தொட்டிலிலிருந்து, சுடுகாடு வரை!

தயாநிதி மாறன் பேபி டிவிஸ்ட் ஆடியபடியே, ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்குகளோடு தமிழில் பேசிய பேச்சு காணும் பாக்கியம், சன் டிவியின் தமிழ் சேவையினால் எனக்கும் கிடைத்தது. தொட்டிலிருந்து இல்லையாம்...கருவறையிலிருந்தே தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கலைஞர் பல முத்தான திட்டங்கள் அறிவித்திருக்கிறாராம். இதே ரீதியில் போனால், கீழ்க்கண்டவையும் கூட நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை."நீங்கள் பள்ளியில் படிக்கும் போது, உங்களுக்கு அரை நிஜாரில் பட்டன் உடைந்து விடும் அபாயம் இருக்கிறது. அதற்காகத் தான் தலைவர் கலைஞர் 'இலவச நிஜார் பட்டன் திட்டம்' அறிவித்திருக்கிறார். உடனே, நீங்கள் கேட்பீர்கள் பட்டன் உடைந்தால் சரி, ஆண் பையன்களுக்கு அந்தத் திட்டம் இருக்கிறது...பெண் பிள்ளைகளுக்குத் தலைவர் என்ன செய்வார் என்று? தகப்பன் ஸ்தானத்தில் தலைவர் அதற்காகவே 'நாடா கொடுக்கும் தமிழ்நாடு' என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த பாவாடைக்கும் இனி நாடா இல்லையே என்ற கஷ்டமே கிடையாது! சரி பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இதெல்லாம் இருக்கிறது. கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்பீர்கள். கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் டிரீட் என்ற பெயரில் பீர் அடிக்கும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அனைவருக்காகவும் 'போரடித்தால் பீர் திட்டம்' என்ற நவீன திட்டத்தை கலைஞர் உருவாக்கி இருக்கிறார். இந்தத் திட்டத்தின் படி, நாலு பாட்டில் பீர் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு மாதமும் அவன் வீடு தேடி வரும்.


பீர் கொடுத்தீர்கள் சரி...மப்பு ஏறும் போது,பதமாக ஊறுகாய் யார் தருவார்கள் என்று கவலை தோய்ந்த இளைஞர் முகத்தைக் கலைஞரால் சரி வரக் கணிக்க முடிந்ததால் தான், 'இச்சை தீர்க்கும் எலுமிச்சை திட்டம்' அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் படி, நாலு பாட்டில் பீர்பெற்றதற்கான ரசீதைக் கொடுக்கும் இளைஞர்களுக்கு, எலுமிச்சை ஊறுகாய் இலவசமாக அளிக்கப்படும்! இன்னும் பல ஐட்டங்கள்...அதாவது ஐடியாக்கள் எங்கள் வசமிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் யாருமே வேலைக்குப் போகாமல் சம்பாதிப்பதற்கான பெரிய திட்டமொன்று இருக்கிறது. கலைஞர் அவர்கள் 'சொர்க்கபுரி சும்மா தமிழர்கள்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். அந்தத் திட்டத்தின் படி, யாருமே தமிழ்நாட்டில் வேலை செய்ய வேண்டாம். ஜாலியாக இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு,கலர் டிவி பார்த்தபடி சும்மாவே எல்லா தமிழர்களும் இருக்கலாம். மாதா மாதம் உங்களுக்கு உதவித் தொகையாக ஒன்பதாயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்படும்! பணம், நிலம், கடன்கள் ரத்து, கலர் டிவி...வேறு என்ன வேண்டும் தோழர்களே?! எங்கள் தலைவரின் அறிக்கை தான் கதாநாயகன், திட்டங்கள் தான் கதாநாயகி, நான் தான் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் காமெடியன்!'- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories9 comments: to “ தொட்டிலிலிருந்து, சுடுகாடு வரை!