ஆண்டி-போண்டி கதை

ஒரு ஊருலே ஆண்டி, போண்டின்னு ரெண்டு பேரு இருந்தாங்களாம். ஆண்டிக்கு கிரிக்கெட்டுங்கற விளையாட்டைக் கண்டா சுத்தமா பிடிக்காது. ஊரு முழுக்க 'கிரிக்கெட்டைப் பரப்புபவன் அயோக்கியன், கிரிக்கெட் விளையாடுபவன் காட்டுமிராண்டி. தினமும் கிரிக்கெட் ஆடறதாலே, சோறு கிடைக்குமா' அப்டீனுலாம் கரித்துண்டாலே கிறுக்கறது தான் அவனோட வேலை! போண்டியைப் பத்தி சொல்லவே வேண்டாம்....'கிரிக்கெட் விளையாடறவன் எல்லாம் திருடன்' அப்படீனு டயலாக் உட்டுட்டு, 'அட..இதை நான் சொல்லலைங்க, ஜெ·ப்ரி பாய்காட்டும் இதையே தான் சொல்லியிருக்காரு' அப்படீன்னு உட்டாலங்கடி அடிக்குற ஆளு! அது மட்டுமா, 'கிரிக்கெட் பேட்டோட மக்களைப் பார்க்கும் போது, எனக்குக் கண்லே கண்ணீர் வருது'னு செண்டி போடற ஆளு, இந்த போண்டி! ஆனா, இவங்க ரெண்டு பேரும் இப்படி சொல்லிக்கிட்டே இருந்தாங்களேயொழிய, கிரிக்கெட் விளையாட்டு ஜோராத் தான் நடந்துக்கிட்டு இருந்தது. அதை எல்லாரும் நல்லா ரசிச்சாங்க, தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்குப் போனாலும் கூட, கிரிக்கெட் பாக்குற கூட்டம் குறையலை.


ஆண்டி, போண்டிக்குக் கிரிக்கெட் இப்படி ஆயிட்டு வர்றது கொஞ்சம் கூட புடிக்கலை. அவங்க ரெண்டு பேரும் என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, சொல்லி பார்த்தாங்க....ஆனா, கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் இந்தக் காதுலே வாங்கி, அதை ஆசன வாய் வழியா காத்தா வெளியே விட்டுக்கிட்டு இருந்தாங்க! ஆண்டி போண்டிக்கு அப்ப தான் திடீர்னு ஒரு ஐடியா வந்துது. 'கிரிக்கெட் விளையாடற இந்திய விளையாட்டு வீரர்கள் எல்லாம் இனிமே நீலக்கலர்னு இல்லை, எந்த சட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம்!' அப்டீனு ஒரு ஸ்டேட்மண்ட் விட்டாங்க. கிரிக்கெட் ரசிகர்களுக்கெல்லாம் ஒரே கடுப்பு, "டேய்...நாங்க என்னவோ பண்ணிக்கறோம். ஒங்களுக்கு தான் கிரிக்கெட்டைக் கண்டாலும் ஆவாது, அதை விளையாடறவங்களைக் கண்டாலும் ஆவாது, நீங்க இன்னாத்துக்கு மூக்கை நுழைக்கிறீங்க?' அப்டீனு கேட்டாங்க. ஆனாலும், ஆண்டி போண்டி சளைக்காம, திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்லாமே, "இனிமே தமிழ்லே தான் கிரிக்கெட் காமெண்டரி சொல்லணும்" அப்டீனு திடீர்னு ஒரு ஸ்டேட்மண்ட் உட்டாங்க. அதுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சில பேரு, "ஆண்டாண்டு காலமா கிரிக்கெட் கமெண்ட்ரி இங்கிலீஷ்லே தான் சொல்லிப்புட்டு வர்றது வழக்கம். தமிழ்லே சொல்றதை யாருமே தடுத்தது இல்லை...அதையும் சொல்லலாம், சொல்லிக்கிட்டு தான் இருக்கோம்" அப்டீனு பதில் சொன்னாங்க.


