter “மோப்பம் மன்னாறு" reports that a company called “Sun-Light Furniture” that makes TV Stands, Plastic Covers was floated yesterday by few new entrepreneurs like ஏப்பம் ஏகாம்பரம்,swaஹ சிவச்சாமி from Gopalapuram area. – [TV இருந்தா Stand, cover எல்லாம் வேணாமா.?]
DMK & Co should remember – at this moment of time, every little Blogger, self made critics , senior , junior, part time, full time press reporters, general public will be focusing a lot on execution of DMK manifesto. Like in the past DMK cannot get away this time for false promises.

Stalin gets Ministerial berth. Others in the list include K Anbazhagan, N Veerasami, Ko Si Mani, Veerapandi Arumugham, Duraimurugan, P T R Palanivel Rajan, Dr K Ponmudi, K N Nehru, M R K Pannerselvam, I Periasami, N Sureshrajan, Parithi Ilamvazhuthi, A V Velu, Suba Thangavelan, K K S S R Ramachandran, T M Anbarasan, K R Periakaruppan, N K K P Raja, Thangam Thennarasu, N Selvaraj, Vellakoil Saminathan, K P P Sami, U Mathivanan and K Ramachandran. Three women - Dr Poongothai, Geetha Jeevan and Thamizharasi would also be sworn in as Ministers. This Ministry, the largest the state ever had, will also have two Muslim representatives in S N M Ubayathullah and T P M Moideen Khan. [Hope we don’t find Tamil Nadu on EBAY]


Vaiko: AIADMK alliance lost the polls by a narrow margin in many constituencies and hence the results cannot be construed as a positive vote for the DMK-led alliance, MDMK chief Vaiko said on Thursday. Yes “there is No Sand on my moustache” He also said “For the first time in independent India, Tamil Nadu Assembly will face a strong Opposition,” which is true. கொசுரு: Our reporters tried hard to get hold of Sarath Kumar to get his opinion. However they could not trace his whereabouts. He vanished in his 50 thousand dollar BMW SUV.

“UP” [Yours] – [ஆப்பு in Tamil] Captain’s next movie; though a good start for a new party, captain has no vice captains yet. Good news: Vijaykanth has won and his party has preformed some what better than PMK - Dr Ramdoss and Co. Tamilnadu police has registered a homicide case on PMK leaders. PMK is busy seeking central's help. DoctorG [இது ஹிந்தி ஜி சாமி] has said that “Tamil Nadu has been saved”, - seeing PMK loose considerable chunk of votes. - YES YES Absolutely "Good for TamilNadu"

HIT MACHI HIT...



பார்த்ததும் படித்ததும்

"இந்த தேர்தலில் மக்களிடம் உணர்வுபூர்வமாக தன் திட்டங்களை எடுத்துச் சென்றவர் கலைஞர். அதற்கு அறிவுபூர்வமாக வடிவம் கொடுத்தவர் சிதம்பரம்." - சன் டிவியில் தா.பாண்டியன்.

ஐயா, உங்க கூட்டணி ஜெயிச்ச நேரத்தில போயி இந்த மாதிரி கலைஞருக்கு அறிவில்லை, சிதம்பரத்துக்கு தான் இருக்குன்னு சூசகமா எதுக்கு பாலிடிக்ஸ¤ பண்ணறீங்க :)

"தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?" - தினத்தந்தியில் இன்னும் காணப்படும் ஹெட்லைன்ஸ்.

நல்ல வேளை, "வை.கோ இன்று அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தார்"ன்னு போடாம updatedஆ இருக்கீங்களே.

"இந்த வெற்றி கலைஞரின் பழுத்த அரசியல் அனுபவத்துக்கு கிடைத்துள்ள வெற்றி" - ரஜினிகாந்த்.

இமயமலைக்கு போகாம இன்னும் இங்கே தான் சுத்திட்டிருக்கீங்களா? இந்த தேர்தல், அரசியல் இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? போங்க, போங்க, சிவாஜி ஷ¤ட்டிங்ல 18 வயசு பொண்ணோட டூயட் பாடிட்டு, "உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்"னு பஞ்ச் டயலாக் அடிங்க, போங்க. வீணா இப்படி அறிக்கை எல்லாம் விட்டு உங்களை நீங்களே பெரிய ஆளா நெனைச்சுக்காதீங்க.

"மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். அதிமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." - ஜெயலலிதா.

அட, தேர்தல் வாக்குறுதிகளை எடுத்தா மாதிரி இதையும் கலைஞர் கிட்டே இருந்து எடுத்திருக்க வேண்டியது தானே. அப்போ தான் மக்களை சொரணை கெட்ட ஜென்மங்கள்ன்னு எல்லா திட்டியிருக்கலாம்!

Important headlines from Dinamalar

On the scrolling newsbar, the first headline reads:

கண்டாங்கி பட்டு உடுத்தி கள்ளழகர் புறப்பட்டார்; சனிக்கிழமை காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்









"தலைக்குமேலே வெள்ளம் போனப்புறம் அழகர் எதிலே இறங்கினால் என்ன" அப்படின்னு தினமலர் நினைக்குது போல..

ஒரு (N.R.I) அரசியல் பார்வையாளனின் புலம்பல்கள்!

வெளிநாட்டுலே ஒக்காந்துக்கிட்டு இருக்கறதாலே, ஓட்டு போடும் பாக்கியம் தான் இல்லை....இந்தத் தேர்தல் முடிவுகளையாவது, அப்பப்போ பார்த்து 'நான் ஒரு மரத்தமிழன்'னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டலாம்னு பார்த்தா....ஒக்கமக்காஆஆஆ, பாயிண்ட் பாயிண்ட்டா பொலம்பறேன் பாருங்க!

(1) தினமலர் 'The results will be updated hourly'னு சொல்லி, 'Error in line 68'னு மொத ஹவர் அப்டேட் பண்ணாங்க. சரி, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம்னு பார்த்தா, 'Error in line 58'னு சொன்னாங்க. இவங்க இப்படியா ஒவ்வொரு லைனையும் சரி பண்ணிக்கிட்டு வர்றதுக்குள்ளே, 'கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி'னு மத்த பேப்பர்லே அப்டேட் பண்ணிட்டாங்க!

(2) நேத்து மட்டும் இந்த விஜய்காந்த் எத்தனை தடவை தோத்து தோத்து, ஒரு வழியா ஜெயிச்சாரு
தெரியுமா? 'தினமணிலே முன்னிலைனு போட்டுருக்கே.... பரவாயில்லை, கலைஞர் பண்ண டி.வி புரட்சி நடுவுலேயும் புரட்சிக் கலைஞர் பொழச்சுப்பாரு போல இருக்கே'னு நெனச்சா,
வேற ஒரு வெப்சைட்டுலே 'விஜய்காந்த் தோல்வி' அப்டீனு கொட்டை எழுத்துலே போட்டு இருப்பாங்க! எதுடா உண்மைனு புரிஞ்சு ஒரு நெலமைக்கு வர்றதுக்குள்ளே, 'எஸ்.வி.சேகர் தோல்வி' அப்டீனு வேற ஏதாவது கண்ணுலே பட்டு தொலைக்கும். இதுக்கு நடுவுலே 'அன்பழகன் தடுமாற்றம்' அப்டீனு ஒரு நியூஸ் வரும். அப்புறம் அது தி.நகர் பழக்கடை ஜெ.அன்பழகனா, இல்லை சொம்புக்கடை நடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்பழகனான்னு ஒரு கன்ப்யூஷன்!

