ஸ்டார்ட்...காமெரா...ஆக்ஷன்!

(இப்போ இருக்கற தலைவருங்களுக்கெல்லாம், புதுப்படத்துலே நடிக்க ஒரு ரோல் கொடுக்கப்போறோம். அவங்க கிட்டே போய் கதை மற்றும் சில சீன்களை விவரிக்கும் போது, பிரத்யேகமா எடுத்த நோட்ஸ் இது!)




கருணாநிதி :-
சார் கதைப்படி...நீங்க ஒரு இட்லி கடை வெச்சு இருக்கீங்க. உங்க கடைக்கு எதிரேயே ஒரு அம்மா தோசைக்கடை வெக்குது. நீங்க கடுப்பாகி, "இந்த அம்மாவுக்கு எதிர்லேலாம் நான் வியாபாரம் பண்ண வேண்டிய நெலைமை வந்துடுச்சே" அப்படீன்னு சோகமா ஒரு பாட்டு பாடறீங்க. ஒங்க கடை வியாபாரத்தை எப்படி பெருக்கறதுன்னு நீங்க யோசிக்கறப்போ, ஒங்க அண்ணன் கனவுலே வர்றாரு. (அவர் அப்பப்போ வந்து ஐடியா கொடுக்கறது படத்தோட ஹைலைட்!).
அவரு கொடுக்கற ஐடியாப்படி, 'இந்த வருஷத்தோட என் கடையை மூடுறேன்னு' சொல்றீங்க. இதைப்பார்த்துட்டு ஒங்களுக்கு வியாபாரம் அதிகமாகும்னு நெனைக்குறப்போ, எதிர்பாராத விதமா தோசைக்கடை சும்மா ஐ.பி.ஓ ரிலீஸ் பண்ற அளவுக்குப் பிக்கப் ஆய்டுது. அப்ப தான் சார் நீங்க ஒரு முடிவு எடுக்கறீங்க - அதாவது, 'இழுத்து மூட இந்த இட்லிக்கடை ஒண்ணும் சாதா இல்லை.....ஸ்பெஷல் சாதா!' அப்டீன்னு குணா கமல் கணக்கா ஒரு சவுண்டு விடுறீங்க! (இதற்கு மேல் கதை சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு, கலைஞர் தனது குண்டு பேனாவால்...அக்ரீமெண்டில் கையெழுத்துப் போடுகிறார்)



வை.கோ :- இந்த எலெக்ஷன் முடிஞ்சவுடனே, அண்ணன் திருமா மாதிரி நீங்களும் ஒரு படத்துலே நடிக்கணும் சார். அதுலே கதைப்படி நீங்க ஜெயிலுக்குப் போறீங்க. அப்போ உங்க அண்ணன் தள்ளாடற வயசுலே, ஒரு மஞ்சத்துண்டைப் போத்திக்கிட்டு....உங்களைப் பார்த்துக் குலுங்கி குலுங்கி அழுவுறாரு. நீங்க அதைப் பார்க்க சகிக்காம, மூக்குலேந்துலாம் தண்ணி வர்ற அளவுக்கு அழுவுறீங்க. அண்ணனை அப்புடியே கட்டிப்புடிச்சுட்டு, காமராவைப் பார்த்து மன்மதன் சிம்பு கணக்கா கண்ணடிச்சு ஒரு ஸ்மைல் உடுறீங்க! மொத படங்கிறதாலே, நீங்க காரெக்டரோட ஒன்றி நடிக்கறா மாதிரி ஒரு கதை. புடிச்சுருக்கா சார்?! (வை.கோ கண்கள் கலங்கி, நமது கைகளைப் பற்றுகிறார்)



ஜெயலலிதா :- அம்மா, இது ஒரு ஹாரர் படம்மா! ஒங்க காரெக்டருக்கு பேர் என்னன்னே சொல்ல முடியாத மாதிரி ஒரு வியாதி. நீங்க எதுக்கு யாரைப் புடிச்சு உள்ளே போடுவீங்கன்னே யாருக்கும் தெரியாது? அடுத்தது யாரு, அடுத்தது யாருன்னு எல்லாரும் சீட் நுனிலே ஒக்கார்றா மாதிரி சஸ்பென்ஸ் திரில்லர். இந்த வியாதியோட இன்னொரு எஃபெக்ட் என்னான்னா, மொத சீன்லே நீங்க சொல்ற டயலாக்குக்கு அப்டீயே டோட்டல் ஆப்போஸிட்டா, அடுத்த சீன்லே ஒரு டயலாக் சொல்வீங்க.இது ஒங்களுக்கு நகைச்சுவை வரும்னு நிரூபிக்கறதுக்காகம்மா! ஆனா, இதே மாதிரி ஆல்டர்னேட் சீன்லே அராஜகம் பண்ணிக்கிட்டே வர்ற நீங்க, கடைசிலே ஆடியன்ஸைப் பார்த்து,பயங்கரமா புள்ளிவிவரம்லாம் சொல்லி 'என்னோட பொற்காலம் எப்படி இருந்துது'ன்னு ஒரு கேள்வி கேப்பீங்க பாருங்க...அப்டீயே பாக்குற ஒவ்வொருத்தனுக்கும் ஹார்ட் வெடிச்சு சுக்கு நூறாப்போய்டும்! (அம்மா புன்னகை செய்கிறார். நாம் பவ்யமாய் விடைபெறுகிறோம்)




விஜய்காந்த் :- சார், கதைப்படி நீங்க ரொம்ப யதார்த்த வாதி. ஏழை மக்கள் படுற பாடுலாம் ஒங்களுக்கு நல்லா தெரியும்னு நிரூபிக்கறதுக்காக, மொத நாலஞ்சு சீன்லே ரொம்ப கஷ்டப்படுறீங்க! பாய்லே படுக்குறீங்க, வேப்பங்குச்சியாலே பல் தேய்க்குறீங்க, வேலியோரமா ஒதுங்கறீங்க....இப்புடிக் கதைப் போய்க்கிட்டே இருக்கும் போது, திடீர்னு நீங்க அங்கே நடக்குறே நாட்டாமை தேர்தல்லே கலந்துக்குறீங்க! ஒங்களை எதிர்த்து ரெண்டு பெரும்புள்ளிங்க போட்டி போடும் போது, நீங்க தைரியமா நிக்குறதைப் பார்த்து ஊருக்குக் கை தட்டுறதா, இல்லை.... ஒங்க தலையிலே தட்டுறதான்னு புரியாம கொழம்பி நிக்கறாங்க! ஒங்கக் குடிசையை, குதிரை வண்டி ஓட்டக் கஷ்டமா இருக்குன்னு சொல்லி வில்லன் இடிக்கப் பார்க்குறான். நீங்க ஒடனே, 'குதிரை வண்டி போக எடமா இல்லை' அப்டீன்னு ஒரு ரூட் மேப் போட்டுக் கொடுக்கறீங்க. வில்லனும் அசந்து போய் நிக்கும் போது தான், நீங்க கொடுத்தது ரூட் மேப் இல்லை, ஆப்பிரிக்காவோட மேப்புன்னு அவனுக்குத் தெரிய வருது! இந்த சமயத்துலே இன்னொரு வில்லன் ஒங்களைப் பெரிசாக் கண்டுக்காதது ஏன்னு ஆடியன்சுக்குலாம் ஒரே கொழப்பமா இருக்கு! எப்படி நீங்க இந்த ரெண்டு வில்லனையும் சமாளிச்சு, மேலே வர்றீங்கங்குறது தான் மிச்சப் படம்! (நாம் சொல்லி முடித்ததும், 'ஸூட்டிங் சீக்கிரம் வைங்க...கதை ரொம்ப டெம்ப்டேசனா இருக்கு'ன்னு காப்டன் சொல்கிறார்)



- மைக்செட் முனுசாமி

Hehe in English

Serving you is my aim, - Jayalalithaa tells voters

Vaiko charges communists with double standards


The closet graphical representation for the above news is this

ஹி.. ஹி.. (2)

மயிலாப்பூரில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வி.சேகருக்கு ஆதரவாக வியாழக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி நடிகர் விசு பேசியதாவது:
....
நெப்போலியனுக்கு வேண்டுகோள்: இத்தொகுதியில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன் தி.மு.கவின் செயல்பாடுகளை உணர்ந்து, அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார் விசு.
இன்றைய தினமணியிலிருந்து. (இதை மிஞ்சறா மாதிரி நான் காமெடியா எழுதறது கஷ்டம்).

