நடந்தவை, நடப்பவை!

நடந்து முடிந்த தேர்தலில், திமுக கூட்டணி வென்றுள்ளது...வாழ்த்துக்கள். ஒரு தேர்தலில் கொள்கைகள் என்ன, செய்ய இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் என்ன, கடந்த ஆட்சியில் நடந்த கோளாறுகள் என்ன, போன்றவற்றை வாதித்து, ஆட்சியைப் பிடிக்கும் காலம் போய்...என்னென்ன இலவசமாகக் கொடுக்கப்படும் என்று ஆசை காட்டி, குங்குமம் பாணியிலேயே இந்தத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சொல்லப்போனால், இது மிகப்பெரிய தவறான முன்னுதாரணத்தை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குறிப்பாக, பாமர மக்களை நோக்கி வீசிய இந்த பிரம்மாஸ்திரங்கள், எதிர்பார்த்த வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளது. படித்தவர்களிடத்தில் இது பெரிய அளவில் எடுபடவில்லை என்பதை, தேர்தல் முடிவுகளே ஜம்மென்று காட்டிக்கொடுக்கிறது. (டி.வியும், அரிசியும் அவர்களைக் கவருமென்று எதிர்பார்க்கவும் முடியாது. கம்ப்யூட்டர் கவர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது).சன் டிவியில் நேற்று நக்கீரன் கோபால் பேசும் போது, "மதுரையிலே ஒரு அம்மா கை சின்னத்தைப் பார்த்துட்டு, ஓட்டுப் போட மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. வெளிலே பையன் ஒருத்தன் பார்த்துக் கேட்டவுடனே, 'சூரியன்லே போட்டா தானே டிவி கெடைக்கும்னு சொன்னாங்க'னு சொல்லவும், அந்தப் பையன் சூரியனும், கையும் சேர்ந்து தான் போட்டி போடுது...போய்க் கை சின்னத்துலேயே போடுங்கன்னு சொல்லியிருக்கான். அந்த அளவுக்கு டிவி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு" என்று சொன்னார். அது எத்தகைய தாக்கம், யார் மீது ஏற்படுத்தியிருக்கிறது, என்பதையெல்லாம் இதை விட அழகாக சொல்ல முடியாது! அதாவது, அரசியல் மீதான ஆர்வமோ, தேர்தல் நடைமுறைகளோ, எதிர்கால நலன்களைப் பற்றியதொரு விழிப்புணர்வோ இல்லாத ஏழை மக்களை..இந்த டிவி அறிவிப்பும், அரிசி அறிவிப்பும் அடியோடு அசைத்துப் பார்த்திருக்கிறது. அதற்காக அந்த மக்களைக் குறை கூட முடியாது...அவர்களை அதே போன்றதொரு நிலையிலேயே ஆணி அடித்து வைத்திருக்கும் இரு கழக அரசியலைத் தான் குறை சொல்ல வேண்டும்.


