கேக்குறவன் கேணையாயிருந்தா...(வாயிலே வருது நல்லா!)

குமுதம் : சன் டி.வி. என்னுடையது அல்ல. அது ஒரு தனியார் நிறுவனம் என்று சொல்லி நீங்கள் ஒதுங்கினாலும், சன் தொலைக்காட்சியின் ஆதாரப் பள்ளி தி.மு.க. என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும், நீங்கள் அந்த உண்மையை மறைக்க முயல்வது ஏன்?கலைஞர் : உங்களுகோ அல்லது வேறு யாருக்கோ பயந்து கொண்டு நான் உண்மையை மறைக்கத் தேவையில்லை. உண்மை எதுவோ அதைத்தான் சொல்கிறேன். எங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு நிறுவனத்திற்கு மாத வாடகைக்கு இடம் கொடுப்பது கூட கட்சிக்குத் தொடர்பு உடையது என்று கூறலாமா? எத்தனையோ கட்சி அலுவலகங்களில் எத்தனையோ விதமான கடைகளும், வணிக நிலையங்களும் இருக்கின்றன. அவைகள் எல்லாம் அந்தக் கட்சி அலுவலகத்திற்குத் தொடர்புடையதா?
உண்மை எதுவோ அதைத் தான் சொல்றேன்னு சொல்லிட்டு, இம்மாம் பெரிய பொய்யை சொல்றாரு.
சன் டிவியிலே ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும், திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு விளம்பரம் வருது. தயாநிதி மாறன் பேசறதுலேந்து, கருணாநிதி பேசற வரை....லைவ் டெலிகாஸ்ட், ரிபீட் டெலிகாஸ்ட்னு சக்கைப் போடு போடுறாங்க! தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.வோட போட்டோவை ஒரு தடவையாவது, கடந்த அஞ்சு வருஷத்துலே காமிச்சுருப்பாங்களா? (என்னிக்காவது 'டான்சி கேஸில் ஜெ.வாய்தா'ன்னா நீட்டி மொழக்கி சொல்லி, போட்டோவையும் காட்டுவாங்க!)கலைஞர் 'டவராவில் காபியை ஆற்றிக் குடித்தார்'ங்கறதை கூட நியூஸா சொன்ன சன் டிவி, சுனாமி போது நடந்த சம்பவங்களை கட்சி சார்பில்லாம ஒரு தடவையாவது காமிச்சுதா?ஜெயா டிவி - பேருலேயே ஜெயாவை வெச்சுக்கிட்டு, அப்பட்டமா ஜெ. வோட ஜால்ராவா செயல்படுது. அவங்க சைடுலேந்து ஒரு நாள் கூட, நாங்க அதிமுக அனுதாபி இல்லைன்னு சொன்னதே கெடையாது. ஏதோ சன் டிவி ரொம்ப நடுநிலையான டிவி மாதிரி, ஒரு பம்மாத்து வேலை எதுக்குங்கறேன்? நீங்களும் வெளிப்படையா சொல்லுங்களேன்....'ஆமாம், எங்களுக்குன்னு ஒரு தொலைக்காட்சி மீடியா தேவைப்படுகிறது. அதற்கு சன் டிவி உறுதுணையாய் இருக்கிறது! பொதுமக்களை மக்ழ்ச்சிப்படுத்தும் அதே வேளையில், எங்களின் கொள்கையைப் பரப்புவதற்கும் ஒரு நல்ல சாதனமாக செயல்படுகிறது'ன்னு ஏதாவது அடிச்சு உடுங்களேன். சொரணை கெட்ட தமிழனுங்க நாங்க, அதையும் 'தமிழினத் தலைவர்' என்னமா லாஜிக் பேசுறார் பார்யான்னு புல்லரிச்சுப் போய் ஒக்கார்ந்துருப்போம்!- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories9 comments: to “ கேக்குறவன் கேணையாயிருந்தா...(வாயிலே வருது நல்லா!)