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தை சன் டிவி சற்று முன் நேரடியாக ஒளிபரப்பினார்கள். அதில் பேசிய தயாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கையை ஒரு ரூபாய்க்கு தருவதால் மற்ற பத்திரிக்கைக்கு பொறாமை. அவர்களுக்கு என் பதில் 'பொறாமை' என்ற வார்த்தையை திருப்பி போடுங்கள் என்றார். எனக்கு என்ன சொன்னார் என்று புரியவில்லை உங்களுக்கு ?

Comments:
பொறாமையை திருப்பிப் போட்டா "மை றா போ -மயிரா போ" அப்படீன்னு அர்த்தம்னு கேள்விப்பட்டிருக்கேன். தயாநிதியின் தராதரத்தைப் பார்க்கும் போது இந்த அர்த்தத்தில் தான் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது. (ஒண்டிக்கு ஒண்டி வர்றியா .. நாயைக் குளிப்பாட்டி.. போன்ற பழைய வசனங்களை நினைவு படுத்திக் கொள்ளவும்)

By மாயவரத்தான்..., at April 28, 2006 9:26 PM

தயாவை, பீட்டர் குஞ்சென்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ தமிழ் சிங்கமென்று நீரூப்பித்து விட்டார்.வாழ்க தமிழ்... வளர்க திராவிடம் ...

By கால்கரி சிவா, at April 28, 2006 10:15 PM

இட்லி வடையில் இருந்து.

ஹி...ஹி!

AIADMK supremo Jayalalithaa's assurances to the people at present were "a copy" of the manifestoes of the DPA constituents, PMK founder S Ramadoss said today.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாயா? எங்களின் அறிக்கையிலிருந்து அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் அறிக்கை எவ்வளவு கேவலமானது, அதில் இருப்பதெல்லாம் சுத்தப் பேத்தல் என்று? அவர்கள் அறிக்கையில் சொல்வதெல்லாம் யாராலும் செய்யமுடியாது என்று எங்களுக்குத் தெரியாதா? அதை எழுதிய எங்களுக்கே நீ சொல்கிறாயா?

Police today seized 65 bags of rice, containing 25 kgs each, from the premises of a political leader's house of in Ariyankuppam near here. Talking to reporters here, District Collector G Theva Needhi said it was suspected that the rice was meant for distributing to voters in the constituency and cases were registered against the house owner.

உடன்பிறப்பே, சற்றொப்ப நான்கு வாரங்களுக்கு முன் நான் அறிவித்த இரண்டு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை அல்லிராணியும் அவளது யவன அடிமைகளும் எள்ளி நகையாடினர். ஆனால், அவர்களுக்குத் தெரியுமா இத்திட்டத்தை எப்படியும் அமுல்படுத்துவோம் என்று. நம் பாசறையில் பாலபாடம் பயின்றவர்கள் மூன்று வாரங்களாக அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். பகலில் பிரசாரம் செய்து ஓட்டு பிரிக்கின்றனர். இரவில் கடைகளில் ஓட்டு பிரித்து உள்ளே புகுந்து அரிசி மூட்டைகளை எடுத்து வருகின்றனர். இப்படி ஐந்து வாரம் செய்தால் போதும். இரண்டு ரூபாய்க்கு என்ன, ஒரு ரூபாய்க்கு கூட எங்களால் அரிசி தர முடியும். உடன்பிறப்பே, களவாடுவது எங்களுக்கென்ன புதியதொன்றா? தேனை எடுத்தபோதெல்லாம் புறங்கையை நக்கியவர்கள் நாம்தானே.

Speaking at a press conference here, Subramanian Swamy said DMDK would not affect poll prospects of any party. The prospects of Janata Party and the BJP were bright in the state, he claimed.

விஜய்காந்த் கட்சி 234 தொகுதில்லேயும் போட்டிபோட்டு டெபாசிட் தோக்கப்போறா. நாங்கோ 5 தொகுதில்லேதான் டெபாசிட் தோப்போம். இப்போ சொல்லுங்கோ இந்த தேர்தல்ல பெரிசா தோக்கறது அவாளா நாங்களா?

"I have to defend myself. But I will not stoop down to make personal allegations against anybody, Maran said.

வை.கோ என்னைப் பற்றிக் கூறும் குற்றச்சாட்டுக்களை நான் எதிர்ப்பேன். ஆனால், நான் யாரைப் பற்றியும் கீழ்த்தரமாக பேசமாட்டேன். அதிலும், குறிப்பாக அந்த கேடுகெட்ட சோமாறி கீறானே பேட்டா டேய், அவன் மூஞ்சியில என் பீச்சாங்கையை வச்சு அவனை சும்மா கீசு கீசுன்னு கீசிடுவேன், ஆனா நான் அந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கமாட்டேன்.

The Vaitheegan Show [#10]

It seems Jayalalitha is winning - How? Old man Karunanidhi had to play his old scratched LP record. In a recent interview he has stated that “'Only Brahmins are supporting Jayalalitha”
Let us check some popular new/old admissions into the Jayalalitha camp
1.Sarath Kumar /Radhika,2.Senthil,3.Radha Ravi,4.S.S.Chandran,5.Simran 6.Thirumalvalavan 7.VaiKo
seeing this from an another angle - using his [tamil]-wit Mu.Ka wanted to insult every one in the above list so he called them Brahmins. DMK leader must have realized Tamil language patronage does not work anymore. Why? His grand son is a Hindi pundit!. Grand Old man seems have forgotten Jayalalitha vs Jayendra Saraswathi episode – some say it is a confirmed case of Alzheimer. It is pity that this grand old man of Tamil Nadu politics could not find any other weapon to deal Jayalalitha. Brahmins – Mu.Ka ayya please don’t give credit to the Brahmins for what they don’t deserve.

Here you go : Bitter over the way in which the Tamil Nadu government handled the affairs of the 2,000-year old Kanchi mutt, Thamizhanadu Brahmin Association (Thambraas) on Friday said all its members would vote against the ruling AIADMK in the May 8 Tamil Nadu assembly polls. read more..[HhH-In about 24hrs we will be hearing a somersault statement from this grand old man]

As if free color TV , Rice etc were not enough , an independent Mr. Ramasamy alias E K R Kuppam contesting from Muthialpet constituency [Pondichery assembly] has promised voters mobile phones free of cost, if voted to power in the coming Assembly elections in the Union Territory. [What Next? tea stalls to be setup at every street corner that will provide free Tea and porai for everyone]

Actor Sarath Kumar has blown his horn against union minister Maran. He wants prime minister to set up enquiry commission. He also said the freedom of press and speech will be in danger if the DMK comes to power, in the Tamil Nadu[HhH: Poor Sarath fails to under stand, by supporting AIADMK the word “freedom” is itself is in jeopardy.] read more..