முதல்வர். ஜெயலலிதாவின் பிரச்சார முறை, அணுகுமுறை போன்றவையும் இந்தத்
தோல்வியிலிருந்தாவது மாறித் தொலைக்க வேண்டும். கூட்டணித் தலைவர்களான வை.கோவுடனும், திருமாவுடனும் ஒரே மேடையில், ஒரு பொதுக்கூட்டம் கூட பேசவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை! அவர் வசித்துக் கொண்டிருக்கும் வானவீதியிலிருந்து இறங்கி வந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம், வீதியில் வரும் வேனிலிருந்தே இறங்கி பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றால் எப்படி? (இறங்கின சில இடங்களும், போட்டோகிராபர் சகிதமாக ஒரு போலித்தன்மை தெரிந்தது. இன்னும் மக்களோடு நெருங்கி வர வேண்டும், அந்த முயற்சியில் ஒரு உண்மை புலப்பட வேண்டும்). ஊர் ஊராக சென்று, புள்ளி விவரங்களைப் படிப்பதற்கு பெயர் பிரச்சாரமில்லை! ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சித் தலைவரான சோனியாவைத் திட்டுகிறேன் பேர்வழி என்று, பல படிகள் இறங்கிப் பேசியது போல...எதிர்கட்சியினரை வசை மழையில் நனைக்காமல் கண்ணியத்தைக் காத்ததற்கு ஒரு சபாஷ் சொல்லி வைக்கலாம். மற்றபடி, இது பத்திரிக்கைகள் கணித்தபடி 'மரண அடியோ', 'தர்ம அடியோ' இல்லை என்பதே அவருக்குப் பெரிய ஆறுதலாய் இருக்க வேண்டும். நாளையே காங்கிரசும், பா.ம.கவில் சிலரும் ஒத்துழைத்தால்....அரியணை ஏறவும், அல்லது ஒரு காங்கிரஸ் ஆட்சியோ அமையும் வாய்ப்பும் கூட இருக்கிறது என்ற உண்மையும் இந்தத் தேர்தல் முடிவுகளில் புதைந்திருப்பதைப் பலர் கவனிக்காமல் இல்லை! 96ல் இருந்த ஜெ.வுக்கும், 2001ல் பார்த்த ஜெ.வுக்கும் பல நல்ல வித்தியாசங்கள் ஆங்காங்கே தென்பட்டது. இனி இந்தத் தோல்வி மூலம், இன்னும் சில நல்ல மாற்றங்களும், பக்குவமும் அவருக்கு ஏற்பட்டால்....அவருக்கும், அவரது அரசியல் வாழ்விற்கும் நல்லது!


அதிமுகவோ, திமுகவோ...இவை இரண்டில் எது வென்றாலும், தோற்றாலும்,
அதற்கான காரணங்களை அட்டகாசமாக அடுக்கி வைக்க முடியும் என்ற உண்மையே, தமிழக அரசியலின் பலவீனம் தான். அதாவது காமராஜர் சொன்ன மட்டைகள், தமிழக அரசியலை இன்னும் குட்டையாகவே வைத்திருக்கிறது என்பது தான் கசப்பான நிதர்சனம். விஜய்காந்துக்கு விழுந்த ஓட்டுக்களில் பாதி, இந்த அரசியல் கலாச்சாரம் பிடிக்காதவர்களின் கோப வாக்குகள் தான். அதுவும் 'கூத்தாடி, ஒரு இரவு தங்க வைத்து விட்டு,சோறு போட்டு விட்டு அடுத்த நாள் அனுப்பி விட வேண்டும்' என்றெல்லாம் 'டாக்டர்' ராமதாஸ் நேரடியாக விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்தும், பல்லாயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் விஜய்காந்த் ஜெயித்திருக்கிறாரென்றால், வாக்களர்களின் கோப வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும். விஜய்காந்தின் வெற்றி பலரால் ஆர்வமாகக் கவனிக்கப்பட்டதும், இந்த வெற்றியானது சாதி அரசியலுக்கு சின்னதாய் ஒரு குட்டு (சம்மட்டி அடி என்றெல்லாம் சொல்லும் காலம் இன்னும் தமிழகத்தில் வரவில்லை!) வைத்திருப்பதும்...கடந்த தேர்தலின், சந்தோஷமான தருணங்களில் ஒன்று.


