நக்கலூர் நட்டு
1) குற்றம் செய்ய தூண்டுகிறார்: கருணாநிதி , திமுக காயப்படுத்தியதால் அதிமுக கூட்டணி - ராமதாஸ் [பேஷ் பேஷ் இக்கரைக்கு அக்கரை பச்சை!]
2) எனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி: [அட உங்கக்காமக்கா இம்புட்டு நாள் தெரியாம போச்சே.!..]
3) தொகுதி பங்கீடு ஜெயலலிதா முடிவு செய்வார்: வைகோ [அட! பின்ன நீங்களா முடிவு பண்ணுவிங்க?]
4) தி.மு.க. அணிக்கு பா.ம.க. வரவேண்டும்: திருமாவளவன் [இவரு கட்சியே ஊசல் ஆடுது]
5) ஒரு சீட் மட்டும் தந்தால் ஏற்க முடியாது - மனித நேயக் கட்சி [யாருங்க இவக..?]
( சமீபத்திய Delhi, Rajasthan தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில் பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)
அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி 'India Shining' னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!
வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம் ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!
அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில் இருந்த ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி ... விடிஞ்சுரும்!
ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!
வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!
ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.
அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .
வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!
வெங்கையா நாயுடு : அது மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம் வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண் , கோவிந்தாச்சார்யா எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!
அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!
அத்வானி: 'கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை' என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! May 2009 க்கு என்னதான்யா வழி?!
அருண் ஜெட்லி: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ....
வெங்கையா நாயுடு : ...... ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !
எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!
nanRi!
Cinema Virumbi