Central Minister [and the in house DMK Hindi scholar] has stated that TN CM did not bother to attract new industries to state. Yes! Jayalalitha is heavy headed, known for her arrogance. But if Mr.Maran had Noble intentions he could have done well for the state. He has to take the blame 50% here, why - Hope the world remembers the reason given by Mr. Maran for not taking Bill Gates to Chennai Tidal Park. – “Roads were bad so we cannot show him the tidal park”

Rewind - Times of India – Dated Dec 8th 2005 :Not one to be media-shy, Maran went on to crib that he could not take Gates to TIDEL Park, Chennai’s IT hub, because of the potholed roads leading to the software enclave. Aghast media persons listened in shock as the minister tore apart the image of a city still recovering from the fury of the recent floods ..read more

Tell me - Who is to blame here? If Maran’s intentions had been noble, why care about other person's EGO? Did he not speak badly about our state to a foreigner? Did he not paint a bad picture? People, I feel this is where DMK stands today. Just wondering about his qualifications to be the minister of IT? Education is not that great - ok – who cares about education - Lallo is our railway Minster but what about Political experience – this is also near zero- How then? Speaks Hindi? – He is certainly a “blessed” dude.

தடவாதே..

















மேல இருக்குற போட்டோவை பார்த்த உடனே கலைஞர். எம்.ஜி.ஆர் ஸ்டைலுல தன்னோட வேட்பாளர்கள், அடிப்பொடிகள் கிட்ட பாடினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை..

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆத்மா தயவு செய்து என்னை மன்னிக்கட்டும்.

பல்லவி:
=======
தடவாதே.. தலையை
தடவாதே

தடவாதே.. (என்) தலையை
தடவாதே

என்
வழுக்கையை கண்டு தடவி விடாதே..
மக்கள் இருக்கார் மறந்து விடாதே..

(தடவாதே)

சரணம் 1:
==========

சட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது -அதை
திட்டம் போட்டு கவுக்கும் நம் கூட்டம்
கவுத்துக்கொண்டே இருக்குது

குருடனாய் இருக்கும் ஜனங்களுக்கெல்லம்
தொலைக்காட்சி பெட்டி தாரேனே..

(தடவாதே)

சரணம் 2:
==========

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
பெருசா இருந்தா அமுக்கிக்கோ - பொருள்
பெருசா இருந்தா அமுக்க்கிக்கோ - காசு
தெரிஞ்சும் தெரியாம வாங்கிருந்தா அது
வெளியே வராமே பாத்துக்கோ

(தடவாதே)

கெடுக்குற காலம் நெருங்குவதால் நாம்
கொடுக்குற வாக்கு செல்லாது - வரும்
தேர்தலின் பின்னே செல்லாது

ஏய்க்கிற நோக்கம் தோல்வி ஆயிட்டா
எடுக்குற ஓட்டம் நிக்காது - நாம
எடுக்குற ஓட்டம் நிக்காது - பணம்
கீழும் மேலும் புரளாது

இருக்குறதெல்லாம் நமது ஆயிட்டா..ஆ...
இருக்குறதெல்லாம் நமது ஆயிட்டா..ஆ...
சூரியன் குடும்பத்துக்(கு) இணை யாரு ?

(தடவாதே)




தேர்தலை அசை போட்டபடி

தேர்தலை அசை போட்டதில்:

1. மக்கள் மறந்த விஷயங்களில் (அல்லது மறக்கடிக்கப்பட்ட விஷயங்களில்) முக்கியமானதொன்று, இப்போது பெரிதாகிக் கொண்டிருக்கும் இலங்கை போரும், இங்கு திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்ற விவாதமும். இலங்கையில் கிட்டத்தட்ட முழு வீச்சில் போர் ஆரம்பிக்கப் போகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு என்ன ஆகும்? ராமேஸ்வரத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட ஆயுதங்களைப் பற்றியும் திமுகவின் புலிகள் சார்பு பற்றியும் இன்னும் விவாதம் பெரிய அளவில் எதிரணியினர் தொடரவில்லை. (வை.கோவுக்கு புலிகள் தொடர்பு இருந்தாலும் அதிமுக ஆட்சியில் அவர் சொல்வது எதுவும் செல்லாது என்று தான் தோன்றுகிறது).

2. திமுகவினர் கூற்றுப்படி, மத்திய அமைச்சர்கள் அந்த காலத்து ராஜாக்கள் போல. டெல்லியில் உட்கார்ந்துக்கொண்டு ஏராளமான திட்டங்களையும் பணத்தையும் வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கருணைப் பார்வை கிடைக்க வேண்டுமானால், மாநில முதல்வரும் அவர் அமைச்சரவையும் சென்று, மத்திய அமைச்சர்கள் புகழ் பாடி, அவர்களுக்கு கால் அமுக்கி விட்டு, தங்கள் மாநிலத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டிற்கு வரும் நலத்திட்டங்களை நாகாலாந்துக்கு அனுப்பி விடுவார் மத்திய அமைச்சர்.

3. "ஜனநாயக ஆட்சி வேண்டுமா சர்வாதிகார ஆட்சி வேண்டுமா" என்று கேட்கும் "ஜனநாயக" தி.மு.க.விலும் ராஜ்ய சபா எம்.பி பதவி என்று வரும் போது அதில் ஜனநாயகம் எல்லாம் கிடையாது. எம்.பி பதவி கலைஞருக்கு அன்று யார் மேல் பாசம் இருக்கிறதோ, அன்று எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, அவருக்குத் தூக்கி கொடுக்கலாம். எம்.பி பதவிக்கு யாரும் "தகுதி" வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால் தான் "வை.கோவுக்கு எம்.பி பதவி கலைஞர் போட்ட பிச்சை", "ஒன்றுக்கும் லாயக்கில்லாத வை.கோவை எம்.பி ஆக்கி கலைஞர் அழகு படுத்திப் பார்த்தார்" என்றெல்லாம் சொல்கிறார்கள்.

4. திரும்பத் திரும்ப தயாநிதி மாறன், சன் டிவி, இலவச திட்டங்கள் இவற்றை சுற்றித் தான் விவாதங்கள் நடக்கின்றன. அன்புமணி தப்பித்துக்கொண்டு விட்டார். அவர் அமைச்சர் ஆனது பற்றியோ, பொதுவாக பா.ம.க பற்றியோ ஒரு பேச்சும் காணோம். ரேடாரின் கீழே தான் பறக்குது பா.ம.க (இங்கிலீஷில் யோசிச்சு தமிழில் எழுதினா இப்படித்தான்).

5. இந்த தேர்தலின் biggest non-factors ஒன்று பா.ஜ.க, இன்னொன்று மு.க.அழகிரி, மூன்றாவதாக டாக்டர் கிருஷ்ணசாமி.

6. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர ஓட்டு கேட்பதும் "இலவச சைக்கிள் கொடுத்தேன், அதில் இலவசமாக காற்று அடித்துக் கொடுத்தேன்" என்றெல்லாம் தான். அதை முன்னரே புரிந்துகொண்டு, மேலும் மேலும் இலவசமாக வழங்குவோம் என்று தி.மு.க அறிவித்தது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக்.

7. கும்பகோணம் தீ விபத்து பற்றியும் அதற்குப்பின் பள்ளிக்கூடங்களில் ஏதாவது மாற்றங்களை தமிழக அரசு செய்ததா என்பதைப் பற்றியும் யாரும் பேசுவதாக தெரியவில்லை. இனி எந்த பள்ளிக்கூடத்திலும் தீ விபத்து நடந்தால் இத்தனை சிறுவர்கள் இறக்க மாட்டார்கள் என்று நம்பலாமா என்ன?

