இன்னும் ஒரு முடிவும் எடுக்கலே-கார்த்திக்
பாஜக தான் தனக்கென ஒரு அணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறுகிறது. கூடவே கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியும் இணையும் என்கிறார்கள்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், எங்களது நிலை குறித்து பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வருகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் முடிவே எடுக்கவில்லை. 29ம் தேதி திருப்பூரில் எங்களது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளேன். அங்குதான் முடிவெடுப்போம். முடிவெடுத்ததும் ஏப்ரல் 1ம் தேதி நானே சென்னையில் கூட்டணி குறித்து அறிவிப்பேன். அன்றே தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாள்கள் தினம். பார்த்து தான் சொல்லியிருக்காரு நம்ம கார்த்திக்.
14 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று கண்டறிந்துள்ளோம். அதில் 7 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மற்றவற்றில் பிறரின் வெற்றிகளை நாங்கள் நிர்ணயிக்கும் சக்தியுடன் உள்ளோம்.
சொல்றது தான் சொல்றீங்க.. எதுக்கு 14? மிச்சம் 26 தொகுதியையும் எதுக்கு விட்டு வைப்பானேன்?
எப்படி இருந்தாலும், சன் டிவி காமெடி சானலுக்கு விவேக்கும் வடிவேலுவும் எவ்வளவு முக்கியமோ, ஹாட் மச்சி ஹாட்டுக்கு கார்த்திக் அவ்வளவு முக்கியம். அதுக்காகவே எங்க ஓட்டு உங்களுக்கு உண்டு. (வோட்டு போட ஏசி ரூம் கிடைக்குமா?)
0 comments: to “ இன்னும் ஒரு முடிவும் எடுக்கலே-கார்த்திக் ”
Post a Comment