பா.ம.க, ம.தி.மு.க, வி.சி போன்றவை எல்லாம் இந்தத் தேர்தலில்
வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்களின் லட்சியங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் கொஞ்சமாவது
நடந்தேறியிருக்கிறது. மேற்கூறிய கட்சிகளில், பா.ம.கவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது.. அவர்களின் அடாவடி அரசியல் கொஞ்சம் இதனால் அடங்கினால் தமிழகத்திற்கு நல்லதே! குறிப்பாக நடிக, நடிகைகளை மிரட்டுவது, சினிமா தலைப்புகளில் தமிழ் பெயர் வேண்டும் என்று போராடுவது என்றெல்லாம் ஜல்லி அரசியல் நடத்துவதை விட வேண்டும். (ராமதாஸ் + திருமா) தமிழ் பாதுகாப்பு இயக்கமானது, சீரிய முறையில் தமிழைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பல வழிகள் இருக்கிறது. இவர்கள் நினைக்கும் சீர் திருத்தமானது, கல்விச்சாலையில் தொடங்கப்பட வேண்டுமேயொழிய, திரையரங்குகளில் அல்ல!


தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் விட்ட அறிக்கையில்,
'மாச்சர்யங்களை மறந்து எதிர்க்கட்சியானது அரசியல் நடத்த வரவேண்டும்' என்று வேண்டுகோள்
விடுத்திருக்கிறார். நேருக்கு நேர் பார்த்துக்கொண்டால், முகத்தைத் திருப்பிக்கொண்டு போகும் தலைவர்களின் நிலை மாற வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு, ஜெ.வும் ஒத்துழைத்து, கலைஞரும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். கடந்த கால சரித்திரத்தைப் பார்க்கும் போது, இரண்டு கட்சியினருமே அழகாகப் பேசி விட்டு, அடிதடியில் இறங்கும் வல்லமை படைத்தவர்கள். 'மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நீயே அந்த மாற்றமாக இரு' என்பது போல, வை.கோ வீடு தாக்கப்பட்டதற்கும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் முன்னிலையில் ஜூ.வி நிருபர் தாக்கப்பட்டதற்கும் கலைஞர் இப்போதே வன்மையாகக் கண்டித்து அறிக்கை விட்டு, அந்த மாற்றத்தை ஆரம்பித்து வைத்தாரேயானால் நன்றாக இருக்கும். ஜெயலலிதா பத்திரிக்கை நிருபர்களோடு நிறைய பேச முயற்சிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, கலைஞர் கொஞ்சம் பேச்சைக் குறைப்பதும் நல்லதாயிருக்கும். ஏனெனில் சில சமயங்களில், வார்த்தை ஜாலம், இலக்கிய நயமென்ற பெயரில் பல கருத்துக்களை சொல்லி விட்டு, அதை சமாளிப்பதற்கும், வாதம் செய்வதற்காக இன்னும் பல விஷயங்களை அடுக்குவதற்கும் நேரமும், சக்தியும் வீணடிக்கப்படுகிறது.கலைஞருக்குக் கிடைத்திருப்பது ஒரு அரிய வாய்ப்பு. அதாவது எண்பத்து மூன்று வயதில், அரியணை ஏறுவது என்பது மக்கள் அளித்திருக்கும் மிகப் பெரிய பரிசு. அதை அவர் அழகாய் உபயோகப்படுத்தி, பல நல்ல விஷயங்கள் செய்வாரேயானால், மக்களின் ஞாபக சக்தியின் மேல் பாரம் போட்டு...பல புண்ணியங்களைத் தேடிக் கொள்ளலாம். அதாவது அவரின் கடந்த காலத் தவறுகள் வெகு சுலபமாய் மறக்கவும், மன்னிக்கப்படவும் கூடுமென்று கூறுகிறேன். ஆனால், அவருக்கு முன்னால் ஆட்சி ஒரு சவால் என்றால், அவர் அளித்த வாக்குறுதிகள் மிகப்பெரியதொரு சவால். 'அண்ணா போல மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்று வாய் ஜாலங்களில் வர்ணஜாலம் காட்டி விட்டுத் தப்பிக்க முடியாது. மக்கள் இப்போது மிகத் தெளிவாக இருக்கிறார்கள். டி.வி போன்ற குறுகியகால சந்தோஷங்களை நிறைவேற்றுவது என்பது அவரே தேடிக்கொண்டதொரு சவால் என்றால், தமிழகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி, பல முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டியது அவர் கடமை என்றும் சொல்லலாம்.