8. பாலாற்றின் மீது கட்டப்போகும் அணை பற்றி இரு அணியினரும் முதலில் பேசினர், இப்போது அதைப் பற்றி இருதரப்பினரும் ஒன்றும் கூறுவதாகத் தெரியவில்லை.

9. நதிகளை இணைக்கும் ப்ளான் என்ன ஆயிற்று? திமுகவின் மத்திய அமைச்சர்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? (குறைந்தபட்சம் ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா இல்லையா? )

அப்டிப் போடு அருவாளை!

வை.கோ நிற்கிறார் மிரண்டு. இப்போ ஊரெல்லாம் அலைகிறார் உருண்டு - விஜய. ராஜேந்தர்



அண்ணா...ஏதோ ரைமிங்கா இருக்குன்னு என்ன வேணா பேத்தறதா? 'அலைகிறார் உருண்டு' - இதுக்கு என்னா அர்த்தம்?! சரி, இதுலேலாம் லாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது. நானும் ஒங்களோட சேர்ந்து, கொஞ்சம் அடிச்சு உடறேன். அடுத்த கூட்டத்துலே சேர்த்து சும்மா தூள் கிளப்புங்க! காப்பிரைட், ராயல்டி ஒண்ணும் வேணாம். ஏதோ என்னால கொடுக்க முடிஞ்ச இலவசம், என்சாய்ய்ய்ய்ய்ய்!



வை.கோ நிற்கிறார் மிரண்டு.
இப்போ அலைகிறார் உருண்டு.
சிம்புவுக்கு பிடிச்சது நண்டு.
தாமரைக்கு இருக்குது தண்டு.
உங்களுக்கு கலர் டிவி உண்டு.
திமுகவுக்கு ஓட்டு போடுடா மண்டு!



தொட்டில் முதல் சுடுகாடு வரை உதவுபவர் தான் கருணாநிதி - தயாநிதி மாறன்.



ஹி...ஹி...இதெல்லாம் அப்புடியே தானா வர்றது தான் இல்லை?! நல்லவேளை, சொர்க்கம், நரகம் போன்ற விஷயத்துலேலாம் ஒங்க கட்சிக்கு நம்பிக்கை இல்லாம போச்சு. இல்லாட்டி, சொர்க்கத்துக்கு சென்றால் ரம்பா, மேனகை டான்சுக்கு டிக்கெட் இலவசம். நரகத்துக்கு சென்றால், எண்ணைக் கொப்பறையில் பொறிக்கப்படுபவர்களுக்கு 'பர்னால்' (யோவ்..பர்னாலா இல்லைய்யா, அவர் கவர்னர்...நான் சொல்றது ஆயின்மெண்ட்) இலவசம்னு மேலோகமே வியக்கும் வண்ணம் தேர்தல் அறிக்கையிலே ஜமாய்ச்சுருப்பீங்க!



இன்னொரு பொற்காலத்தை உருவாக்க பேராதரவு தாருங்கள் - முதல்வர் ஜெ.



ஆங்...நீங்க சேரன் இயக்கத்துலே, முரளி - மீனா நடிச்ச படத்தை தானே சொல்றீங்க ?!
(ஆமாம்..மீனா சும்மா தானே ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்க, அவங்களை ஏன் பிரச்சாரத்துலே புடிச்சுப் போடலை நீங்க?). புடிக்காதவங்களைப் புடிச்சு ஜெயில்லே போடுறது, தலையாட்டி பொம்மைங்களை அமைச்சருங்களா வெச்சுக்கறது, தாம் தூம்னு சட்டம் போடுறது - அப்டியே ஒரு அந்தர் பல்டி அடிச்சு அத்தனையும் வாபஸ் வாங்குறது - இதெல்லாம் தான் ஒங்க பொற்காலத்தோட டெபனிஷன்னா, எங்களுக்கு மக்கள்லாம் அம்மணமா அலைஞ்ச கற்காலமே போதும்டா சாமி! (நீங்க என்ன பொற்காலம், புள்ளி விவரம்னு போர் அடிக்கறீங்க. இன்னும் பத்து நாள் தான் இருக்கு ...களத்துலே எறங்கி கருணாநிதியோட கபடி ஆட வாங்க, சொல்லிப்புட்டேன்!)



உண்மையிலேயே கலைஞருக்கு சமூகப்பார்வை இருந்திருந்தால், கலர் டிவி கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்க மாட்டார். கம்ப்யூட்டர் தருகிறேன் என்று சொல்லியிருப்பார் - திருமா


நீங்க மாட்டும் எதுனாச்சும் மைக்குக்கு முன்னாடி சொல்லிட்டுப் போய்டுவீங்க...நிருபர்கள் இதை அவருகிட்டே கேட்டு வெச்சாங்கன்னா, கலைஞரும் 'கொடுத்துத் தொலைக்கறேன்'னு சொல்லிடுவாரு! இப்படியே டிவி, கம்ப்யூட்டர், பிரிட்ஜுன்னு எல்லாம் இலவசமாக் கொடுக்கறதுன்னு முடிவு எடுத்து ஜெயிச்சும் வெச்சுட்டாருன்னா, தமிழ்நாடு அரசு அப்படீங்கற பேரை வசந்த் அன் கோன்னு மாத்தறா மாதிரி ஆயிடப்போவுது! (இந்த டயலாக்கைக் கேட்டுட்டே, தயாநிதி பில்கேட்ஸோட ஏதோ முப்பத்து மூணு, முப்பத்து மூணுன்னு பேச ஆரம்பிச்சுட்டாராமே - மெய்யாலுமா?!)



- மைக்செட் முனுசாமி

தி.மு.கவுக்கே ஓட்டு போட்டுடுங்க!

ஏனென்றால்:

1. அதிமுக ஜெயித்துவிட்டால், கலைஞரை அசெம்பிளி பக்கமே பார்க்கமுடியாது. அவருக்கு ஓட்டு போட்ட சேப்பாக்கம் மக்கள் இளிச்சவாயர்கள் ஆயிடுவாங்க. தான் ஜெயிச்சாலும், எதிர்க்கட்சியில் இருந்தா கலைஞர் சட்டசபைக்கு வர மாட்டாரு. அதனால, அவரை முதலமைச்சர் ஆக்கினா தான் அந்தப் பக்கம் வருவாரு.

2. கலைஞர் முதல்வர் பதவிக்கு வந்தா, அவருக்கு படத்துக்கு கதை வசனம் எழுத நேரமிருக்காது. பாச பருந்துகள், பாச கழுகுகள் மாதிரி படமெல்லாம் வராது. ஹை ஜாலி.

3. போயஸ் கார்டன் வீட்டிலே ரெய்டு நடத்தி, ரூமுக்கு ரூம் வீடியோ எடுத்து, அவங்க வீட்டு தட்டு முட்டு சாமான் எல்லாம் மெகா சீரியல் லெவல்ல சன் டி.வியில் காட்டுவாங்க. அம்மா வீட்டில இருக்கற ஐநூறு வகை செருப்பெல்லாம் நாம பார்க்க வேண்டாமா?

4. திமுக ஜெயிச்சா ஸ்டாலினுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும். இல்லாட்டா, அடுத்த மேயர் எலக்ஷனில் நின்னுடுவாரு. அப்புறம், அவர் ஜெயிச்சு மேயர் ஆனா, நாம எல்லாரும் "வழிப்பாட்டிற்குரிய மேயர் அவர்களே" (His Worshipful Mayor)ன்னு கூப்பிடணும். அதுக்காகவே அவரை அமைச்சராக்கிடலாம்.

