தி.மு.கவுக்கே ஓட்டு போட்டுடுங்க!

ஏனென்றால்:

1. அதிமுக ஜெயித்துவிட்டால், கலைஞரை அசெம்பிளி பக்கமே பார்க்கமுடியாது. அவருக்கு ஓட்டு போட்ட சேப்பாக்கம் மக்கள் இளிச்சவாயர்கள் ஆயிடுவாங்க. தான் ஜெயிச்சாலும், எதிர்க்கட்சியில் இருந்தா கலைஞர் சட்டசபைக்கு வர மாட்டாரு. அதனால, அவரை முதலமைச்சர் ஆக்கினா தான் அந்தப் பக்கம் வருவாரு.

2. கலைஞர் முதல்வர் பதவிக்கு வந்தா, அவருக்கு படத்துக்கு கதை வசனம் எழுத நேரமிருக்காது. பாச பருந்துகள், பாச கழுகுகள் மாதிரி படமெல்லாம் வராது. ஹை ஜாலி.

3. போயஸ் கார்டன் வீட்டிலே ரெய்டு நடத்தி, ரூமுக்கு ரூம் வீடியோ எடுத்து, அவங்க வீட்டு தட்டு முட்டு சாமான் எல்லாம் மெகா சீரியல் லெவல்ல சன் டி.வியில் காட்டுவாங்க. அம்மா வீட்டில இருக்கற ஐநூறு வகை செருப்பெல்லாம் நாம பார்க்க வேண்டாமா?

4. திமுக ஜெயிச்சா ஸ்டாலினுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும். இல்லாட்டா, அடுத்த மேயர் எலக்ஷனில் நின்னுடுவாரு. அப்புறம், அவர் ஜெயிச்சு மேயர் ஆனா, நாம எல்லாரும் "வழிப்பாட்டிற்குரிய மேயர் அவர்களே" (His Worshipful Mayor)ன்னு கூப்பிடணும். அதுக்காகவே அவரை அமைச்சராக்கிடலாம்.

5. தி.மு.க தோத்துப் போனால், கலைஞர் தமிழ் மக்களை எல்லாம் "சொரணை கெட்ட ஜென்மங்களே, சோற்றால் அடித்த பிண்டங்களே" அப்படி இப்படின்னு திட்டுவாரு. இந்த வயசான காலத்தில எதுக்கு அவரைத் திட்ட வைக்கணும்?

6. அதிமுக ஜெயிச்சா, அட நூறு கோடி ரூபாயை வேண்டாம்ன்னு சொல்லிட்டோமேன்னு "பெரிய நடிகரு" வருத்தப்படுவாரு. திமுக ஜெயிச்சா, அப்பாடா நல்ல வேளை தப்பிச்சோம்ன்னு அவருக்கு ஒரு திருப்தியாவது இருக்கும்.

7. இதெல்லாம் பெரிய காரணமில்லீங்க, ஆனா அய்யாமார்களே, அம்மாமார்களே, தயவு செஞ்சு திமுகவுக்கு ஓட்டு போட்டுடுங்க. இல்லாட்டா, இந்த எஸ்.எஸ்.சந்திரனும் ராதாரவியும் பண்ணற லொள்ளு தாங்க முடியாது!

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories5 comments: to “ தி.மு.கவுக்கே ஓட்டு போட்டுடுங்க!