இவை எல்லாவற்றையும் விட, கலைஞர் ஒரு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ பதவியில் இருந்து விட்டு, இளைஞரான ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து விலகுவது அவரது கட்சிக்கும், தமிழகத்திற்கும் நல்லது. உணர்ச்சி வசப்படாமல், கொஞ்சம் நிதானமாக அலசுவோம். ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது என்பது ஆண்டாண்டு காலமாய் திமுகவில் நடந்தே வருகிறது. என்ன தான், கலைஞர் இல்லை, இல்லை என்று இரண்டு முறை சொன்னாலும், மூன்றாவது முறையாக, 'ஸ்டாலினுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கிறது' என்று அவரே பொறுக்க முடியாமல் சொல்லி விடுவார். ஸ்டாலினும் மேயராக இருந்த போது, சுறுசுறுப்பாக செயல்பட்டு...நல்ல பெயர் வாங்கினாரென்பதும் மறுக்க முடியாது! விஜய்காந்த் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் இந்த நிலையில், ஸ்டாலினால் தான் அதை எதிர்கொள்ள முடியும்.எல்லாவற்றையும் விட, ஸ்டாலினிடம் கலைஞர் போல் வசீகரமான பேச்சுக்கலை எல்லாம் இல்லை. ஆனால், அவரிடம் நிர்வாகத் திறன் இருக்கிறது. எனவே, இது போன்றதொரு சூழ்நிலையில், முதல்வராகக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அவர் நல்ல பெயர் வாங்கினாலொழிய, வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை! நிர்வாகத்தில் சிறந்து விளங்கினால், வசீகரமான பேச்செல்லாம் தேவையும் இல்லை. சொல்லப்போனால், பேச்சுக்காக ஓட்டுப் போடும் காலமெல்லாம் மலையேறி விட்டது என்பதும் நிஜம். பேச்சுக்கலை வசீகரத்தின் ஒரு பகுதியே ஒழிய, வாக்குகளுக்கு முழுமுதற்காரணமாய் இனி இருக்க முடியாது. ஸ்டாலினால் நிர்வாகத் திறனால் மட்டுமே, அந்த வசீகரத்தை உருவாக்கிக்கொள முடியும் என்பது எனது கருத்து.


இது எல்லாவற்றையும் விட, திமுகவின் சிண்டு இப்போது காங்கிரஸின் கையில் என்பது தமிழக மக்களின் வாக்குகளினால் கிடைத்திருக்கும் ஒரு பெரிய விஷயம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற எக்ஸ்டிரிமிஸ்ட் காங்கிரஸ்காரர்களை சமாளித்து, திமுக அரசாங்கம் நடத்த வேண்டுமென்பது தமிழகத்திற்கு நன்மை பயக்கும். இப்போது எல்லாரும் புன்னகை, கை குலுக்கல் என்று மகிழ்ச்சியோடு இருந்தாலும், நாளடைவில் இந்த இரு கட்சியினரும் மாறுபடும் சூழ்நிலைகளும், சங்கதிகளும் நடக்க பல வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் காங்கிரஸ்காரர்கள் இந்த தமிழ், கற்பு போன்ற விஷயங்களை வைத்து அராஜகம் செய்ய விட மாட்டார்கள் என்பது அவர்களின் மேல் இருக்கும் மிகச்சிறியதொரு நம்பிக்கை. ஆனால், நாரோடு சேர்ந்த பூவும், நாறிப்போகாமல் இருக்க வேண்டும் என்பது பிரார்த்தனைகளில் ஒன்று.இந்தியாவிலேயே தமிழக வாக்காளர்கள் போல், ஒரு அக்மார்க் அசத்தல்காரர்கள் யாரும் கிடையாது என்பது இந்தத் தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை, ஆனால் மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும்...அதே சமயம், அந்த மாற்றமானதும், ஒரு கிடுக்கிப்பிடியோடு இருக்க வேண்டும், ஜாதி அரசியல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற பல உண்மைகளை, சர்வசாதாரணமாக பெரும்பான்மையான பொதுமக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இதெல்லாம், எப்படி அழகாக ஒவ்வொரு முறையும் தமிழகத் தேர்தல் முடிவுகளில் அழகாய் பிரதிபலிக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான சதவிகிதமும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. அடுத்த தேர்தலில், இது போன்ற இலவச அறிவிப்புகளையும், மக்கள் புறக்கணித்தார்களேயானால் நன்றாக இருக்கும். கடந்த காலங்களை வைத்துப் பார்க்கும் போது,அந்தக் காலமும் தமிழகத்தில் வரத்தான் போகிறது என்பதில் நம்பிக்கை நிறையவே இருக்கிறது.ஆக மொத்தம், 'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று நம்பி, புதிய அரசுக்குப் பூக்களைக் கொடுப்போம்.- மைக்செட் முனுசாமி