(3) இதுலே இந்த சன் டி.வியும் ஜெயா டிவியும் பண்ண காமெடியை எங்கேனு சொல்றது. சன் டி.வி
பாபா கவுண்டிங் ஒன்.டூ.த்ரீ மாதிரி, எண்ண ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்துலே, கலைஞர்
கோபாலபுரத்துலேந்து கோட்டைக்குப் போக வேன்லே ஒக்காந்த ரேஞ்சுக்கு சொல்லி....'இந்த சர்வாதிகார ஆட்சி சரிஞ்சு போனதுக்கு என்ன காரணம்னு நெனைக்குறீங்க' அப்டீனு சிரிச்சுக்கிட்டே, ஒரு கையாலே வெடி வெடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. (இன்னைக்குக் காலைல பார்த்த காமெடி இது!) இவங்க இப்படீன்னா, ஜெயா டிவி நெலமை பரிதாபம்!
தோத்துட்டு வர்றாங்கன்னு தெரியுது, ஆனா அவங்களுக்கு அதை சொல்லவும் தர்மசங்கடமா இருக்கு...ரபி பெர்னார்ட் கொடுத்த காசுக்கு, எந்தளவுக்கு நாசுக்கா விஷயங்களை சொல்றதுன்னு தவியா தவிச்சுட்டாரு, அய்யகோ பரிதாபம்! பயங்கர காமெடி என்னன்னா, 'அதிகாரப்பூர்வமான தகவல்களின் படி, அதிமுக 91 இடங்களும்...திமுக 40 இடங்களும் பெற்றிருக்கிறது!' அப்டீனு சர்வசாதாரணமா அணுகுண்டு வீசுனது தான். 'கலைஞர் மூவாயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்துலே தான் ஜெயிச்சுருக்காரு, ஆனா ஆண்டிப்பட்டிலே அம்மா 21000 வாக்கு வித்தியாசத்துலே ஜெயிச்சுருக்காங்க!' அப்டீங்கறதை பிரெஞ்ச் ப்ரைஸ் சாப்டும் போது, கெட்ச் அப்லே அப்பப்போ தொட்டுக்கற கணக்கா சொல்லிக்கிட்டே இருந்தாங்க! இந்தக் கொடுமைகளை கொட்ட கொட்ட கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்து அலுத்துப் போனதால்...இந்தியாவுக்கு
போன் செய்து கேட்டால், உரையாடல் இப்படி தான் இருந்தது.
நான் :- அப்பா, லேட்டஸ்ட் நியூஸ் என்ன?
அப்பா :- இப்போ தான் பேப்பர் வந்துது, காப்பி சாப்புட்டு முடிச்சேன்.
நான் :- நான் எலெக்ஷன் நியூஸ் கேட்டேன்ப்பா!
அப்பா :- ஓ...ஜெயா டிவி படி, அதிமுக லீடிங். சன் டிவி படி திமுக ஜெயிச்சு
முடிச்சாச்சு. பொதிகை படி ஒரே வழவழக்கொழகொழா!
நான் :- நீ எந்த டிவி பாக்குறே?
அப்பா :- நான் டி.வியை ஆ·ப் பண்ணி ஆ·ப் அன் அவர் ஆச்சு!
நான் :- சரி, நான் இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு கால் பண்றேன்.
('பெத்தெடுத்த' அம்மா (சே...இந்த ப்ரிபிக்ஸ் தேவைப்படுது பாருங்க, இங்கே!) ஏதோ
சொல்வது கேட்கிறது)
அப்பா :- விஜய்காந்த் தோத்துட்டாராம்.
நான் :- இப்போ தானேப்பா லீடிங்னு பார்த்தேன்!
(மீண்டும் அம்மா ஏதோ சொல்கிறார்)
அப்பா:- டேய்...விஜய்காந்த் ஜெயிச்சுட்டாராம்.
நான் :- அது கிழிஞ்சுது போ.....நான் இங்கேயே பாத்துக்கறேன்!

இன்னும் நெறைய இருக்கு....அப்பால வரேன்!

- மைக்செட் முனுசாமி

A look at the results

The full set of complete results can be found here.
DMK+ 163
ADMK+ 69
DMDK 1 (Vijaykanth)
Independent 1 (Ramachandran from Thalli).

From a cursory glance, this is what I find:

1. However ADMK and their cronies try to spin this, this is a big vote against Jayalalitha and her government.

2. DMK's vote share has gone down from ~31% to 26.5%. I guess this is mainly because of the fewer seats that they contested in.

3. The biggest gainer in terms of vote %age is Congress.

4. Stalin won by just 2400 votes.

5. S.R.Balasubramaniam (Cong) lost.

6. After wild predictions, DMDK has won 8.33% of the votes. They should be more than satisfied with that performance. Now, we can see Gaptun reel out his statistics in the assembly.

7. MDMK won 6. If they had remained in DMK fold, I don't think they would have won many more!

8. For all the hoopla, Karthik's Forward Bloc won 0.31% of the votes. Now Karthik can go back to Ooty. Hope he paid off his debts.

We had lots of fun doing the live blogging. The huge number of hits to the site was also encouraging. Thanks!

Hot Hot Cartoons






Cartoons by Vaitheegan.

Election Results Live Blog - Page III



DMK set to form a coalition government!

This is the open thread for the election results. We will be blogging live through the day, as results keep coming in.

Please post your comments/opinions/any updates/Links/results in the comments section. I will keep updating this post frequently with the latest results. The times are in Indian Standard Time.