இருந்தாலும், ஆண்டி போண்டிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாவே படலை. அவங்களைப் பொறுத்தவரைக்கும், கிரிக்கெட்டை ஏதாவது நோண்டிக்கிட்டே இருக்கணும். இவங்க ஏன் டென்னிஸ், ஹாக்கி,புட்பால் போன்ற மத்த விளையாட்டுலே இது மாதிரிலாம் எடக்கு மடக்கா பிரச்சினை பண்ண மாட்டேங்குறாங்க, அப்டீனு ஒரு சில பேருக்கு கேள்வி இருந்தது. அந்த விளையாட்டுலே எல்லாம் கையை வெச்சு, வாயை விட்டா...அடுத்த நாள் ஆண்டி போண்டியாகி, போண்டி ஆண்டி ஆயிடுவார்னு அவங்களுக்குத் தெரியும்.


நெலமை இப்படியே போய்க்கிட்டு இருக்க, ஒரு நாள் போண்டிக்கு ஜாக்பாட் அடிச்சுது. அதாவது ரோட்டுலே தேமேன்னு நாலஞ்சு பிரெண்ட்ஸோட போய்க்கிட்டு இருந்தவருக்கு, ராஜாவைத் தேர்ந்தெடுக்குற மாலையோட யானை வந்துக்கிட்டு இருக்கறதைப் பார்த்து ஐடியா தோணுச்சு. ஓடிப்போய் யானைக்கொட்டாய்லே நுழைஞ்சு, வாழைப்பழம், வெல்லம் இதெல்லாம் எடுத்துட்டு ஓடி வந்து, 'நீ எனக்கு மாலை போட்டீன்னா, ஒனக்கு இதெல்லாம் தர்றேன்'னு ஆசை காட்டினாரு. பாவம், அந்த யானைக்கு வாழைப்பழம், வெல்லம் எல்லாம் அதோட கொட்டாய்லேந்து எடுத்துட்டு வந்துதுன்னு தெரியாம...மாலையை அரை குறையா, போண்டி கழுத்துலே போட்டுடுச்சு. போண்டிக்கு ஒரே குஷி...ஆண்டிக்கும் தான்! போண்டி ராஜாவான உடனே, மூணாவது நாள் போட்ட சட்டம் என்ன தெரியுமா,"இனிமே கிரிக்கெட் வீரர்கள் எந்தக் கலர் சட்டை வேணும்னா போட்டுக்கிட்டு ஆடலாம்!" ஒரு டென்னிஸ் ரசிகனுக்கும், ஹாக்கி ரசிகனுக்கும் இருக்கற சூடு, சொரணை கிரிக்கெட் ரசிகனுக்கும் இருந்ததால, " நீ யாரு, கிரிக்கெட்லே கையை வைக்க? கிரிக்கெட்டுலே எதை மாத்தணும், எப்படி மாத்தணும், எதுக்காக மாத்தணும், எங்கே மாத்தணும்னு கிரிக்கெட்டைப் புடிக்கற கோடிக்கணக்கணக்கான மக்கள் முடிவு பண்ணிப்போம். நாங்க கோவணத்தோட கூட ஆடுவோம்..அவ்ளோ ஏன் முண்டக்கட்டையாக் கூட கிரிக்கெட் ஆடுவோம். அது பத்திலாம் பேசுறதுக்கு ஒனக்கு எந்த ரைட்ஸ¤ம் கெடையாது! ஒனக்கு தில்லு இருந்தா, டென்னிஸ்லே இதை மாதிரி மாத்த வேணாம்..ஒரு ஐடியா சொல்லிப் பாரேன்!' அப்டீனு கேட்டுடுவோம்னு நெனைச்சாங்க. ஆனா, இவங்க என்ன பண்ணி, என்ன ஆகப் போவுது....இவனுங்க ரெண்டு பேரும் தலைகீழா நின்னாலும், கிரிக்கெட் ஒண்ணும் ஆவப்போவறதில்லை. இவங்க அப்பனுக்கு அப்பனாலேயே அழிக்க முடியாத கிரிக்கெட், ஆண்டி போண்டியாலேயா அழிஞ்சுடப் போவுது? ஆண்டி போண்டியோட நோக்கம், 'கிரிக்கெட்டுலே கலர் சட்டையைக் கொண்டு வர்றது இல்லை - கிரிக்கெட்டுலே இப்படி எதையாவது நோண்டி, சொறிஞ்சு கிரிக்கெட் ரசிகனுங்க எல்லாம் அடிச்சுக்கிட்டு, கிரிக்கெட்டையும் ஒரு வழியா ஊத்தி மூடணுங்கிறது தான்' - அது நடக்காதுடி, நடக்கவே நடக்காது!- மைக்செட் முனுசாமி


