ஹொய் ஹொய்னானாம்!

கருணாநிதி எழுதிய தொல்காப்பியத்தில் 457 தவறுகள் உள்ளன! - நெல்லை கண்ணன்.
இப்போ இன்னான்றீங்க - அது 458ஆவே தான் இருந்து தொலைக்கட்டுமே ?! இப்போ தமிழ்நாட்டுக்கு அதுனால என்ன வந்துது?! உட்டா மண்ணின் மைந்தன் திரைக்கதையிலே, 201 தவறுகள் இருந்தது...கண்ணம்மா பார்க்க சகிக்கவில்லை (ஹி...ஹி அது என்னவோ உண்மை தான்னு வெச்சுக்கங்க!)...மேற்கூறிய காரணங்களுக்காக, கருணாநிதிக்கு ஓட்டுப்போடாதீங்கன்னு சொல்வீங்க போல இருக்கே? நாட்டுப் பிரச்சினையைப் பத்தி பேசித்தொலைங்கப்பா!

கருணாநிதி வை.கோ கூட்டணியை விட்டு சென்ற போது, 'விபீஷணன் சென்று விட்டான்' என்று சொன்னீர்களே...இப்போதாவது ஜெ.வை ராமன் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? - (மீண்டும்) நெல்லை கண்ணன்.


அப்டிப் போடுங்க ...இந்தக் கருணாநிதிக்கு நல்லா வேணும்! சும்மானாச்சுக்கும் சாமி இல்லை, சாமி இல்லை அப்டீனு பீத்திக்கிட்டு, ஆ ஊன்னா புராணத்துலேந்து அவுத்து உட வேண்டியது! மக்களே, ஒழுங்கா கலைஞரை ஜெயிக்க வெச்சுடுங்க...இல்லாட்டி, தமிழர்கள் எல்லாரும் இராமாயணத்தில் வரும் வானரக்கூட்டங்கள்....தமிழ்நாட்டுத் தாய்க்குலங்கள் சூர்ப்பனகைகள், சிறுவர்கள் எல்லாரும் சிலப்பதிகாரத்தில் வரும் சும்பன்கள்னு போட்டு வறுத்தெடுத்துவாரு...ஜாக்கிரதை!

முதல்வர் ஜெ.வின் பிரச்சார வேனில் திடீர் கோளாறு - செய்தி

பிரச்சாரம் தான் கோளாறுன்னு நெனைச்சேன்...வேன்லேயுமா ? என்னங்க, வண்டி கரை சேறுமா?!

திமுக கூட்டணிக்கே பெரும்பான்மை - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு
அதிமுகவுக்கே பெரும்பான்மை - சட்டக்கல்லூரி கருத்துக்கணிப்பு

இந்தக் கருத்துக்கணிப்புலே, எந்த கணிப்பு கரெக்டா இருக்கும்னு மக்கள்கிட்டே கருத்து கேட்டு, கணிப்பு வெளியிட்டீங்கன்னா நல்லா இருக்கும். (ஊம்ம்ம்..அந்தக் காலத்துலே நாங்கள்லாம் பாலிடிக்ஸ் பேசினா, படிக்கற பசங்களுக்கு என்னத்துக்கு அரசியல்னு பாட்டு உழும். இப்போ பாருங்க...எல்லாம் தண்ணி தெளிச்சு உட்டாங்கன்னு நெனைக்குறேன்! இப்படிப் படிக்காம ஊரு சுத்திக்கிட்டு இருந்தா, அரியர்ஸை எல்லாம் எவன் க்ளீயர் பண்ணுவான்?)

இந்தத் தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடக்கும் போட்டி தான் இந்தத் தேர்தல் - நடிகர் சரத்குமார்.

ஹோல்ட் ஆன்...ஹோல்ட் ஆன்! நீங்க இப்போ அதிமுகவுலே சேர்ந்தாச்சு தெரியுமில்லை?! இப்படி பொத்தாம் பொதுவா டயலாக் உட்டீங்கன்னா....ஏதோ திமுகவுக்கு ஆதரவா ஓட்டுக் கேக்கறா மாதிரி இருக்கு!


இலவசம் என்ற வார்த்தையே எங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லை - லோக் பரித்ராண் பொதுச்செயலர் ஹேமச்சந்திரன்.

'ஹி...ஹி....அப்போ ஒங்களுக்கு எங்கள் ஓட்டு சத்தியமாக இல்லை' அப்டீங்கறாரு திருவாளர்.பொதுஜனம். பாம்புக்கறி திங்கற ஊருலே, மிடில் போர்ஷன் எனக்குன்னு சொல்வீங்களா....என்னவோ போங்க, பொழக்கத் தெரியாத ஆளுங்கப்பா!

நான் அரசியல் ரீதியாக விலை போய் அரசியல் நடத்த வேண்டுமென்றால், எனது கட்சி சார்பில் எதற்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்? - நடிகர் கார்த்திக்.

அவரைக் கொஞ்சம் ப்ரீயா உட்ருங்க... அவரு, அவர் மனசாட்சிக்கிட்டே கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காரு போல!

இளைஞர்கள் சேனை ஸ்டாலினின் பலவீனம், ஒரு உயர்ந்த ஜாதியில் பிறக்காத தகப்பனுக்கு மகனாகப் பிறந்தது - கருணாநிதி

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க - ஸ்டாலினோட பலவீனம் அது தானா? நேத்தைக்கு வந்த தயாநிதி மாறன் கூட தத்தக்க பித்தக்கான்னு தமிழ்லே பேசி, மீடியாவுலே எங்க பார்த்தாலும் தலைப்பு செய்திகள்லே இருக்கறப்போ....ஸ்டாலின் சட்டசபைலே அஞ்சு வருஷம் போயும் துணுக்கு செய்தியா வர்ற அளவுக்குக் கூட எதுவுமே பெருசா கழட்டலை! அது மட்டுமில்லை - உயர்ந்த ஜாதியிலே பிறக்காத தகப்பனுக்கு (அட....நீங்க தாங்க!) இன்னொரு மகன் பிறந்து, அவருக்கே ஸ்டாலினின் வளர்ச்சி புடிக்காம அப்பப்போ பாலிடிக்ஸ் செஞ்சது! இது எல்லாத்தையும் விட, ஒரு உயர்ந்த ஜாதியில் பிறக்காத தகப்பன், திருவாரூரிலிருந்து வந்து...பேச்சு சாதுர்யத்தால், புத்திக் கூர்மையால் (இன்னும் என்னென்ன் அட்ஜெக்டிவ் எல்லாம் போட்டுக்க முடியுமோ அத்தனையும் அடிச்சு உடுங்க...காசா?பணமா?) மூன்று முறை முதல்வராக முடிந்தபோது, பல கோடிகளுக்கு அதிபதியாக முடிந்த போது, கட்சித் தலைமையைப் பொதுக்குழுவைக் கூட்டித்தக்க வைத்துக் கொள்ள முடிந்த போது, அவருக்குப் பிறந்த மகனால் மட்டும் பெரிய அளவில் மக்களைக் கவர முடியவில்லை என்று நீங்கள் கருதுவீர்களேயானால், எது காரணம்? ஒரு உயர்ந்த ஜாதியில் பிறக்காத தகப்பன் (அட, என்னை மொறைக்காதீங்க, அவரை நிறுத்த சொல்லுங்க... நான் நிறுத்தறேன் !!! ) எண்பத்து நாலு அடி பாஞ்சதால, குட்டியால பாவம்.....என்ன தான் முக்கினாலும், பதினாறடிக்கு மேலே பாய முடியலை! அது தந்தையின் குற்றமே ஒழிய, தனயனின் குற்றமல்ல!

- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories13 comments: to “ ஹொய் ஹொய்னானாம்!