5. தி.மு.க தோத்துப் போனால், கலைஞர் தமிழ் மக்களை எல்லாம் "சொரணை கெட்ட ஜென்மங்களே, சோற்றால் அடித்த பிண்டங்களே" அப்படி இப்படின்னு திட்டுவாரு. இந்த வயசான காலத்தில எதுக்கு அவரைத் திட்ட வைக்கணும்?

6. அதிமுக ஜெயிச்சா, அட நூறு கோடி ரூபாயை வேண்டாம்ன்னு சொல்லிட்டோமேன்னு "பெரிய நடிகரு" வருத்தப்படுவாரு. திமுக ஜெயிச்சா, அப்பாடா நல்ல வேளை தப்பிச்சோம்ன்னு அவருக்கு ஒரு திருப்தியாவது இருக்கும்.

7. இதெல்லாம் பெரிய காரணமில்லீங்க, ஆனா அய்யாமார்களே, அம்மாமார்களே, தயவு செஞ்சு திமுகவுக்கு ஓட்டு போட்டுடுங்க. இல்லாட்டா, இந்த எஸ்.எஸ்.சந்திரனும் ராதாரவியும் பண்ணற லொள்ளு தாங்க முடியாது!

மைக் டெஸ்டிங்க - 1,2,3

(பொதுக்கூட்ட மேடைகளில் கழகப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுவார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டு இது. இது மிக மிகக் காரம் குறைக்கப்படதொரு பேச்சு. இதில் நடுநடுவில், பல கெட்ட வார்த்தைகளைப் போட்டு, வாடா போடா, வாடி போடி எல்லாம் போட்டால்...அந்த எஃபெக்ட் கிடைக்கும். இதய பலவீனமாவர்கள், அரசியல் பேச்சுகளை இதற்கு முன் கேட்டிராதவர்கள்...தயவு செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். இந்தப் பேச்சை, இது போன்றதொரு பேச்சுக்களின் மூலமாகவே வாழ்வை நடத்தி வரும் வெற்றிகொண்டான்,நன்னிலம் நடராஜன் மற்றும் தீப்பொறி ஆறுமுகத்துக்கு சமர்ப்பிக்கிறேன். இதுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குங்கறதைப் பார்த்துட்டு, மைக் டெஸ்டிங்க் தொடரும்.)

'தமிழ்நாட்டு மக்கள் பொழுது போகாம இருக்கறதால தான், நெறைய புள்ளை பெத்துக்கறாங்க. அதுனால மக்கள் தொகையைக் குறைக்கறதுக்காகத் தான், இந்தக் கலர் டிவி அறிவிப்பே' - யாரு இப்படி சொல்றானு நெனைக்கிறீங்களா? ஆங்கில மணி கொடுத்தால், அந்தப் பக்கம் அதிகமா அடிக்கும் மணியான வீரமணி! சரி இப்போ, அவர் சொன்னதைக் கொஞ்சம் ஆராய்வோம். பொழுது போகாம இருந்தா, தமிழ்நாட்டுலே புள்ளை பெத்துக்கறாங்களா? அதாவது செய்யறதுக்கு எதுவும் வேலை இல்லாம இருந்தா, 'மேட்டர்' தான் தமிழ்நாட்டோட ஒரே பொழுதுபோக்கு! யோவ்...தமிழனை இதை விடக் கேவலமா எவனுமே சொன்னது இல்லைய்யா! ஏதோ தமிழ்நாட்டுலே இருக்கறவன் எல்லாம் டாக்டர் பிரகாஷ் ரேஞ்சுக்குப் பொண்ணுங்க மேலே விழுந்து பிராண்டுறவங்க மாதிரிப் பேசியிருக்காரு!

அப்படி டி.வி கொடுத்தா, மக்கள் தொகைக் கொறைஞ்சுடும்னா, என்னாத்துக்கு நிரோத்,காப்பர்-டீ லொட்டு லொஸ்கு எல்லாம்?! அது போக, இப்போ டிவிலே வர்ற நிகழ்ச்சியை எல்லாம் பார்த்தா, எவனாவது போர்த்திக்கிட்டு சும்மா படுக்க முடியுமா? பதினோரு மணிக்கு மேலே டிவிலே காட்டுற ஒவ்வொரு மசாலாவையும் பார்த்தா, ஒரு புள்ளையோட நிறுத்தணும்னு நினைச்சவன் கூட எக்ஸ்ட்ரா ஒண்ணு டிரை பண்ணுவானேன்யா! நீ மிட்நைட் மசலாங்கற பேருலே என்னா போடுறே? திராட்சைப் பழத்தைத் தொப்புள்ளே அடிக்கறது....டேய், இந்த இடத்துலே இந்தத் தொப்புளைப் பத்தி ஒண்ணு சொல்லியாகணும்! அது என்ன பிரஸ்டீஜ் பிரஷர் குக்கராடா?! உட்டா சூப்புலே ஆரம்பிச்சு கேசரி வரைக்கும் அங்கேயே கிண்டி எடுத்துடுவீங்க போல இருக்கே?! சினிமாக்காரன் தான்யா நாட்டையே கெடுக்குறான். இன்னைக்குக் கூட பாரு, இந்த கார்த்திக் பய என்னலாம் சொல்றான். ஒரு நாள் எழுந்தவுடனே 'நான் ஆண்டிப்பட்டிலே போட்டி போடுவேங்கறான்' இன்னொரு நாள் பார்த்தா...'சொல்ல முடியாது சஸ்பென்சு'ங்கறான்! தெரியாமத் தான் கேக்குறேன் , நீ நாட்டுக்கு சேவை பண்ண வந்தியா ...இல்லை அரசியல்ங்கற பேருலே சஸ்பென்ஸ் சினிமாவுக்குக் கதை எழுத வந்தியா?!

இது போக, கலைஞர் சொல்றாரு...பொது அறிவை வளர்க்கறதுக்காககத் தான் டிவி கொடுக்கறாராம்! மைடியர் பூதம், வேப்பிலைக்காரின்னு சீரியல் போட்டுட்டு...இதெல்லாம் பார்த்தா பொது அறிவு வளரும்னு நெனைக்குற ஒரே குடும்பம் கலைஞர் குடும்பம் தான்யா! இப்போ வர்ற சீரியல்லாம் பார்க்குறா மாதிரியா இருக்கு?! ஒருத்தன் செத்தா அவனுக்கு மூச்சு நின்னதுலேந்து, ராட்டி அடுக்கறது, பஞ்சை சொருகறதுன்னு ஏதோ எழவு வூட்டுல பண்ற சமாச்சாரத்தை நீட்டி முழக்கிக் காமிக்கறதுக்குப் பேரு சீரியலாடா?! வீரப்பன் செத்ததை விலாவரியாக் காமிச்சாக் கூடத் தான் கஷ்டமா இருக்கும்...அதுக்குன்னு அதை ஒக்கார்ந்து பார்க்க முடியுமா?!