பி.கு:-
நீங்க எதையாவது நெனைச்சுக்கிட்டு, எதையாவது புரிஞ்சுக்கிட்டீங்கன்னா...எனக்கு ஒண்ணும் தெரியாது! இது அக்மார்க் ஆண்டி-போண்டி கதை.

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories30 comments: to “ ஆண்டி-போண்டி கதை

 • KITKAT

   

  Indha maadhiri oru googlya naan paathadhae illa.


 •  

  vittu pinnuraaru mikeu :)

 • Anonymous

   

  /ஆண்டிக்கு கிரிக்கெட்டுங்கற விளையாட்டைக் கண்டா சுத்தமா பிடிக்காது/

  தப்பு..அவன் வீட்டின் முன்னாலேயே ஒரு கிரவுண்டு உண்டு.தினமும் வெளியே கிளம்பும் போது அண்ணன் ஒரு ஓவர் ஆடிட்டுத்தான் போவார்.


  /'கிரிக்கெட் விளையாடறவன் எல்லாம் திருடன்' அப்படீனு டயலாக் உட்டுட்டு, 'அட..இதை நான் சொல்லலைங்க, ஜெ·ப்ரி பாய்காட்டும் இதையே தான் சொல்லியிருக்காரு' அப்படீன்னு உட்டாலங்கடி அடிக்குற ஆளு! /

  அப்படீன்னு சொல்லியே அவனுங்க பசங்களுக்கெல்லாம் 'கிரிக்கெட் விளையாடறவன்' குடும்பத்துல்ல பொண்ணு எடுத்தவன்.

  /ஏன் டென்னிஸ், ஹாக்கி,புட்பால் போன்ற மத்த விளையாட்டுலே இது மாதிரிலாம் எடக்கு மடக்கா பிரச்சினை பண்ண மாட்டேங்குறாங்க, அப்டீனு ஒரு சில
  பேருக்கு கேள்வி இருந்தது. அந்த விளையாட்டுலே எல்லாம் கையை வெச்சு, வாயை விட்டா...அடுத்த நாள் ஆண்டி போண்டியாகி, போண்டி ஆண்டி ஆயிடுவார்னு அவங்களுக்குத் தெரியும்/

  ஆனா அங்கெல்லாம் போய் பந்து 'பொறுக்கி' போடுவாங்க..

  /யானைக்கொட்டாய்லே நுழைஞ்சு, வாழைப்பழம், வெல்லம் இதெல்லாம் எடுத்துட்டு /
  மாம்பழத்தையும் சேர்த்துக்க..

  /கிரிக்கெட்டுலே இப்படி எதையாவது நோண்டி, சொறிஞ்சு கிரிக்கெட் ரசிகனுங்க எல்லாம் அடிச்சுக்கிட்டு, கிரிக்கெட்டையும் ஒரு வழியா ஊத்தி மூடணுங்கிறது தான்' - அது நடக்காதுடி, நடக்கவே நடக்காது! /

  அவனுங்க உண்மையான ஆசையும் அதுதான்..ஒரு பேச்சுக்கு மூடினால் கூட இவனுங்க பொழப்பு என்ன ஆவறது..

  அன்புடன்
  மயா


 •  

  மைக்செட் முனுசாமி,
  உங்கள் பதிவு மிக அருமை. உங்களுக்கு நான் தரும் பட்டம் "வலைமாமணி".

 • Anonymous

   

  very stupid..

 • Anonymous

   

  They cannot poke their noses into tennis and hockey because they are not the caretakers of the stadia in which those games are played. Those stadia are managed by individual patrons. However, the cricket stadia are so many, so old and so huge, that it is impossible for individual patrons to take care of those. It has to be managed by Aandi/Boandi, whether they like it or not. Since they are managing those stadia, they have every right to say what color dress the playes should wear, if they are playing in those stadia.

 • Anonymous

   

  "Those stadia are managed by individual patrons"
  Can you tell us who are those individual patrons?
  The sincere question asked in the article is 'Why aandi-bondi who has so much of hate against Cricket is trying to revolutionize Cricket without even discussing with Cricket Scholars or Cricket fan's feelings?'
  The article is very clear in its intentions but your capsule reply is not clear. Please clear us with a vivid explanation. We are all here to listen!

  The first anonymous who said 'Very stupid'. Its greater stupidity to say very stupid without even explaining why you think the article is stupid!

 • Arvindh

   

  Aye yarappa nee...pinni edukkare..
  Who r u???1 of the best post in recent times..

  Endha nimishathulendu naan un ezuthukku adimai...

  Good show keep it up...sensible and sattire..


 •  

  I am the blogger that spoke about the 'individual patrons'. Henceforth, you can refer to me as 'thamizh thambi'.

  Responding to the post... Don't mistake my posting as endorsing Aandi/Boandi's (especially Aandi's) policies towards cricket. It is true that they have no guts to talk about other sports. But as far as chosing a color for the dress, they have every right because they indeed manage the stadia.

  I don't know if other sports have a restriction on (dress) color. But if Aandi indeed manages stadia of other prominent sports, they should bring such a rule there as well. Cricket is a good starting point because it is a sport played by the majority.


 •  

  யப்பா... சூப்பரு!


 •  

  கெளப்பிட்டிங்க... தமிழ்மணம் ஸ்டேடியத்திலே கிரிக்கேட் ஆட மாட்டிங்களா

 • Cricketer

   

  Cricket game is similar to sea-saw.
  ioio nee mele poitiye - cricketai amukalam nu amukina, hehe.... marupakkam mela varumgoooo...

 • gavaskar.

   

  Joke1: The cricket stadia are so many, so old and so huge, that it is impossible for individual patrons to take care of those...
  -- so football stadiums are brand new. they are small...individual patrons can manage it...

  Joke 2: they have every right because they indeed manage the stadium. - dohda one more shop coconut broken for a cricketer on the way...

 • Arvindh

   

  "they have every right because they indeed manage the stadia."

  Will you care to explain what did u mean by "they manage the stagia"

  Do u think stadia manager or even owner has the right to enforce dress code.

  it is the sole discretion of players..

 • Arvindh

   

  a. Nejammave cricket vilayadaravan, pakkaravan muttall than

  b. Cricket nala nidham soru kidaikadhu than

  c. Cricket comentry tamilla solrathu kuda nalla vishayam than..

  d. Cricket nera(time) virayam than

  ana aandi bondi motive enna
  Definetely not these

  1. Improve Cricket
  2. Enhance Viewers pleasure
  3. Reduce irregularities in cricket

  Sensible people know aandi bondi's motive. Athuthan prachanaiya erukku..athuthan kadupethuthu...

  ana onnu aandi bondi madhiri alungala genuina a, b, c ,d pathi solravanukku madhipillama poiduthu..

  nama than elavasa colour tv la cricket pakkaravangalachee..avanukku mela namma..ennathai solla enga poimuttikka..