பி.கு:- எலெக்ஷன் டயத்துலே, நம்ம ஹாட் மச்சி ஹாட் மச்சிக்கு நீங்கள்லாம் படையெடுத்து வந்து அசத்திப்புட்டீங்க மக்கா...நெம்ப சந்தோஷம்! 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை' அப்படீங்கறா மாதிரி, யார் சொன்னா என்ன, சொல்லாட்டி என்ன...புள்ளி விவரங்கள் ஒங்களோட ஆதரவை சோக்காக் காட்டிக் கொடுக்குதே! சொல்லப்போனா ஹாட் மச்சி ஹாட் மட்டுமில்லை... இட்லி வடை, சாம்பார் மாபியான்னு, இந்த எலெக்ஷன்லே எல்லா பிளாகுமே கலக்கிப்போட்டுடுச்சு! அப்பப்போ வந்து கமெண்ட் போட்டு, அங்கங்கே எங்களைப் பத்திப் பேசி, லிங்க் கொடுத்த எல்லாருக்கும் 'சலாம் நமஸ்தே!' - வர்ட்டா அண்ணாத்தே! Did you listen this HMH song?

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories10 comments: to “ நடந்தவை, நடப்பவை!

 • Anonymous

   

  Mikeset ! Its been a long time since I read a fantastic tamil article like this.

  Nalla karuthukkal - well presented !

  Keep writing.

  Regards !

 • Anonymous

   

  Mikeset !!!
  Good analysis and fantastic, unbiased coverage of the elections.
  This election proved one point (beyond all the last minute freebie promises made)....Mr. Public is most powerful person...and their ballot is the ultimate...its a challenge for the next government to keep upto the expectations of the people.....
  Best wishes for the next government....


 •  

  First of all, I would like to thank you for your wonderful coverage of this elections. And the best part is: "Your have criticised the bad policies of all the political parties." This is a very good thing, which I do not notice in many other political blogs.

  Secondly, this article is very well analyzed and written excellently. But I disagree on your views on M.K. Stalin. I still feel that Stalin is not mature to take up a responsible position as the Chief Minister. If he wants to develop that maturity, he needs to be a people's man. The common people must start to realize that Stalin is a part of them. Only then, they will accept him as CM. A CM is the person, who should represent the entire state to the Union Government and try to get good funding for the development schemes in the state. Stalin needs to do a lot of ground-work on this area and he needs to develop his diplomatic communication skills.

  Lastly, as a common man, I only wish that rather than the freebies and the sky-high promises thrown away at the voters, the DMK government must try and improve the basic and essential needs of life like safe drinking water, electricity, employment, education and good roads for all people. Once people get these, they would be able to afford all the other amenities like TV, computers, etc. at thier own hard-earned money. This, I feel is the best way to improve the lives of the common people.

