சொன்னாங்க சொன்னாங்க

ஏழை மக்கள் வாழ்க்கை முழுவதும் வறுமையைத்தான் பார்க்கிறார்கள். அந்த வறுமையை ஒழிக்க தேவையான திட்டத்தை நான் தயாரித்துள்ளேன். அதை வெளியில் சொல்ல மாட்டேன். சொன்னால் மற்ற கட்சிகள் காப்பி அடித்து விடுவார்கள்.

- விஜயகாந்த். (அப்போ எதுக்கு தேர்தல் அறிக்கை எல்லாம்?)

உங்கள் அன்பால், தயவால் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் என் முதல் கையெழுத்து கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தான்.

- கருணாநிதி. (அடுத்த கையெழுத்து சுமங்கலி கேபிளுக்கு)

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம்தான் ஆகிறது. அதற்குள் ஆட்சியைப் பிடிக்க, முதல்வர் பதவியில் அமர அவர் அலை பாய்கிறார். இது நியாயமா? கண்டனத்துக்குரிய செயல் இது.

- ராமராஜன். (சரியா தேர்தல் நேரத்துக்கு ஜிகினா சட்டையைப் போட்டுக்கிட்டு வந்துடறீங்க)

'விருத்தாசலம் தொகுதியில் மகா நடிகர் நிற்கிறாராமே' என்று நிருபர் கேட்டார். அதற்கு நான் அவரிடம், 'எவன் நின்னால் எனக்கென்ன? அவன் அப்பனே கூட நிக்கட்டுமே? அதைப்பற்றி எனக்கென்ன?' என்று சொன்னேன்... நடிகர் விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் எந்த ஒரு பகுதிக்கும் பிரசாரம் செய்ய செல்ல முடியாது... அவர்கள் இருவரையும் (பண்ருட்டி & விஜயகாந்த்) நாங்களும் எங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் புரட்டி, புரட்டி எடுப்பார்கள்.

- விருத்தாசலம் பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி. (அரசியல் நாகரீகத்தை நல்லா கட்டிக் காப்பாத்தறீங்க)

அக்டோபர் 23-ஆம் தேதி பிரதமர் தமிழகத்துக்கு வருவதாகவும் அன்று மாலை 4 மணிக்கு கோபாலபுரம் சென்று திமுக தலைவரை சந்திப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அப்போது மதுரையிலிருந்த கருணாநிதி, 'பிரதமர் வருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் முக்கிய வேலையாக கொடைக்கானல் செல்கிறேன்' என்று கூறி ஓடாத படத்துக்கு கதை எழுதப் போய்விட்டார்.

- வை.கோ. (நீங்க சப்போர்ட் பண்ணற அம்மா, சும்மா ஜலதோஷம்ன்னு எல்லாம் சாக்கு சொல்லி காவிரி மீட்டிங்ல கலந்துக்காம கல்தா குடுத்தாங்களே, அதெல்லாம் மறந்து போச்சா?)

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories