எதிரும் புதிரும்

http://epaper.dinamalar.com/Web/Article/2006/05/13/001/13_05_2006_001_009.jpg

ஒரு ஜனநாயக அரசில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி எப்படி செயல் பட வேண்டும் என்று பத்தி பத்தியாக பேசுவதும், எழுதுவதும் வாடிக்கையாகக் கொண்ட கலைஞர் இன்று தங்கள் அரசின் எதிர்க்கட்சி வலுவாக இருப்பதைக்கண்டு என்ன சொல்கிறார் ?

"நான் மகிழ்ச்சியோடு பதவி ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோதே அவர்கள் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எதிரே விஷப் பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டும்"

ஆக, ஊருக்குத் தான் உபதேசம். தனக்கென்று வரும்போது தள்ளாடுகிறது. ஒரு பழுத்த அரசியல் வாதி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் ஆகப் போகும் ஒரு அரசியல் தலைவர், தம் தொண்டர்களுக்கு கூற வேண்டிய செய்தியா இது ? நேற்றைக்குத்தான் "எங்கள் அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடு படாது" என்று பேட்டி அளித்தார். இன்று விஷப் பாம்புகள் என எதிர்க்கட்சியினரை வர்ணிக்கிறார்.

இந்த நேரத்தில் இரு விஷயங்களை குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

(1) சோனியாவை வாஜ்பாய் நடத்திய விதம்
(2) பிரமோத் மகாஜனுக்கு பிற அரசியல் தலைவர்கள் சூட்டிய இறுதிப் புகழாரம்.

வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த போது, சோனியாவிற்கு உரிய மதிப்பு தந்து, பெரிய தலைவர்கள் வரும்போதெல்லாம், அவரை அழைத்து கலந்து பேசுவது, என்று அரசியல் நாகரிகத்தை காத்தவர் வாஜ்பாய். சோனியா வெளி நாட்டவர் என்ற முத்திரை தவிர, வேறு எந்த விதத்திலும் இவர்கள் தரம் குறைவாக பேசியது இல்லை. அது போல, சோனியாவும், வாஜ்பாயை பற்றி என்றும் தரக் குறைவாகப் பேசியது இல்லை. அதுவல்லவொ நாகரிகம்? தற்போது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மீது கட்சி சார்பின்றி எல்லோரும் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர். அவரை பற்றி யாரும் தரக்குறைவாக பேசியதாக எந்த நாளேடும் செய்தி வெளியிடுவதில்லை.

அது போல, இப்போது பிரமோத் மகாஜன் இறந்த உடன், அவருடைய பரம அரசியல் வைரியான சரத் பவார் மேடையில் அவருக்கு புகழாரம் சூட்டி, தன் கண்ணியத்தையும் , மகாஜன் நடந்து கொண்ட விதத்தையும் உறுதிப்படுத்தினார்.

கல்வி வளம் மிக்க தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது ? ஒரு ஆட்ச்சிக்காலத்தில் அம்மையாரை துகில் உரிந்து மானபங்கப் படுத்தினர். அதற்கு பதிலடியாக நள்ளிரவில் கைதாக்கி ரோட்டில் கொண்டு நிறுத்தினார் அந்த அம்மையார் (அந்த வடுக்கள் மாறப் போகிறதா ?) . "கழுதை விட்டையில் முன் விட்டை என்ன பின் விட்டை என்ன " என்று ஒரு தமிழில் ஒரு வசனம் உண்டு. இப்படி எவன் வேட்டியை உருவலாம், எவள் புடவையை உரியலாம் என்று அலைகின்ற நம் தமிழ் நாட்டில், யாரை நம்பி ஓட்டுப் போடுவது ? சரி அப்படியே போட்டு தொலைத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சீறிக்கொண்டு எப்போது கவிழ்க்கலாம் என்கிற சிந்தையில் ஆட்சி செய்தால் நம் நாடு எப்படி உருப்படுவது ?

தமிழில் ஒரு வினோதம் : "வாக்கு அளித்தவன்" என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு.

வாக்கு அளித்தவன் = ஓட்டு போட்ட்டவன்
வாக்கு அளித்தவன் = வாக்குறுதி அளித்தவன் = அரசியல்வாதி

முதலாமவன் வாழ இரண்டாமவன் உழைக்க வேண்டும். முதலாமவன் தன் கடமையை செய்து விட்டான். இரண்டாமவன் தன் கடமையை செய்யாமல் எங்கேடா சண்டை போடுவது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறான். இப்படி எதிர் அணியில் இருந்து கொண்டு மக்களுக்காக உழைக்கிறேன் என்று பொய் சொல்லும் இரு கட்சிகளும் நல்லது என்ன செய்வார்கள் என்பது பெரிய புதிராகத் தான் இருக்கிறது. பகைமையை மறந்து நாட்டுக்காக உழையுங்கப்பா !

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories5 comments: to “ எதிரும் புதிரும்


 •  

  hmmm.nalla point.avvangallukku pavam eddhai patthi ellaam yosikka time errukaddhu :(

 • Anonymous

   

  மொதல்ல மிருக ஜாதின்னாரு, இப்ப என்னாடான்னா பாம்புகள் என்கிறார் ஒரு வேள அனிமல் ப்ளானர், டிஸ்கவரி சானல் எல்லாம் அதிகமா பாப்பாரோ? இவரப் பத்தி ஒரு பாட்டு இருக்கு 'பாளயங்கோட்டைச் சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே' அப்பிடின்னு, பாளயங்கோட்டை சிறையில் பாம்பு எல்லாம் கிடையாது இவர் வேற எதையோ பார்த்து பாம்புன்னு சொல்லிட்டார்னு சொல்லுவாங்க. அதெப்படி இவ்வளவு எம் எல் ஏக்களையும் இவர் அதுக்குள்ள பார்த்துட்டாரா? எப்படி தெரிஞ்சது பாம்புன்னு? பாம்பின் கால் பாம்பறியும். இவரை விடவா ஒரு விஷ ஜந்து தமிழ் நாட்டில் உலவ முடியும்? அத்தனை விஷப் பாம்புகளும் வந்து கடிச்சாக்கூட இவருக்கு விஷம் ஏறாதே, ஏற்கனவே உடம்பு பூரா விஷம் அல்லவா இருக்கு, இவரெல்லாம் எத்தனை வயசானாலும் மனிதனாக மாறவே மாட்டார், திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?


  Anaconda


 •  

  Fantastic.

  - Vaitheegan.


 •  

  ஏமாறுகிறவர்கள் (வாக்காளர்கள்) இருக்கும்வரை எமாற்றுகிறவர்கள் (அரசியல்வாதிகள்) இருக்கத்தான் செய்வார்கள்.

  கருணாவின் குடும்ப அரசியலிடம் காங்கிரஸ் குடும்ப அரசியல் தோற்றுவிட்டது. தி.மு.க. என்ற பெயரை க.கு.மு.க. (கருணானிதி குடும்ப முன்னேற்ற கழகம்) என்று மாற்றிவிடலாம்.


 •  

  Already there is news about DMK workers/local leaders creating trouble in N Madras against ADMK and other party workers (news in yday's dinamalar edition).You can't straighten a dog's tail :(