இது எல்லாத்தையும் விடுங்கய்யா...இப்போ தமிழ்நாட்டுலே முக்கியமான பிரச்சினையா, காவிரிப் பிரச்சினை தெரியலை, வேலையில்லாததைப் பத்தி எவனுக்கும் கவலை இல்லை...மூவாயிரம் ரூபாக் கலர் டிவி கொடுத்து பொது அறிவை வளர்க்குறது தான் முக்கியமா படுது! சரி இந்த ஆளு தான், இப்படி டிவி அரிசின்னு பம்மாத்து பண்றார்னு பார்த்தா, அந்தாம்மாவும் பத்து கிலோ அரிசி இலவசம்னு சொல்லி மக்களை ஏமாத்துது! டேய்...தமிழ்நாட்டுலே ஏதாவது இலவசம்னு சொன்னா ஒடனே நம்பிடாதே...அவன் ஒன் பாக்கெட்லேந்து ஒரு பத்து ரூபா பணத்தை ஒனக்கே தெரியாம எடுத்து, 'சந்தோஷமா சாப்டு மாப்ளே'ன்னு சிங்கிள் டீ வாங்கிக் கொடுப்பான். அதுக்குப் பேரு தான்டா அரசியல்...அப்படிப் பண்றவன் தான் அரசியல்வாதி!

இந்த அம்மா என்னவோ தமிழ்நாட்டை சிங்கப்பூராக்கிட்டா மாதிரி, சாதனைகளைப் பத்தி மட்டும் தான் பேசுவாங்களாம்?! விவசாயி எல்லாம் எலி பிரியாணி தின்னது இந்த ஆட்சிலே தான்! அரசு அதிகாரி எல்லாம் லஞ்சம் கொடுத்தாக் கூட வெளியே வர முடியாம, ஜெயில்லே கிடந்தது இந்த ஆட்சிலே தான்! தினகரன்லேந்து ஜெயேந்திரர் வரைக்கும் கஞ்சா கேஸ் போட்டு, உள்ளே கெடந்தது இந்த ஆட்சிலே தான்! சங்கர மடத்துலே அந்த அய்யிரு மாட்டும் ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தாரு. நீயும் அப்பப்போ உன்னொட பிரெண்டோட போய், பிரசாதம்னு சொல்லிட்டு கறுக் முறுக்னு கல்கண்டை சாப்புட்டுக்கிட்டு இருந்தே. நீ என்ன பணத்தைக் கொடுத்தியோ...இல்லை அந்தாளு என்னாத்தை சப்புக்கொட்டிக்கிட்டு வாங்கி, ஜோல்னாப் பையிலோ போட்டுக்கிட்டாரோ, ஒங்களுக்குள்ளே என்ன பிரச்சினையோ...திடீர்னு கொலைக்கேசு போட்டு உள்ளே தள்ளிட்டே! சரி உள்ளே தள்ளினதோட வுட்டியா, 'அந்தாளு இனிமே தமிழ்நாட்டு பக்கமே வரக்கூடாதுங்கற' மாதிரி என்னன்ன வேலை பண்ணினே?! கோடிக்கோடியா கொள்ளை அடிச்சவன்லேந்து, கொத்துக் கொத்தா கொலை பண்ண வரைக்கும் ஒங்க கூடவே இருக்க, சாமியாருங்களை உள்ளே தள்றது தான் ஒங்க ஆட்சியோட ஒரே சாதனை! சாமியையே நம்பாத கருணாநிதியைக் கூட, சாமியாருக்கு சப்போர்ட்டா பேச வெச்சது அதோட கிளை சாதனைன்னு வேணா சொல்லலாம்!

கொலை பண்ணான் கொலை பண்ணான்னு சொல்றீங்களே? தருமபுரிலே மூணு மாணவிகளை எரிச்சீங்களே அது கொலை இல்லியா? அய்யரும் அய்யரும் அடிச்சுக்கிட்டு செத்துப் போனது எல்லாம் அநியாயமா தெரியுற ஒங்களுக்கு, மூணு கல்லூரிப்பொண்ணுங்களை எரிச்சாங்களே ஒங்கக் கட்சிக்காரங்க...அதெல்லாம் அநியாயமா தெரியலையா?! நீங்க என்ன மதர் தெரஸாவோட மறு உருவமா? ஒங்களை ஜெயில்லே போடக்கூடாதா? ஜெயில்லே போட்டதுக்கு ஒன் கட்சிக்காரன் மூணு சின்னப் பொண்ணுங்களை எரிச்சானே, அந்தக் கேஸை துரிதப்படுத்தறதுக்கு இது வரைக்கும் ஒங்க அரசாங்கம் என்ன பண்ணியிருக்கு?!

இப்போ புதுசா ஒருத்தர் அரசியல்லே வந்துருக்காரு. கதர் வேட்டி, கதர் சட்டை கொடுத்து, கையிலே ஒரு மலபார் பீடியும், மல்லிகைப்பூவையும் கொடுத்தா...அக்மார்க் வில்லன் மாதிரி இருப்பாரு இந்த ஆளு. இந்த தயாநிதியை தான் சொல்றேன். தாத்தா இருக்கற தைரியத்துலே, டாடாவை மிரட்டுறாம் இவரு! டேய்...இந்த ஸ்டாலினாவாது பரவாயில்லை. ஜெயிலுக்குப் போயிருக்காரு, நாலஞ்சு தடவை லத்தி சார்ஜ் வாங்கியிருக்காரு...அட, எதுக்காகவோ வாங்கினாரு, அந்தக் கருமம் நமக்கு எதுக்கு? இந்த தயாநிதிக்கு அரசியல்லே என்ன தெரியும்னு சொய்ங்க்னு போய் டெல்லிலே கோட் சூட் போட்டுக்கிட்டு அலையுறாரு! மாறனுக்குப் புள்ளைங்கறதைத் தவிர, இந்தாளு அரசியல்லே எதுனாச்சும் பண்ணியிருக்குறாரா? இந்தத் தேர்தல்லே இந்த அம்மா ஒரு வேளை ஜெயிச்சுதுன்னா, மொத ஆப்பு ஒங்க சன் டிவிக்கு தாண்டி! இப்போ செல்வி டாட்டா காமிச்சாச்சு...அடுத்தது விசுவும் டவலோட அம்மா கிட்டே வந்தாச்சு. இன்னும் பெப்ஸி உமாவும், பனைமட்டையிலே ஒண்ணுக்கு அடிக்கறா மாதிரி சலசலன்னு பேசுவானே...அந்த விஜயசாரதியும் மட்டும் தான் பாக்கி! அவங்களும் அம்மா சைடு வந்துட்டாங்கன்னா...ஒங்க தாத்தாவை நடுவுலே ஒக்கார வெச்சு, கவியரங்கம் நடத்தறதைத் தவிர வேற புரொக்ராமே உங்க டிவிலே வர முடியாது! அதுக்கு ஒரு வழி பண்ணாம அந்த அம்மா உடாது!

சொல்லப்போனா, ஒங்க ரெண்டு கழக சண்டைக்குப் பஞ்சாயத்து பண்றது தானே, தமிழ்நாடோட கடந்த முப்பது ஆண்டு கால அரசியலே! டேய்...இப்படியேப்போனா தமிழ்நாடு
வெளங்குமாடா?!

(நடுவுலே டேய் டேய்னு ஏக வசனத்துலே கூப்புடுறது ஒங்களைத் தான், ஹி...ஹி...அது தாங்க இந்த பேச்சோட ஸ்டைலே :) )


- மைக்செட் முனுசாமி

Breaking News: Is Maran arm-twisting Tatas?

The NewIndPress.Com website (part of Dinamani's group) is questioning Dayanithi Maran's apparent arm-twisting tactics with the Tatas.

MDMK leader Vaiko’s allegation that Union Minister Dayanidhi Maran has been pressurising, even threatening, Mr Ratan Tata virtually to hand over Tata DTH [Direct to Home] project to his family may end up as more than just an allegation by a political rival during an election campaign.Inquiries by this website's newspaper lead to the conclusion that Dayanidhi Maran has a lot to explain which he seems not inclined to.

