எங்கும் தயாநிதி, எதிலும் தயாநிதி

இந்த தயாநிதி மாறன் இல்லாத இடமோ, கூட்டமோ, போட்டோவோ இல்லை போலிருக்கு. நேத்து பி.டி.ஆர் மரணத்துக்கு கலைஞர் அஞ்சலி செலுத்தின போட்டோ, தினகரன் முதல் பக்கத்திலே.. கலைஞர் பக்கத்திலே தயாநிதி மாறன்! தயாநிதி மாறன் பி.டி.ஆர் கூட எந்த அளவுக்கு அரசியல் பண்ணியிருக்காரு?

அதாவது பரவாயில்லை, ராஜீவ் காந்தி இறந்து போயி பதினஞ்சு வருஷம் ஆச்சாம். அதுக்கு சன் டி.வி செய்திகளில் ஒரு கவரேஜ். ராஜீவ் போட்டோ காட்டலை, சோனியா வீடியோ காட்டலை, அட, ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பி மாதிரி காங்கிரஸ்காரர்கள் ஏதோ உறுதிமொழி எடுத்துட்டாங்களாமே, அதையும் காட்டலை. அப்புறம், வேற யாரு? தயாநிதி மாறன் தான். அவரு ராஜீவ் காந்தி பத்தி ஒரு மீட்டிங்ல்ல பேசறதை மட்டும் விலாவாரியா காட்டினாங்க. "நேருவின் குடும்பம் நாட்டிற்காக நிறைய தியாகஙளை செய்துள்ளது"ன்னு ஸ்டேட்மெண்ட் எல்லாம் விடறாரு.

அட ராமா, ராஜீவ் காந்தி கொலையிலே தி.மு.கவின் எல்.டி.டி.ஈ ஆதரவும் ஒரு காரணம்னும், அதனால அந்த தேர்தலே கலைஞர் செமத்தையா தோத்ததும், முன்னாடி இவங்களை "நேரு குடும்பம்" எமர்ஜென்சி காலத்திலே லாடம் கட்டி அடிச்சதும், ரெண்டு வருஷம் முன்னாடி கூட பி.ஜே.பியோட கூட்டணி வச்சுக்கிட்டு இவங்களுக்கு எதிரா பாலிடிக்ஸ் பண்ணினதும், எல்லாம் மறந்து போச்சு போல. தயாநிதி மாறன் மூலமா தான் ராஜீவ் காந்தி நினைவு தினத்தைப் பத்தி நமக்கு தெரியணும் போலிருக்கு.

ஆனா ஒண்ணு, இந்த மாதிரி தயாநிதி மாறனை முன்னிறுத்தறது, ஒரு பெரிய ஐடியா வச்சுக்கிட்டு தான் தெரிஞ்சே செய்யறாங்க (ஸ்டாலின் வயத்திலே புளி?). எதுக்கு இந்த ராஜதந்திரம்னு தான் போகப் போகத் தெரியும்.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



8 comments: to “ எங்கும் தயாநிதி, எதிலும் தயாநிதி