Update 12:30 pm: Kitkat has been posting the results in each constituency as they come, in the comments section below.

Update 12:15 pm: The results are out in full flow. NDTV has some serious issues with its coverage. It is claiming that Vijaykanth lost, but all other sites are marking him as the winner.
DMK has won the elections. Let's see what happens next.

Update 11:55 am: IBN TV says that Jayalalitha is holed up in her Poes Garden home and is refusing to come out or meet with anyone. Only one person, some Jothi, has gone in and is allowed to meet JJ.
The three cartoons that you see in this post and the previous one are exclusively for HMH by Vaitheegan.

Update 11:45 am: DMK - 161, ADMK - 71 (NDTV).
Baddar Sayeed (ADMK) has won in Triplicane. ADMK has managed to get quite a few seats in Madras, traditionally a DMK stronghold.
Vasanth & Co Vasanth has won.
G.K.Mani(PMK) has won.
Senkottaiyan(ADMK) has won.
Karunanidhi has won. Looks like this time, he will have to come to the Assembly :)
K.N.Nehru has won.
Nanmaran and P.T.R. have won in Madurai.
NDTV has corrected itself and is saying that Anbazhagan won from Harbor.

Update 11:30 am: Rediff seems to be ahead of the curve. It is projecting 235 leads/results out of a maximum of 234 :)
Jayalalitha declared won. ADMK has won in Saidapet. Vijayakanth, Stalin, PTR have won.
More results are here.
IBN TV has not updated its numbers, but is concentrating on the West Bengal elections instead.
Dinamalar has DMK - 157, ADMK - 74, DMDK - 1, Others - 2.

Update 11:05 am: NDTV says that Vijayakanth is leading in Viruthachalam, and Anbazhagan lost!!!! SunTV says he won, though. Strange Machi Strange!

Update 10:55 am: O.Panneerselvam, D.Jayakumar, Durai Murugan have won.
Alankulam DMK- Poongodhai
Mannagrgudi - CPI - SIvapunniyam
Mudhukalathur - DMK- Murugavel
Seranmadhevi - Congress
Thiruvaarur - DMK- Madhivanan
Madhurandhagam- Cong- Gayathri Devi
Morappur- DMK-Mulaivendhan
Arcot- PMK-Ilavazagan
Palayankottai- DMK-Moidheen Khan
all won.

Update 10:50 am:
DMK party - 91
ADMK party - 70
MDMK - 8
PMK - 18
VCK - 2
Cong - 29
CPI(M) - 7
CPI - 5
This is from IBN TV.
Thamizmanam's supposedly live election page is still showing 69 to DMK+, 34 to ADMK+.

Update 10:40 am: Valarmathi trailing to BJP's H.Raja.
ஜெயா டிவிலே 'பள்ளம் தோண்டி' ரபி லைவா பேசறாரு! But, he is just repeating the positions where ADMK is leading.

Update 10:25 am: NDTV says Anbazhagan is trailing!

Election Results Live Blog - Page II



DMK set to form a coalition government!

This is the open thread for the election results. We will be blogging live through the day, as results keep coming in.

Please post your comments/opinions/any updates/Links/results in the comments section. I will keep updating this post frequently with the latest results. The times are in Indian Standard Time.


Update 10:25 am: NDTV says Anbazhagan is trailing!

Update 10:20 am: Baddar Sayeed (ADMK), Vasanth Kumar (Cong), Peter Alphonse, Durai Murugan, PTR Pazhanivel Rajan, D.Jayakumar, Paruthi Ilamvazhuthi, Ponmudi, G.K.Mani, S.R.Balasubramaniam - all are leading - NDTV.
So, it looks like in Chennai, a traditional DMK stronghold, Baddar Sayeed and S.Ve.Shekar are leading from ADMK.
IdlyVadai points out that Veerappan's wife is trailing. Yabbaa!

Update 10:10 am: DMK 136, ADMK 84.
Looks like Karthik's All India Forward Bloc is not leading in any constituency.
Mikeset sez: இந்த எலெக்ஷன்லேந்து தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம், நடுநிலைமையான மீடியா எவ்வளவு முக்கியங்கறது? ஒவ்வொருத்தனும் அவன் கட்சி சார்பாவே எலெக்ஷன் ரிசல்ட் கூட சொல்றான். சன் டிவி, ஜெயா டிவி எல்லா கருமாந்திரமும் அதே மாதிரியே தான் இருக்கு!
Vaitheegan points out that the "scientific" free poll in our site is also changing. HmH poll mArudupa..mArudhu...

