ஒரு (N.R.I) அரசியல் பார்வையாளனின் புலம்பல்கள்!

வெளிநாட்டுலே ஒக்காந்துக்கிட்டு இருக்கறதாலே, ஓட்டு போடும் பாக்கியம் தான் இல்லை....இந்தத் தேர்தல் முடிவுகளையாவது, அப்பப்போ பார்த்து 'நான் ஒரு மரத்தமிழன்'னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டலாம்னு பார்த்தா....ஒக்கமக்காஆஆஆ, பாயிண்ட் பாயிண்ட்டா பொலம்பறேன் பாருங்க!

(1) தினமலர் 'The results will be updated hourly'னு சொல்லி, 'Error in line 68'னு மொத ஹவர் அப்டேட் பண்ணாங்க. சரி, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம்னு பார்த்தா, 'Error in line 58'னு சொன்னாங்க. இவங்க இப்படியா ஒவ்வொரு லைனையும் சரி பண்ணிக்கிட்டு வர்றதுக்குள்ளே, 'கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி'னு மத்த பேப்பர்லே அப்டேட் பண்ணிட்டாங்க!

(2) நேத்து மட்டும் இந்த விஜய்காந்த் எத்தனை தடவை தோத்து தோத்து, ஒரு வழியா ஜெயிச்சாரு
தெரியுமா? 'தினமணிலே முன்னிலைனு போட்டுருக்கே.... பரவாயில்லை, கலைஞர் பண்ண டி.வி புரட்சி நடுவுலேயும் புரட்சிக் கலைஞர் பொழச்சுப்பாரு போல இருக்கே'னு நெனச்சா,
வேற ஒரு வெப்சைட்டுலே 'விஜய்காந்த் தோல்வி' அப்டீனு கொட்டை எழுத்துலே போட்டு இருப்பாங்க! எதுடா உண்மைனு புரிஞ்சு ஒரு நெலமைக்கு வர்றதுக்குள்ளே, 'எஸ்.வி.சேகர் தோல்வி' அப்டீனு வேற ஏதாவது கண்ணுலே பட்டு தொலைக்கும். இதுக்கு நடுவுலே 'அன்பழகன் தடுமாற்றம்' அப்டீனு ஒரு நியூஸ் வரும். அப்புறம் அது தி.நகர் பழக்கடை ஜெ.அன்பழகனா, இல்லை சொம்புக்கடை நடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்பழகனான்னு ஒரு கன்ப்யூஷன்!

(3) இதுலே இந்த சன் டி.வியும் ஜெயா டிவியும் பண்ண காமெடியை எங்கேனு சொல்றது. சன் டி.வி
பாபா கவுண்டிங் ஒன்.டூ.த்ரீ மாதிரி, எண்ண ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்துலே, கலைஞர்
கோபாலபுரத்துலேந்து கோட்டைக்குப் போக வேன்லே ஒக்காந்த ரேஞ்சுக்கு சொல்லி....'இந்த சர்வாதிகார ஆட்சி சரிஞ்சு போனதுக்கு என்ன காரணம்னு நெனைக்குறீங்க' அப்டீனு சிரிச்சுக்கிட்டே, ஒரு கையாலே வெடி வெடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. (இன்னைக்குக் காலைல பார்த்த காமெடி இது!) இவங்க இப்படீன்னா, ஜெயா டிவி நெலமை பரிதாபம்!
தோத்துட்டு வர்றாங்கன்னு தெரியுது, ஆனா அவங்களுக்கு அதை சொல்லவும் தர்மசங்கடமா இருக்கு...ரபி பெர்னார்ட் கொடுத்த காசுக்கு, எந்தளவுக்கு நாசுக்கா விஷயங்களை சொல்றதுன்னு தவியா தவிச்சுட்டாரு, அய்யகோ பரிதாபம்! பயங்கர காமெடி என்னன்னா, 'அதிகாரப்பூர்வமான தகவல்களின் படி, அதிமுக 91 இடங்களும்...திமுக 40 இடங்களும் பெற்றிருக்கிறது!' அப்டீனு சர்வசாதாரணமா அணுகுண்டு வீசுனது தான். 'கலைஞர் மூவாயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்துலே தான் ஜெயிச்சுருக்காரு, ஆனா ஆண்டிப்பட்டிலே அம்மா 21000 வாக்கு வித்தியாசத்துலே ஜெயிச்சுருக்காங்க!' அப்டீங்கறதை பிரெஞ்ச் ப்ரைஸ் சாப்டும் போது, கெட்ச் அப்லே அப்பப்போ தொட்டுக்கற கணக்கா சொல்லிக்கிட்டே இருந்தாங்க! இந்தக் கொடுமைகளை கொட்ட கொட்ட கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்து அலுத்துப் போனதால்...இந்தியாவுக்கு
போன் செய்து கேட்டால், உரையாடல் இப்படி தான் இருந்தது.
நான் :- அப்பா, லேட்டஸ்ட் நியூஸ் என்ன?
அப்பா :- இப்போ தான் பேப்பர் வந்துது, காப்பி சாப்புட்டு முடிச்சேன்.
நான் :- நான் எலெக்ஷன் நியூஸ் கேட்டேன்ப்பா!
அப்பா :- ஓ...ஜெயா டிவி படி, அதிமுக லீடிங். சன் டிவி படி திமுக ஜெயிச்சு
முடிச்சாச்சு. பொதிகை படி ஒரே வழவழக்கொழகொழா!
நான் :- நீ எந்த டிவி பாக்குறே?
அப்பா :- நான் டி.வியை ஆ·ப் பண்ணி ஆ·ப் அன் அவர் ஆச்சு!
நான் :- சரி, நான் இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு கால் பண்றேன்.
('பெத்தெடுத்த' அம்மா (சே...இந்த ப்ரிபிக்ஸ் தேவைப்படுது பாருங்க, இங்கே!) ஏதோ
சொல்வது கேட்கிறது)
அப்பா :- விஜய்காந்த் தோத்துட்டாராம்.
நான் :- இப்போ தானேப்பா லீடிங்னு பார்த்தேன்!
(மீண்டும் அம்மா ஏதோ சொல்கிறார்)
அப்பா:- டேய்...விஜய்காந்த் ஜெயிச்சுட்டாராம்.
நான் :- அது கிழிஞ்சுது போ.....நான் இங்கேயே பாத்துக்கறேன்!

இன்னும் நெறைய இருக்கு....அப்பால வரேன்!

- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories11 comments: to “ ஒரு (N.R.I) அரசியல் பார்வையாளனின் புலம்பல்கள்!