ஜெயேந்திரர் வழக்கு

சங்கரராமன் கொலை வழக்கு பற்றியும், ஆட்சி மாறியதால் இனி என்ன ஆகலாம் என்பதைப் பற்றியும் ஜூனியர் விகடனில் ஒரு விரிவான கட்டுரை வந்திருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததால், ஜெயேந்திரர் மீதான வழக்கு நீர்த்துப் போய்விடும்; அதில் அரசு சாட்சிகள் எல்லாம் பல்டி அடித்துவிடுவார்கள்; வழக்கை விசாரித்து வந்த எஸ்.பி.பிரேம்குமார் மாற்றப்பட்டார்; அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் பயந்து போய் இருக்கிறார்; அவருக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை விலக்கிவிட்டால் அவர் நிலைமை என்னவாகும்; குற்றம் சாட்டப்பட்ட அப்பு தி.மு.கவின் வி.ஐ.பி ஒருவருக்கு வேண்டப்பட்டவர்; அவர்மேல் இருக்கும் வழக்கு பிசுபிசுத்துவிடும், வெளியே வந்துவிடுவார். - இப்படி எல்லாம் ஜூ.வி எழுதியிருக்கிறது.

யோசித்துப் பார்த்தால் செம காமெடியாக இருக்கிறது:

- சங்கரராமன் கொலையான பின், அதில் பெரிதாக அரசு ஒன்றும் ஆக்ஷன் எடுக்கவில்லை.

- அப்போது, கருணாநிதி, போராட்டம் செய்யப் போவதாகவும், இதை ஒரு பெரிய விஷயமாக கிளப்பப்போவதாகவும் சொன்னார்.

- உடனே, அ.தி.மு.க அரசு ஜெயேந்திரரை கைது செய்தது. வழக்கு போடப்பட்டது.

- தி.க தலைவர் வீரமணி, மூச்சுக்கு முன்னூறு தடவை ஜெயலலிதாவை பாராட்டி, "சங்கராச்சாரி"யை கொலைகாரர் கொலைகாரர் என்று சொல்லி மகிழ்ந்தார்.

- இப்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் இந்த வழக்கு நீர்த்துப் போகுமாம். அதாவது, நீதிக்காக போராட்டம் செய்யப் போவதாக சொன்ன கருணாநிதி, இப்போது இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவாராம்.

- வீரமணி இப்போது தி.மு.க அணியில். "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை" கருணாநிதி எடுத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். அடுத்தது, ஜெயேந்திரர் மீதான வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கும் நன்றி சொல்வாரா? இல்லை மீண்டும் அ.தி.மு.க அணிக்குப் போவாரா?

தலை சுற்றுகிறதா? என்னவோ போங்க!

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



7 comments: to “ ஜெயேந்திரர் வழக்கு