 • Arvindh

   

  "அப்பனுக்கு அப்பனாலேயே "

  Vengayathai thane solringa mikesett


 •  

  "Do u think stadia manager or even owner has the right to enforce dress code. it is the sole discretion of players.."

  I beg to differ. Owners and managers have the right to enforce dress code. It is not the player's discretion. Do you think Rahul Dravid can wear a green dress in the next game? He is bound by the code put in place by Indian & World cricket's managing trustee, BCCI and ICC resply.

 • Nanda

   

  Brilliant article. The best one in recent times.

  Its irrefutable that aandi bondi don't like cricket and they tell all cricketers are stupid. If anyone is saying 'no', go refer your facts.

  Isn't it a blatant lie that cricket is not managed by any patrons. then who decided the games rules and goals, was it done by aandi and bondi or their ancestors. Cricket is evolving by its own. Truth is aandi/bondi wants all cricketers to leave cricket and to pocket the wealth of cricket association. Ofcourse, why wudn't tennis and hockey players support aandi/bondi if they donate cricket grounds to play hockey and tennis and if they invest cricket revenue in promoting tennis and hockey.

  It becomes clear now with some replies above that aandi/bondi indeed have made some cricketers to support them from inside, which is the sad part of cricket. But this game has seen even appan paattans of aandi bondi and these screams are like a dust in the foot.

 • Nanda

   

  "Nejammave cricket vilayadaravan, pakkaravan muttall than"
  oru pechhukku tennis veleyadaravan muttall-nu solli paaru, onnoda moolaya kazhatti kaila koduthuruvaan.
  Cricketer muttala irundalum, onakkum aandi bondikkum enna vela.
  Munnadi cricket-nala thaan thamizan thalai nimindu ninnaan, ippa inda maadiri 'thamizan'nungalaala, thamizan velila thala kuninju nikkaraan. AANAA, cricket ennikkume irukkum.


 •  

  Wonderful Piece. Aandi/Bondi rendu peru veetilayum cricketa rachichu pakuranga... Aandiyoda pullai kuda publica cricket stadiyum poyi cricket pakkuran... Ana aandi mattum eppavum / yeppavum cricketa thittikittae iruppar. Tennis vilayaduravan kuda cool saapiduvar... Evarayellam pattam suttina yaanaia soolanum...

 • Anonymous

   

  I am looking at this post differently....this has nothing to do with cricket or hockey or any game...this has reference to the posting "Society Splitting Rodents" and thats the reason the PS is deliberately in....

 • Anonymous

   

  I can understand your frustration on the recent happenings. But please understand that times have changed. Old cricket rules are not fair enough for all players. That is why this kind of rule changes are required. Just because it is done 1000's of years in that way, it does not mean that it is right. If you dont change we will change.

 • Anonymous

   

  The problem is not the CHANGE. The people who are projecting themselves as changing this has no right to even discuss this CHANGE. This Change is already ordered by Court, you see!

 • Anonymous

   

  ayyoooooooo... pinitenga thalaiva.Indha maadri oru satire article parthu romba naal aachu.
  indha aandi bondi olindhal than tamilagathirku oru vidivu pirakkum.adu koodiya viraivil nadakum.

 • Anonymous

   

  Mikeset aNNa, pinnitteengaNNa. Keep it coming..

 • Anonymous

   

  A very nice and appropriate article of the hour. I just wonder what the heck this Aandi/Boandi will do when their heirs are playing cricket? They do play and when the press is eyeing on them and trying to capture fotos they were stopped by the associates of Aandi.Boandi. There are lot many thinks to worry about... Is Cricket the main target for these cheap--- (read politicians)


 •  

  pattaya kellaparenga thalaivare!!!!!!!!!!!!.satire at its best... True to every word!!!!!!!!

 • Anonymous

   

  I have been looking for sites like this for a long time. Thank you! »

 • Anonymous

   

  I have been looking for sites like this for a long time. Thank you! film editing schools

 • Anonymous

   

  Who knows where to download XRumer 5.0 Palladium?
  Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!