..
The case that is emerging against Dayanidhi Maran is briefly this. The Tata group is in alliance with the global giant Rupert Murdoch’s Star TV for the Direct to Home [DTH] TV project. DTH broadcast carries the connectivity to TV at home without any cable through a set top box that sits on the TV. The value of this project runs into thousands of crores.

The Tatas presently hold 80 per cent of the project and Murdoch 20 per cent. The Maran family has acquired a DTH license. But there is a rider to that. Under its terms the Sun TV cannot hold more than 20 per cent like the Star TV cannot hold more than 20 per cent in the Tata Sky project. It has to find a partner for 80 per cent and also investment of thousands of crores!

Since the future belongs to DTH,Sun TV desperately needs to own DTH connectivity. That is why the Maran brothers, both Kalanidhi who runs Sun TV, and Dayanidhi who runs the ministry that is directly involved in DTH business, seem to have got interested in the Tata-Murdoch project.

This website's newspaper inquiries reveal that Kalanidhi Maran telephoned the Tata group chairman Ratan Tata and asked for a meeting. In the meeting he sought 33 per cent share in the Tata-Star DTH project with management rights. He demanded that Sun TV be given the shares at par, regardless of the real value.

This meant he not only wanted partnership but also at a huge concession. He also demanded to be included as promoter along with Tata and Murdoch.Shocked by the brazen demand, Ratan Tata told him that it was Tatas’ project and they had no intention of parting with it to anyone. It was then that Dayanidhi Maran intervened.

Dayanidhi had meetings with Ratan Tata in which he began pressing him to part with the project. This seems to have intensified the struggle. Dayanidhi also contacted Rupert Murdoch himself and asked for 33 percent partnership, which the shocked global media baron politely declined.

Meanwhile, meetings took place in which the Marans began claiming that the executives of Tatas and Star TV and also Murdoch and his assistant at Hong Kong had accepted to give 33 percent partnership to Sun TV. These claims later reportedly proved to be false.

When Tata and Murdoch refused to oblige Dayanidhi and Tata wrote a letter to him saying that shares could not be given, Dayanidhi got upset. He reportedly threatened Tata that he would finish off their telecom project and subsequently his office promptly began withholding all normal clearances to Tata Telecom.

The minister ought to have known that since the telecom sector was beset by cutthroat competition, the withholding of ministerial approvals would impose huge costs and losses on Tata Telecom.


A tamil version of the article has appeared in today's Dinamani . Expect to see this issue being picked up in a big way by Vai.Ko and others during the election campaign.

The Vaitheegan Show [#9]

Can he swallow it back? Union Finance Minister P Chidambaram has said, "It is practicable to supply rice for Rs 2 per kg and also free land for landless agricultural laborers. He also urged the people to repeat the 2004 Lok Sabha polls verdict when the AIADMK was defeated en masse." Had I been in the position of Jayalalithaa, I would have resigned from the chief minister's post after the defeat," he said. --- So if DMK and their buddy parties lose this election will all the Tamil Nadu ministers quit their job in New Delhi? When will this dim-witted comparison of Lok Shabha elections to State assembly election end?

Wind blowing in DMK's direction says MK, DMK president M Karunanidhi back from a hectic campaign tour today said the DMK would be able to form a government on its own in Tamil Nadu after the May 8 Assembly elections. More than the direction, we should see origin of the wind. On the spate of opinion polls, which gave different predictions, Karunanidhi said he was not a person who campaigned on the basis of opinion polls. Some polls had given the DMK front 140 seats, he pointed out.

A pre-poll survey conducted by Goodwill Communications has given the Dravida Munnetra Kazhagam the edge, with a 41.97 per cent share in the overall vote. The survey has given the AIADMK 36.07 per cent vote share, followed by the Desiya Murpokku Dravida Kazhagam 6.05 per cent. According to Fr. Jegath Gaspar Raj, managing director of the agency, the survey was conducted from April 9 to 13 in 160 constituencies, covering 15,600 respondents.[Our reporter ka.sa.mu.sa.Balan wished that Fr. Jegath Gaspar Raj had done similar survey just before “burning” money on his recent Oratorio fiasco.]

Sonia says “I can only state here that you should vote for our alliance DPA and support the UPA government at the Centre. We will see to it that people of Tamil Nadu are not neglected,” [our reporter “Susagam” Suguna winks winks! and says until now people of Tamil Nadu are being neglected in spite of handful representation in the center. SoniaJi appealed to the electorate of Tamil Nadu to vote for the DMK-led DPA candidates in the Assembly elections to lead a life of dignity. [Congress men present in the meeting quickly referred a dictionary to find the meaning for “life of dignity”]. Showering praise on Karunanidhi, she said he was the most respected leader from whom all other leaders look for counsel [People should remember that in the recent past it used to be meteorite shower.]

Actor Sarath, who recently jumped out of the DMK bandwagon to join the revolutionary leader cultural club, rolled his dice against the DMK. On a recent interview on JAYA-TV he mentioned rather accused that DMK founded by Anna has become 'Dayanidhi Munnetra Kazhagam'. The interview also featured fantastic facial expression given by the host Rabi Bernard. For every word Sarth utters, Rabi’s eyes would reflect sympathy, empathy and all other pathies including vekatachalapathy. Fine camera work to capture those pivotal moments. The main complain from Sarath was that Maran chased him out like a 3rd person when he tried to meet Sonia. He also told that one of the Maran Brothers called him and warned about the truncation of TV serials produced by his wife Radhika. Sarath interview seemed genuine - he did look emotionally wounded. [an Injured & Sober Natamai]

Vaitheegan congratulates mikeset_munnu_bhai, thambi cheenu and "otherA ithara" HmH contributors - HmH was featured in Deccan chronicle.

Kalanidhi Maran a billionaire

Sun TV went up about 70% after its IPO debut. It made Kalanidhi Maran a billionaire. Only 10% of Sun TV is traded publicly, and Maran holds the remaining 90%.

His net worth now is Rs. 9080 crores! That is about 2 Billion dollars. Look out for Maran in the next Forbes Billionaires list.

HotMachiHot in Deccan Chronicle

The Chennai edition of Deccan Chronicle apparently had a piece on Bloggers covering the TN polls, and this group blog too got a mention:

But the most interesting is Idlyvadai. blogspot.com and Hotmachihot. blogspot.com, which gives information on the latest deserters, newcomers and campaigning gaffes like the politician who used Hindi handbills to campaign in Tamil Nadu.

Wonder why there is a space between "Idlyvadai." and "blogspot" or "Hotmachihot." and "blogspot", so that even if someone C&Ps the url from the article, it won't work.

Anyway, we are not inflammatory, unlike a certain Mafia blog :)

In the immortal words of a wise friend, HotMachiHot-kkE Vote Machi Vote!

கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கருத்துக் கணிப்பு வெளியிடப்படுகிறது. திமுக முன்னிலை, எழுபத்திமுணே முக்கால் சதவிகிதம் பேர் ஓட்டு போட்டால், விஜய்காந்த் ஜெயிப்பார்...ஆனால், அறுபத்தி இரண்டு சதவிகதம் பேர் தான் ஓட்டு போட்டார்கள் என்றால் சுயேச்சைகள் ஜெயிப்பார்கள் என்று அதிர்ச்சி வைத்தியம் தருகிறார்கள். இதுவரை பல தேர்தல்கள் பார்த்தாயிற்று, பல விதமான கருத்துக்கணிப்புகள், அலசல்கள் எல்லாம் பார்த்தாயிற்று....ஆனால், அவை நிஜத்தில் பிரதிபலிப்பது முப்பது சதவிகிதத்திலிருந்து முப்பத்தைந்து சதவிகிதம் வரை கூட சாத்தியமாவதில்லை (இந்த மாதிரி சதவிகிதம் எல்லாம் போட்டு ஒரு வரி எழுதினா, படிக்க ஜோராத் தானிருக்கு!) ! போன பாராளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தான் அமையும் என்று பலரை நம்ப வைத்தக் கணிப்புகளும், அலசல்களும் ஏராளம் ஏராளம். அதுவும் குறிப்பாய் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடத்தில் அந்த பிரமையும், பிராந்தியும், பீரும் நிறையவே இருந்தது. சொல்லப்போனால், எதற்காக ஒரு எலெக்ஷன் நடத்தி ஒளிரும் இந்தியாவை டல்லடிக்க வைக்க வேண்டுமென்ற ரீதியில் பலர் பேசுவதைக் கேட்டு, நானும் கூட 'வாஜ்பாய் ஜிந்தாபாத்' என்று தூக்கத்தில் அலறியிருக்கிறேன். ஆனால், நடந்தது என்ன...? அன்னை சோனியா வெண்ணையென வென்றார்! (தெரியும் ...வெண்ணையென வென்றார், கொஞ்சம் பிசுபிசுத்து சொதப்புதுன்னு...இருந்தாலும், அன்னை - வெண்ணை கொஞ்சம் ரிதமிக்கா இருக்கு இல்லை? )


சன் டிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் ஒரு முறை கூட திமுக தோற்றதில்லை, லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்புகளில்
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் முடிவுகள் வெளிவரத் தவறியதில்லை...இது போல 'நமது எம்.ஜி.ஆர்' நடத்திய கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் (நான் படிச்சது இல்லை) அதிமுக தான் மெஜாரிட்டியாய் மெஜாரிட்டி பெற்றிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நூறு பேரிடம் பேட்டி எடுத்து விட்டு, இப்படித்தான் இருக்கும் என்று முடிவுகளை சொல்வது போன்ற ஒரு பேத்தல் வேறெதுவும் கிடையாது. முக்கால்வாசி சமயங்களில், கருத்துத் திணிப்புகள் தான் நடைபெறுகிறதேயொழிய கணிப்புகள் நடப்பதே இல்லை! கலர் டிவி, அரிசி, சீமைப் பசு (ரவளி இல்லை), பத்து ஏக்கர் நிலம், ஜில்ஜில் ஜிகிர் தண்டா என்ற அறிவிப்புகளுக்கெல்லாம் மயங்கிப் போகிற அளவுக்கு இப்போதைக்குத் தமிழ்நாடும், தமிழர்களும் இல்லை என்று தோன்றுகிறது. கிராமங்களில் வேண்டுமானால், இதன் பாதிப்புக் கொஞ்சமே கொஞ்சமிருக்கலாமொழிய...நகரங்களில் சீமைப் பசுவும், கலர் டிவியும் எந்த விதத்திலும் எடுபடப்போவதில்லை! அதே போல, சன் டிவியில் செய்யும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் மாறுதல்களை ஏற்படுத்துமென்று பலர் கணிக்கிறார்கள். சொல்லப்போனால், அது போன்ற பிரச்சாரங்கள் சலிப்பையும், வெறுப்பையும் கூட ஏற்படுத்தலாமென்ற உண்மையை மறுப்பதிற்கில்லை!


இது போன்ற கருத்துக் கணிப்புகள், ஒரு கையில் காபியை வைத்துக் கொண்டு, நாலு நண்பர்கள் கூடும் போது 'இவங்க ஜெயிச்சுடுவாங்களாமே - பார்த்தியா' என்று சுவாரஸ்யமாய் அரட்டை அடிக்க உதவுமே ஒழிய, நயாப் பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்பது தான் எனது கருத்தும், கணிப்பும். படங்களின் டிரெயிலர்கள் சுவாரஸ்யங்களைக் கூட்டுவதற்கு மட்டுமே பயன்படும் - முப்பது செகண்டுகளுக்கும், மூன்று மணி நேரத்துக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது - அது போன்றதொரு வித்தியாசத்தில் தான் கருத்துக் கணிப்புகளின் தலையெழுத்தும் பொறிக்கப்பட்டிருக்கிறது!



- மைக்செட் முனுசாமி

DMK Alliance Forging Ahead?

During the initial days of the election campaign, it looked like ADMK was pretty much in the lead and DMK was a distant second. Over the past few days however, I think (my point of view alone, with no scientific/statistical backing) that the tide has turned; the election now is DMK's to lose.

I think DMK has forged ahead over the past week or so. If there are no more new stories in the next two weeks, I think DMK will win the election, but not get a simple majority by itself, thus would form a coalition government.

There are several reasons why I think ADMK has lost the momentum:

1. Jayalalitha's reversal of stance when it came to the issue of subsidized rice. DMK's announcement of free rice and color TV was met with much criticism and suspicion. The free TV in particular, was criticized because there was clearly a vested interest in the picture. The Rs 2. a kg rice scheme though was not an easy one to take apart. Though the elite public would scoff at the idea of giving away freebies, the voting electorate will like to get as much free stuff as it can, and the DMK heads clearly knew it. The most vocal opposition to the rice scheme came from Vai.Ko. He targeted the free rice scheme, compared it with a similar failed scheme from before, and even dared P.Chidambaram to announce Rs 2. rice all over India. That argument would have been very effective if it had run the course.

Then JJ made a mockery of it by hastily announcing free 10 kg rice. Her announcement, not a part of her original manifesto, did more damage to her credibility than good. It effectively shut out Vai.Ko, and gave a tacit approval to the feasibility of the DMK scheme. I think the electorate would look at JJ's announcement with suspicion and would rather believe in DMK's proposal. I think it was a big momentum killer for ADMK.

2. The growing distraction of Karthik and the AIFB. With the pro-DMK media strongly playing the 'Karthik as a victim of ADMK's tyranny' angle, this issue will result in ADMK losing some votes in its most powerful vote bank.

3. I think the initial attack against Dayanidhi Maran and the power of Sun Network by Vai.Ko has lost momentum. This is mainly because the ADMK is not following up on this, leaving it to MDMK to do negative campaigning. I doubt if ADMK's tactics of just focussing on its performance, and not doing smear/negative campaigns would work. ADMK could have pressed on about who would become the Chief Minister if DMK got elected, and whether Mu.Ka can actually serve out his term. By not focussing on the opposition, I think ADMK has not been able to neutralize DMK's campaign.

4. The power of the Sun Network media. Even a few days back, there was some sanity prevailing in Dinakaran/TamilMurasu/Sun TV. But the last few days, the gloves are off. Sun TV is a non-stop campaign stage for DMK. Dinakaran and TamilMurasu's one-sided reports are all over the place. I don't hear Sooriyan FM or read Kungumam, but I would guess they too are neck deep in propaganda. By the sheer market share of Sun TV and its associated publications, some percentage of the electorate is bound to shift over.

5. We've come to the end of people switching from one party to another, I guess. Though JJ has drawn Vai.Ko and Sarathkumar on her side, I don't think she will gain a lot from them. Now, had Vijaykanth moved to the ADMK alliance, that would have been a different story altogether.

So, as of now, I think the DMK alliance has the upper hand. As DMK is contesting in a limited number of seats, it won't get a simple majority, but may be able to form a coalition government.

Mega serial

IPO release

Sponsored by BSNL 50 paisa call