Update 10:05 am: DMK 134, ADMK 82 - IBN.

Update 10:00 am: PMK seems to be a loser in this election.
Mikeset says: அமைதி அமைதி - உண்மையான நெலவரம் பார்க்க பார்க்க, கலவரமா இருக்குங்க! இந்த சன் டிவி, லொட்டு லொஸ்கு (ஏன் ...இட்லி வடையையும் சேர்த்துக்குங்க!)...இதெல்லாம் பார்த்து, உதய சூரியன் மலை மேல தெரியுதுன்னு நெனச்சா, இரட்டை இலையும் ஒண்ணும் அவ்ளவு மோசம் போயிடலை போல இருக்கே. அம்மாவும், (சோனியா) அன்னையும் ஒரு வேளை கை கோர்த்தாங்கன்னா....அதிமுக ஆட்சிக்கு ஒரு வாய்ப்பு இருக்கு போல! கூட்டி கழிச்சு பாருங்க...கணக்கு சரியா வரும்!

Update 9:55 am: Viduthalai SiruththaigaL leading in 2.
DMK party - 74
ADMK party - 64
PMK - 9
MDMK - 7
Cong - 24
CPI - 5
CPI(M) - 7
- IBN TV.

Update 9:50 am:
DMK party - 75
ADMK party - 62
Cong I - 23
CPI - 5
CPM - 7
DMDK - 2
MDMK - 7
- IBN TV.
Winners:
Ilayangudi- DMK-Kannappan
Harbour- DMK-Anbazagan
Madurai south- Marxist Nanmaran

Update 9:45 am: MDMK is leading in 5. All set to make their Assembly debut!

Update 9:40 am: According to NDTV, DMK 126, ADMK 76.

Update 9:35 am: According to Jaya TV, ADMK 93, DMK 37, Others 2 :)))))
Sun TV - DMK 158, ADMK 58, Others 2.
IBN TV - DMK 108, ADMK 68, Others 5. Cong 15 (included in 108).
S.Ve.Shekhar, Arcot Veerasamy, Karunanidhi, Anbhazhagan are all leading. DMK by itself is leading in only 69 seats. So, note that the 108 number includes the allies.


Update 9:25 am: DMK 103, ADMK 64 - IBN. Is the tide turning?
Looks like Sun TV and Jaya TV are letting their biases show in their coverage. Jaya TV is only showing results on where ADMK is leading. Sun TV too is also fudging the results, apparently.
FlashNews is that Napoleon is trailing to S.Ve.Shekhar!

Update 9:15 am: DMK 157, ADMK 54 - IBN TV.
Napoleon, Stalin, Karunanidhi, Jayalalitha, Vijayakanth are all leading.
The Election Commission site is inaccessible as expected (wonder which IT firm was incharge of the site?).

Election Results Live Blog

This is the open thread for the election results. We will be blogging live through the day, as results keep coming in.

Please post your comments/opinions/any updates/Links/results in the comments section. I will keep updating this post frequently with the latest results.

Links:
Election Commission site
Chennai Online
CNN-IBN
IdlyVadai

Update 9:10 am: DMK 147, ADMK 55 - latest in IBN TV.
Leading losers of ADMK: Sengottaiyan, Panneerselvam, Miller.
"porapoka partha..AIDMK will not even get a child seat in their car" - Vaitheegan.

Update 9:05 am: DMK 105, ADMK 56.
This is direct from Sun TV. For some reason, Idly Vadai seems to be ahead of the curve (133-48) and inconsistent with the rest. Wonder where he gets his results from.
Meanwhile, Jaya TV is saying ADMK 96, DMK 33!!
Dinamalar, as usual is giving an ASP error.