  And, I have once request: Please do continue your good posts even after elections on the other political issues in Tamil Nadu & India, because it is very rare to find unbiased reports and articles on the political issue on the Internet.

  Thanks once again for the HmH team.!!!

 • Anonymous

   

  Mikeset

  Karunanidhi called the oppostion MLAs as poisonous snakes. King Cobra is calling water snakes as poisonous snakes. He can stoop down to any extent. It will be better for Jaya's safety not to attend this assembly as Mu Kaa seems to be ready with sticks to kill the snakes. He will never change in his life time.

  WRITE ABOUT HIS 'POISONOUS SNAKES' ATTACK

  Thanks


 •  

  Hello! Thanks for your great coverage of the election and the results. It has been a long time since I read an unbiased opinion. I concur with your thoughts that Stalin should step up and become the CM. I actually thought that it might be a better move for Kalaignar to appoint Stalin as a Deputy CM, when the party positions are hot in the making and he could pass it off as for the good of the government, which in many true senses, it would be. He has covered a lot of administrative ground and has proved to be a good executor of plans. As for his lack of people skills, so was Chandra Babu Naidu whenhe became the CM. But the whole of India looked up to him as a powerful and efficient administrator once his plans started working.
  However, as there are 2 sides to a coin, it might also be better if DMK did not appoint him at this point as it would only prove all the opposition nay-sayers right, Vaiko being in the lead.
  I certainly hope some young blood takes up the reigns. Also, even though Stalin belongs to the DMK, he has never taken any branding stands like extremist Tamil Valarchi groups like PMK or Thiruma have. He doesnt seem to have too many hangups about caste based politics. With younger and more educated leaders will come a growing TN, moving away from these deprecating factors. Lets hope that by the next election, a stronger and younger force will be up for the challenge.
  Regards, Ramya Mani, Chicago, USA

 • Anonymous

   

  Here is the rating of the politicians in Tamilnadu based on the performance so far:

  1. Bill Clinton of Tamilnadu: Dayanidihi Maran (DM) – He is connecting with the old and the young, rich and the poor. He is the most sought person within DMK party for speaking in public meetings. He was invited not because he is the grandson of MK, but he comes across as a sincere politician, interacts with ordinary folks, and displays a demeanor of that of an educated young man capable of accomplishing things. He is not a old style great Tamil orator but he communicates well and connects with the public. He will be the next CM of TN 6 months to a year from now. He will contest in Chepauk constituency replacing his grandpa or he will become an MLC.
  I really don’t know whether DM has really threatened the Tatas or not. (Hey, Tom Delay - the Hammer was doing it for years in Washington exactly this - nobody called it that it is a crime even now). Threatening for a piece of his business is not a crime – it is a business tactic between monopolists. Even if it is true, to me, it is a positive point because he is not afraid of the giants. Tatas, Birlas and Ambanis of the world (and by the way they are not Gods that they should not be threatened) have became rich and monopolized various industries in the last 50 years (with the help from congress and BJP govts) exactly doing what DM is accused of. DM’s action in the Tata case may be unethical but not illegal. On the contrary, DM’s performance in the Centre (IT sector) for public good and inviting Bill Gates to Intel/Ericcson Chief to promote TN is a laudable act. If he does the same thing in TN as CM that would make TN a heaven for new ‘low’ and ‘high’ wage employment. I haven’t seen a single politician like him in any major parties in TN for his polished public relation and lobbying skills. (Even P Chidambaram lacks these lobbying skills.) This is a great asset for TN. Don’t underestimate it. Voters see him (DM) as their next CM. Therefore, I call DM as the Bill Clinton of TN because he clearly connects with the masses during this election. I do not relate the personal failures of Bill Clinton with that of DM of which he has none sofar.

  2. Mario Cuomo of Tamilnadu: MK Stalin – Had DMK won the election in 2001 he would have become CM. But not now. (Mario Cuomo lost his chance to become President of USA by not running in the weak Democratic primaries in 1992 when Clinton won.)

