தினகரன் vs தினமலர்
தினகரனில் தினமலரை நேரடியாகத் தாக்கும் எடிட்டோரியல் ஒன்று வந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது, தினமும் வெளிவரும் நியூஸ்பேப்பர் உலகில் தற்போது இருக்கும் போட்டி தான். இது தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேப்பர் மார்க்கெட்டில் பெரும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. டைம்ஸ் ஆ·ப் இந்தியா, ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள் போன்றவையும் ஒன்றை ஒன்று மிஞ்சப் பார்த்து, விலையைக் குறைத்து பல மாற்றங்கள் செய்து வருகின்றன. இந்த மார்க்கெட், திடீரென்று பலர் உள்ளே நுழைந்து, fragmented ஆகிவிட்டது. பல இடங்களில் ஒரே பேப்பர் தான் முன்பெல்லாம் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் அவர்களின் market share குறைந்து இப்போது வாசகர்களுக்கு நிறைய மாற்று பத்திரிகைகள் வந்துள்ளன. இது ஒரு தற்காலிக மாற்றம் தான். ஒரு சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் படி, இதன் அடுத்த நிலை, பல கம்பெனிகள் ஒன்றை ஒன்று வாங்கி பெரிய கம்பெனிகள் ஆகும் (consolidation). சமீபத்தில் இந்தியாவில் செல்போன் மார்க்கெட்டில் ஆனது போல்.
தினகரனை கலாநிதி மாறன் வாங்கி அதன் மார்க்கெட்டிங்கை முற்றிலுமாக மாற்றியுள்ளார். (வாங்கியது கலாநிதி மாறன் தானே.. சன் நெட்வொர்க் இல்லையே? சன் டிவியின் IPOவில் தினகரனை அதன் சொத்தில் சேர்க்கவில்லை என்று படித்ததாக ஞாபகம்.) . சன் டிவியின் மூலமாக இடைவிடாது விளம்பரம் செய்து தினகரன் தினமும் 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்க வைத்தார். இதனால் தினமலரும் தினத்தந்தியும் வாசகர்களை இழந்திருக்கும்.
வை.கோ தனது பிரச்சாரத்தில் முக்கியமாக முன்னிருத்துவது, சன் நெட்வொர்கின் வளரும் சாம்ராஜ்ஜியத்தைத் தான். மேலோட்டமாக சன் நெட்வொர்க் ஒரு monopoly ஆக இன்னும் ஆகவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும், இந்திய anti-monopoly சட்டங்களை சன் உடைத்திருக்கலாம், அது பற்றி முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு சராசரி வாக்காளனுக்கு, சன் மீடியா ராஜ்ஜியத்தைப் பற்றி ஒரு வெறுப்பும் (பொறாமை கலந்த) இவர்கள் இப்படி ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்ற வயிற்றெரிச்சலையும் வை.கோ சாமர்த்தியமாக தனது பிரச்சாரத்தில் ஏற்றி விடுகிறார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி தினகரனில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்ததால் முட்டாள்கள் தினத்தையட்டி எழுதியிருப்பார்களோ என்று தோன்றுகிறது. ஏனென்று மேலே படியுங்கள்:
* செய்தியை செய்தியாக பிரசுரிக்காமல் தனது சொந்தக் கருத்தை அதனுள் திணித்து வாசகர்களின் மண்டைக்குள் ஏற்றும் வேலையை ஒரு கலையாக வளர்த்தெடுத்தது தினமலர்.
இதை நிஜமாகவே சிரிக்காமல் எழுதினார்களா என்று தெரியவில்லை. தினகரன்/தமிழ்முரசில் வரும் செய்திகளில் இவர்களின் சொந்தக் கருத்தே இல்லையா?
* தனது ஆதிக்க எல்லைகளையும் லாபவரம்புகளையும் விஸ்தரித்துக்கொள்ள ஏதுவான கருத்துகளை மட்டுமே பிரதானப்படுத்தி செய்தி என்ற பெயரில் வெளியிடத் தொடங்கினர்.
அதாவது, இவர்கள் இப்போது செய்வதைப் போல. விஜய்காந்த் அதிமுகவுக்கு எதிராக சொன்னால் அதை மட்டுமே பிரதானப்படுத்தி வெளியிடுவது, திமுகவிற்கு ஆதரவாகவே செய்திகளை அளிப்பது போல..
* மாற்றுக் கருத்து கொண்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
தினகரனில் மாற்றுக் கருத்து கொண்ட செய்திகளை அப்படியே முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்களா?
* அதன் மூன்றாம் தலைமுறை முதலாளிகள் மெரினா கடற்கரையில் இரவு வேளையில் உற்சாக பானம் அருந்திக் கொண்டு 'இன்று யாரைப் போட்டு தாக்குவது' என்று சீட்டு குலுக்கிப் போட்டு, அங்கிருந்தே அலுவலகத்துக்கு தொலைபேசியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அப்படியே "டேய் ஜம்பு, அவனை தீர்த்திடு" என்றும் ஒரு மொட்டை அடியாளிடம் சொன்னார்களா? இப்படி character assassination செய்யலாமா?
* பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரி தொடங்குவது, ரேடியோ ஸ்டேஷன் துவங்குவது, டிவி சேனல் ஆரம்பிக்க விண்ணப்பிப்பது, ஊர் ஊராக சொத்து வாங்கி குவிப்பது...
சன் டிவியில் நிமிஷத்துக்கொரு தரம் புதுசு கண்ணா புதுசு என்று விளம்பரம் செய்வது, ரேடியோ ஸ்டேஷன் துவங்குவது, ஊர் ஊராக சொத்து வாங்குவது.. இவர்களைப் பற்றியே எழுதிக்கொள்கிறார்களா?
* உண்மையான நடுநிலையுடன் எல்லா தரப்பு செய்திகளையும் தாங்கி .... தமிழக மக்களை கவர்ந்துள்ள தினகரன்...
நடுநிலைக்கு புது அர்த்தம் தருகிறார்கள் :)
முழுவதும் படியுங்கள். சிரிப்பு கண்ணா சிரிப்பு. Pot.. Kettle.. Black.
மீடியா உலகில் காலணி ஆதிக்கம் , வேறென்ன சொல்ல
நன்றி
குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்