Update 8:55 am: Sun TV says DMK 97, ADMK 47.
Kitkat says: Napoleon leads in Mylapore.
Vaitheegan is following CNN-IBN live.
Mikeset says: மைலாப்பூர்ல நெப்போலியன் லீடிங்கா?! இனிமே எஸ்.வி.சேகர் ஒவ்வொரு டிராமாவுலேயும் நெப்போலியனை அமெரிக்கா நாராயணனை விட நாலு வோட்டு அதிகமா வாங்கினவன்னு பீத்திக்க ஆரம்பிச்சுடுவாரே, அடடா! சரி...நம்ம ராஜேந்தர் மயிலாடுதுறைலே என்ன ஆனாரு? என்னை பீகார்லே உட்டா ஜெயிச்சுடுவேன், ஆந்திராவுலே வுட்டா அள்ளிடுவேன், கேரளாவிலே விட்டா கெளப்பிடுவேன்னுலாம் சொல்லிக்கிட்டு இருந்தாரே. மயிலாடுதுறையிலே மானம், மரியாதை இருக்கா...இல்லை அம்பேலா?!

Update 8:45 am: DMK 100, ADMK 33.

"Jaya TV says there is a ADMK wave..they lead in 42 , DMK 11" says an Anonymous. idhu thaandaa comedy!

"Just spoke to few company directors in Taiwan, they seemed upbeat. They have about a million open box tv in their godown [returned by Walmart]" - Vaitheegan.

Update 8:30 am: DMK 64, ADMK 13.
மைக்செட் முனுசாமி :- ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க, உடன் பிறப்புகள் ஆட்டம் போட வேண்டிய நேரமிது. இதே ரீதியிலே போச்சுன்னா.....மஞ்சள், பச்சையை முந்தி மந்திரிசபை அமைச்சுடும்டோ ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! எலெக்ஷன் கமிஷன் வெப்சைட் லோட் ஆகுறதுக்குள்ளே, கலைஞர் பதவிப்பிரமாணம் எடுத்து முடிச்சுடுவாரு போல :)
Kanimozhi Karunanidhi just spoke on CNN-IBN.

Update 8:15 am: DMK Leading 34, ADMK Leading in 7. Thiruvannaamalai, DMK Pitchandi won by 10100 votes .

இப்படி ஆயிடுழ்ச்சே!



(கார்த்திக் மனசுக்குள்..)

ஹூம்ம்ம்...ஓட்டுப் போடறதுழ்க்காவது மொதழ்ல்லே வழ்ந்து அசழ்த்திடணும்னு நெனச்சா, இப்படி
ஆயிடுழ்ச்சே!

- மைக்செட் முனுசாமி

We are ready - Are you?!

நாளைக்குத் தெரிஞ்சுடும்...கலர் டிவி எந்த அளவுக்குக் க்ளீயரா தெரியுது,கம்ப்யூட்டர் எந்த அளவுக்கு ஃபாஸ்டா லோட் ஆவுது,சீமைப்பசு எவ்ளோ லிட்டர் பால் குடுக்குதுன்னு!

திமுக ஜெயிச்சுதுன்னா, ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்லை. ஏன்னா..எல்லா பத்திரிக்கையும் வரிஞ்சு கட்டி அல்ரெடி ஆரத்தி எடுத்தாச்சு. அதிமுக ஜெயிச்சுதுன்னா, இந்த தமிழ்முரசு, தினகரன் பவுசெல்லாம் ஈன்னு இளிக்கிறப்போ, ஜூ.வியோட லட்சணமும் தெரிஞ்சுடும். விஜய்காந்த் கட்சி ஜெயிச்சுடுச்சுனா....சரி சரி, உடுங்க...நம்ம என்ன ஷங்கர் டைரக்ஷன்ல படமா எடுக்கறோம்!


நாளைக்கு அப்பப்போ ஹாட் மச்சி ஹாட்டுக்கு வாங்க, நெறைய மேட்டர் பேச வேண்டி இருக்கு ஒங்களோட! ரிசல்ட் வர வர, இங்கே நம்ம 'ஷ்ஷ்ஷ்ஷ்டைல்' வேலை நெறைய நடக்கும்.ஓகே?!



- ஹாட் மச்சி ஹாட் பொதுக்குழு (ச்சும்மா பிலிமு!)

P.S:- This is republished since blogger ate the previous version (May be because of the long title)

Election Campaign Recap - II : Unasked Questions

I had written in the earlier section that the agenda for this election was set more by the politicians than by public opinion. This resulted in several important questions that went unasked and unanswered. These were the questions that needed to be asked, but unfortunately didn't get any time in this campaign.

1. The Srilankan Conundrum: With the escalating power struggle in Sri Lanka, what is going to happen in Tamilnadu? Will TN become a free passage for arms and supplies to the LTTE if DMK comes to power? What are the parties' position on refugees? What are the parties' position on LTTE? Did people forget the Padmanabha/Rajiv Gandhi killings?