  3. Robert Rubin of Tamilnadu: P Chidambaram – Capitalist minded but forced to defend MK’s leftist DMK manifesto. (Robert Rubin – a capitalist treasury secretary of Bill Clinton defended some of the socialistic fiscal policies of Bill Clinton and succeeded while doing so)

  4. Howard Dean of Tamilnadu: Vijaya T Rajendar – A colorful speaker

  5. John Kerry of Tamilnadu: Jayalalitha - Finally, she displayed her weakness in political skills. You can’t endorse (indirectly) your opponent’s poll manifesto. You can’t be against it (Rs 2/kg rice) before you are for it (10kg free rice). This is the turning point for this election. Voters didn’t care about whether MK is going to give Rs. 2/kg of rice or not. They used this criteria to evaluate which politician is sincere or not. This major goof combined with the absence of friends surrounding JJ made her look insincere. Moreover, folks - in politics you need friends. (John Kerry lost it to Bush ever since he made the big flip-flop statement on a Senate War Funding vote)

  6. Al Gore of Tamilnadu - VaiKo – a colossal failure: I had high regard for the DMK MPs of the 1962-67 era. Annadurai, Murasoli Maran, Vaiko, Nanjil Manoharan, Era Chezhian, Dhandapani etc were all educated MABL lawyers and they were the only ones who spoke in the Lok sabha about “State-Autonomy” issues in those days. Compared to the then ruling congress party MPs, these guys were dedicated young guys who had enormous knowledge in the Center-State issues area. This VaiKo could have become a central minister along with Murasoli Maran under Vajpayee. He chose not to join the ministry even when his MDMK MPs became ministers. Had he joined and performed, he could have made a name for himself. But, he didn’t. He can’t blame MK for this. He had a direct contact with Vajpayee. Later, he could have become a Central minister again under Manmohan Singh. First he refused. Then when he wanted to become a minister, his quota was taken by DMK according to him. Why he didn’t utilize the opportunity when it was first given. He can only blame himself and he can’t blame MK for this again. Now he is envy of Dayanidhi Maran because he made a name for himself as a central minister. He is indecisive and consistently doesn’t make right political decisions (probably because of L Ganesan). That way he is a colossal failure. (AL Gore thought Howard Dean is going to win the Democratic primaries and so he endorsed him in the Deomocratic primaries. But, Howard Dean lost and so too Gore lost his political influence. Al Gore is a good Democratic party leader but he lacks political skills compared to Clinton)

  7. The Uncomparable: Muthuvel Karunanidhi: In spite of all the bad verbiage thrown against him over the years, a considerable percentage of voters who once supported him has come back to him because of his sincerity. At this age of 83, voters don’t think that he is doing it for personal gain or for his family business. The voters think that he is sincere and that is why he released a extreme leftist poll manifesto. These voters also think that he might deliver the promises either through his grandson or son.


 •  

  மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தை சன் டிவி ஒளிபரப்பினார்கள். அதில் பேசிய தயாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கையை ஒரு ரூபாய்க்கு தருவதால் மற்ற பத்திரிக்கைக்கு பொறாமை. அவர்களுக்கு என் பதில் 'பொறாமை' என்ற வார்த்தையை திருப்பி போடுங்கள் என்றார். பொறாமையை திருப்பிப் போட்டா "மை றா போ -மயிரா போ" அப்படீன்னு அர்த்தம். This is the politicak dignity, with which Dayanidhi Maran speaks..!!!

 • Anonymous

   

  What a great site Advertising internet marketing online nl 99 sheer mens swimwear

 • Anonymous

   

  Cool blog, interesting information... Keep it UP »

 • Anonymous

   

  This is very interesting site... Carolina payday loans Saco automobile insurance business health indiana insurance small web site design Auto lienholder insurance verification phone number Blue roses meaning Lamictal belgique Pillstore ionamin Keywords cialis review Ar pressure washer pumps