என்னாசை மைதிலியே..என்னை நீ கவுத்திட்டியேhttp://epaper.tamilmurasu.in/2006/may/01/7_4.jpg
நான் கலைஞரை குருவாக ஏற்றவன். சென்னைக்கு வந்தது முதல் தலைமுடி வெட்டுபவரைக் கூட மாற்றியது கிடையாது. கொள்கையையா மாற்றி விடுவேன் ?

- உங்களுக்கு தலைமுடி வெட்டுபவரே கிடையாது. எங்கே இருந்து மாத்துறது. அதோடு, கலைஞருடைய வழிகாட்டுதல் இதில் எல்லாம் உண்டா ? அவருக்கு தலையின் மேலே மைதானமாச்சுங்களே ?

தி.மு.க நட்சத்திரங்களை வைத்துக் கலை விழா நடத்துவதில்லை.

-சன் டிவின்னு ஒரு பெரிய 24 மணி நேர கலைவிழா இருக்கிறதை மறந்துட்டு பேசக் கூடாது அய்யா. அது மட்டும் இல்லை. உங்களையும் நெப்போலியனையும் வெச்சு கலைவிழா நடத்தி அதுல சிம்புவொ இல்லை உங்கள்ல ஒருத்தரோ "கவிரிச்சி" நடனம் ஆடுனா பிரளயம் உணாயிடாதா ?

அடுத்தவர் எழுதித் தருவதை நடிகைகள் படிக்கிறார்கள்

-யோசிச்சு தான் பேசுறீங்களா ? அது தானே அய்யா அவங்க தொழில் ? இயக்குனர் சொல்ற மாதிரி செய்யுரது அவங்க வேலை. என்ன..இப்பொ இயக்கம் அ.தி.மு.க. இயக்குனர் அம்மா. அவ்ளொதான்.

கலைஞர் காலடியை தொட்டு வணாங்கிய கைகள் வேறு யார் காலடியையும் தொட்டு வணங்கியதில்லை

- யோகா மாஸ்டர் : ஏம்பா ராஜேந்திரா, குனிஞ்சு உன் காலை ஒரு தடவையாவது நிதமும் தொடணும்பா. இல்லாட்டி உன் அசுரத் தொப்பை குறையாது. அது சரி, கொஞ்ச நாள் முன்னாடி ஜெவை ஆதரிச்சு ஏதொ பேசினியே அது என்ன ?

பர்கூரில் ஜெவை எதிர்த்து 40,000 ஓட்டு வாங்கினேன்

- வாங்கி தோத்தீங்க இல்லியா ? இதுக்கு ஒரு 40,000 ரூபா கையில வாங்கிகிட்டு, பேசாம அந்தம்மாவுக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம். ரெண்டு பேருக்கும் லாபம்.

எனக்கு ஒரு மைக் இருந்தால் போதும். ஜனங்களை அப்படியே ஆட வைப்பென்.

- என்ன பாடப் போறியளா ? "என்னாசை மைதிலியே..என்னை நீ கவுத்திட்டியே" அப்டின்னு ? உங்க புள்ளையை ஆட வெச்சு ரோதனை செஞ்சது பத்தாதுன்னு, ஊர்ல இருக்கிரவனை எல்லாம் ஆட வைப்பியளா ?

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories1 comments: to “ என்னாசை மைதிலியே..என்னை நீ கவுத்திட்டியே