2. The Cauvery issue: What will the parties do on the Cauvery issue (other than funding the actors all the way to Neyveli to cut off the power to Karnataka)? What was DMK's position on how the ADMK government handled the Cauvery issue? What would the DMK have done differently?

3. Past performance of the Karunanidhi Government: Surely, it was not all land of milk and honey when DMK was in power. Still, the performance of Karunanidhi governments, especially the one in the 90s went unquestioned. Karunanidhi had a field day talking about the ADMK manifesto and how much of it the ADMK government actually fulfilled. But, how about DMK? In the '96 elections, how many items that Karunanidhi promised did he actually deliver? As far as I saw, the only reference to past DMK governments was to the "roobaikku 3 padi arisi" promise some 35 years ago.

4. Government workers: I think the bulk of the people who are NOT government workers, would have supported the measures Jayalalitha took, to make the workers more efficient and accountable. The government employees got a jolt of their lives. Apparently, the complacency in the govt offices was reduced a lot due to JJ's actions. If this was the case, why was there not a call to do more of this? To make the govt more accountable and reduce the bureaucracy?

5. TV Campaigns: There is a limit set by the Election Commission on how much each candidate can spend. What about the propaganda on the rival television channels? Who pays for all that? How is it accounted? Does this kind of "soft contributions" go unaudited? The amount of political campaigning done in Sun and Jaya TV are unbelievable. A tamil new year kaviyarangam was a call to vote for DMK. Even in the Sun TV news, the "sonnadhu yaar" segment featured pro-DMK quotes!

6. Who killed Tha.Krishnan? What will the position of Communists/Congress either side of the border be on the Mullah Periyar Dam? How many people were actually arrested during the time the "Anti-forced conversions law" was in effect? Was that law misused, did it stop communal clashes? How was the ADMK government's performance on clamping down on the safety of schools after the Kumbakonam fire accident?

The Hindu-CNN-IBN Exit Poll

From The Hindu:

The Hindu-CNN-IBN Exit Poll, conducted by the Centre for the Study of Developing Societies, has found that the DMK-led alliance has established a clear lead of 10 percentage points over the AIADMK-led alliance in terms of vote share. The DMK-led alliance is expected to secure around 45 per cent of the vote, as against 35 per cent for the AIADMK. This gap is sufficient to give the alliance a comfortable majority of anything between 157 and 167 seats in the 234-member Assembly. However, it is not enough to give the dominant partner, the DMK, a majority on its own. If this proves correct, it will be the first time that no single party has a majority on its own. Tamil Nadu looks set to have its first coalition government.

HMH - Election Special Gana Song!

தமிழ்நாட்டையே கலக்கும் ஒரு கானா பாட்டு - பல அரசியல்வாதிகளின் வயிற்றைக் கலக்கும் எலெக்ஷன். இது இரண்டையும் எங்க பாணியிலே கலந்து, ஒரு ரவுசு பண்ணியிருக்கோம்.... கேட்டுட்டு எப்புடியிருக்குன்னு சொல்லுங்க!

பாடல் ஆக்கம், பாடியது, குரல்கள் - அருண் வைத்யநாதன்
ரீமிக்ஸ் & kalakkal எஃபெக்ட்ஸ் - வைதீகன்

பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும் [Click here]!

நன்றி :- கானா உலகநாதனின் 'வாளை மீனுக்கும்'

Election Campaign Recap - I : Three Strategies That Worked

The election campaign has officially ended; People are ready to vote. Now it is a good time to recap the undercurrents of this election campaign.

Usually, in a campaign, the bulk of the agenda is set by the people. As we go through the campaign, the media feels the pulse of the people and comes up with the issues that the people care for (through polls like "what is the most important thing in this election" etc). Candidates quickly latch on to this agenda and either ride the wave or shape public opinion if they are able to convince otherwise.

This election is a strange one, in the sense that most of the agenda was set by the politicians themselves. Issues that a common man might be interested in were barely discussed, and the main issues were the ones that the parties tried to project. I guess the main reason for this is the lack of a powerful independent/unbiased media. The media in this election was polarized more than ever, and this kind of ensured that the people's concerns were not given the prominence that they should have been given.

