பாக்யராஜும் தி.மு.கவும்
டைரக்டர் கே.பாக்யராஜ் தி.மு.க.வில் சேர்ந்துட்டாரு (பாரிஜாதம் ரிலீஸ் பண்ணற ஐடியாவே இல்லியா?). தி.மு.க தான் எம்.ஜி.ஆர் விசுவாசிங்களோட உண்மையான கட்சின்னு வேற சொல்றாரு. விட்டா எம்.ஜி.ஆர் இப்போ உயிரோட இருந்தா கருணாநிதியோட பக்கத்தில உட்கார்ந்துக்கிட்டு தி.மு.க.வில ஸ்டாலினை எப்படி தலைவராக்கிறதுன்னு பேசிக்கிட்டிருப்பார்ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.
பாக்யராஜுக்கு என்ன கடனோ என்னவோ, ஏதோ அவருக்கு இதனால ஒரு அஞ்சு பத்து லட்சம் கெடைச்சா சரி!
ஆனா ஒண்ணு, இனிமேல் தி.மு.க மேடையில குட்டிக்கதைங்களுக்கு பஞ்சம் இருக்காது!
பி.கு. வெற்றிகொண்டான் கட்சி மாறி அ.தி.மு.கவுக்கு போகப்போறாருன்னு பட்சி சொல்லிச்சே, அது உண்மையா?
0 comments: to “ பாக்யராஜும் தி.மு.கவும் ”
Post a Comment