In this light, the strategies of each political party becomes extremely important. I think there were three main strategies that completely shaped up this election. Which of these will be the coup de grâce, I am not sure.

1. The DMK manifesto: The ADMK were going to town with the emphasis on the performance of their government. In reality, what did they have to show to the voters that would be instant positives? Not the way in which it dealt with the government workers (which I totally support and was sad to see it being painted in a negative light now). Not the ruthless manner in which people like Veerappan were "encountered" or Jayendrar was arrested. The main things that Jayalalitha could campaign on were her giveaways. Free bicycle. 2000 Rupees for those hit by the rains. Tsunami relief money.

In a powerful move, Karunanidhi countered it by promising more freebies. Free Color TV. Rice at Rs 2 a kg. 2 acres arid land to farmers (though the Sun TV ads wrongly (and knowingly) claimed "2 acres farm land").

The impact of these freebies were not obvious at first. VaiKo had a field day convincing people that these schemes would never work. Looked like people didn't believe that these could be done... till Jayalalitha followed suit.

By promising free 10 kg rice, Jayalalitha implicitly accepted that the DMK manifesto was a big hit and needed to be neutralized. I think it was a losing move politically and gave a lot of credibility to the DMK promises.

2. Shift of the evil, rich family tag: Think of what happened during the last time Jayalalitha faced an election when in power. The talk was on the rampant corruption in her government and the money embezzled by Sasikala and her family. Images of the vaLarppu magan's marriage didn't help. Sasikala, Bhaskaran, Sudhakaran, Dinakaran and all other karans in her family were painted as the people who swiped hundreds of crores of rupees. The vote in that election was also a vote against this powerful family.

Fast forward to this election. I don't think Sasikala and her cronies have stopped doing what they did before. I don't think her family has not earned a decent sum during the last five years. Yet, the tag of the evil, rich family went surprisingly to the other side, the one that was not in power in the state! Kalaignar's family, especially his Sun TV nephews, were branded as the money grabbers. The ill-timed Sun TV IPO didn't help. News that Dayanithi Maaran threatened the Tatas didn't help. Defectors like Vaiko, Sarathkumar and others bemoaned that DMK was catering to the interest of Kalaignar's family alone.

Whether the decision to target the Maaran brothers and their wealth/monopoly was Vaiko's or Jayalalitha's, we won't know, but it was a highly successful strategy. Instead of talking about the ruling party's corruption and embezzlement (who remembers any accusation other than the one on MIDAS?), DMK was forced to respond and keep up with the questions asked. Whatever be the outcome of the election, I think that DMK is stuck with the Sun Network tag, that it is trying to create a monopoly in the media, with a clear help from its people in the power.

3. The first two were straightforward, but the third strategy, whose importance I think we would see more after the election, is pretty subtle.

It can be summed up by this telling image in Dinakaran today. It is the last day of election campaign. Karunanidhi addresses a meeting with V.P.Singh. The photo that is there in the link is the one in the Dinakaran front page, covering the final moment of the campaign. Now, you see V.P.Singh, Karunanidhi and Dayanithi Maaran. Where is Stalin?

The third strategy that has influenced this election is the prominence given to Dayanithi Maaran and the lack of prominence given to Stalin. Dayanithi Maaran was the DMK's hero of this campaign. Issues were centered around him. DMK's main "achievements" at the centre were symbolized by his photos with Bill Gates, his BSNL One Rupee a call programme, and his involvement in pretty much everything. He was there at each and every occasion. Sun TV gave more coverage to him than Stalin. Even Dinakaran wrote that the manifesto was shaped up mainly by Dayanithi Maaran and Kalaignar.

Does anyone remember a single intelligent thing said by Stalin throughout this campaign? Vijaykanth jumped into politics yesterday and still, more people wanted him to be the next chief minister than Stalin.

I think this was a very deliberate decision by Kalaignar.

This can be interpreted in two ways: Either Kalaignar is underplaying Stalin, so that the voting public don't realize that they are actually going to vote for Stalin (he is the chief minister in waiting) and given his popularity, that will be a huge negative. Or, Karunanidhi has decided that Stalin is not his heir after all, and is grooming Dayanithi Maaran to usurp the leadership after his time.

Either way, what happened was that whenever the question of leadership after Karunanidhi came up, the question was not answered, or was evaded. So, is Stalin not the next head? Is Dayanithi Maaran going to play a more active role in the state politics?