மைக் டெஸ்டிங் - பாகம் 2

(முன்குறிப்பு :- தமிழ்நாட்டு தேர்தல் மேடைகளில், இதைவிடக் கேவலமான வசவுகளுடன், ஆபாசங்களுடன் பேச்சுகள் அரங்கேறும். எனக்கு இன்றைய எந்தத் தலைவர்களின் மீதும் பெரிய மரியாதை இல்லை...அதே சமயத்தில், எவர் மீதும் துவேஷமும் இல்லை. சொல்லப்போனால். அரசியல் மீதே நல்லவிதமான அபிப்ராயமென்பது இல்லவே இல்லை! கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கு, அரசியல் பேச்சுக்களைக் கேட்கும் சந்தர்ப்பம் தான் வாய்க்கவில்லை, அட்லீஸ்ட் படிக்கும் வாய்ப்பாவது கிடைத்துத் தொலைக்கட்டுமே...என்ற எண்ணத்தில் தான் இவை பிரசுரிக்கப்படுகிறது. மற்றபடி, இதய பலவீனமாவர்களும்,பரிசுத்தமான ஆத்மாக்களும்...தயவு செய்து, இவற்றை ஸ்கிப் செய்து விட்டு, தினமலர், தமிழ்முரசு போன்றவற்றைப் படிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இங்கு கீழ்க்காணும் கருத்துக்கள் எவற்றிற்கும் ஹாட் மச்சி ஹாட்டோ, அல்லது முனுசாமியோ பொறுப்பல்ல. சைதாப்பேட்டையில் ரெண்டாம் குறுக்கு சந்தில் கிடந்த, ஒரு துண்டுக் காகிதத்தில் கிடந்த கட்டுரையே இது என்ற உண்மை, நான் தினமும் சாப்பிடும் மேரி பிஸ்கட் மேல் சத்தியம். )மார்கழி மாசம் எல்லாக் கோயில்லேயும், சுண்டல் வினியோகம் பண்ணுவான். நம்ம ஊரு பண்டாரங்கள்லேந்து, பொடிப்பசங்க வரைக்கும் க்யூலே நின்னு, கும்மாளம் போடுவானுங்க. அதை விடக் கேவலமா இந்த தேர்தல் போயிடுச்சு. இந்தம்மா தாலிங்குது...அந்தாளு கலர் டிவிங்கறாரு...இந்தப் புதுசா வந்த நடிகன் பதினஞ்சு கிலோ அர்சிங்க்றான்...டேய், என்ன தாண்டா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க மக்களைப் பத்தி! டேய்... இவனுங்க எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு...தமிழன் ப்ரீயாக் குடுத்தா, பினாயில் கூட குடிப்பான்னு. ப்ரீயாக் கொடுத்து, ப்ரீயாக் கொடுத்து...ஒண்ணுமில்லாத குங்குமம் பத்திரிக்கையை ஒசத்தினவங்க தானேடா தமிழனுங்க! அந்தக் குங்குமம் பத்திரிக்கையை எவனாவது படிக்கறதுக்காக வாங்கினானா, சீயக்காத்தூளுக்காகவும், ஷாம்பூக்காகவும் வாங்கிப்புட்டு, இந்தப் பத்திரிக்கையை சப்பாத்தி மாவு சலிக்க வெச்சுக்கிட்டானுங்க.


இந்த விசு மொதநாள் வரைக்கும், சன் டிவியிலே குப்பைக் கொட்டிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு அம்மா கிட்டே போயிட்டு, உறுப்பினர் கார்டை வாங்கிட்டு....பன்னெண்டு வருஷமா சன் டிவியிலே டார்ச்சர் பண்ணானுங்கன்னு சொல்றாரு. ஒண்ணு தெரியாமத் தான் கேக்குறேன்,நீ தான் பெரிய டைரக்டர் புடுங்கியாச்சே...நீயும் வேணாம், ஒன் டிவியும் வேணாம்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, பன்னெண்டாவது நாள்லே வெளியே வர வேண்டியது தானே?! இந்த திமுக காரனுக்கும் நல்லா வேணும்டா...பார்ப்பான் வேணாம், பார்ப்பான் வேணாம்னு சொல்லிட்டு எல்லா புரொக்ராமையும் பார்ப்பானை வெச்சே பண்ணானுங்கள்லே, அதான் அவனுங்க ஒவ்வொருத்தனா ஆப்பு வெச்சுட்டுப் போறானுங்க! அதுலேயும் இந்த பெப்ஸி உமா இருக்காளே...அவ போன் பேசுறாளா...இல்லை, அக்ரகாரத்துலே மாமியோட அரட்டை அடிக்குறாளான்னு தெரியாத அளவுக்கு, 'வந்துண்டு', 'கேட்டுண்டு'ன்னு அய்யரு பாஷையிலேயே பத்து வருஷமா பேசிக்கிட்டு வர்றா! என்னிக்காவது ஒரு நாள் கலைஞர் போய், 'இந்தாம்மா, அய்யரு பாஷைலே பேசறதா இருந்தா, டிவியை விட்டுக் கெளம்பு'ன்னு சொல்லியிருக்காரா?! இவனுங்க தான் குங்குமம் பத்திரிக்கை விளம்பரத்துலேயே, மாமியும் படிக்கறா மாதிரி காமிக்குறானுங்களே?!


இந்தம்மா விஷயத்துக்கு வருவோம். சாதனைங்களைத் தேஞ்ச ரெக்கார்டு மாதிரி, ஒவ்வொரு கிராமமா பேசிக்கிட்டே போகுது! இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியலை?! சுனாமிக்கு நிவாரணம் தந்ததைப் பெரிசா பீத்திக்குறானுங்களே...ஒருத்தன் கஷ்டத்துலே இருக்கும் போது, அரசாங்கம் கரெக்டா போய் பணத்தைக் கொடுக்கறது கூட...நம்ம நாட்டுலே சாதனைன்னு சொல்லிக்குற அளவுக்குக் கேவலமாப் போயிடுச்சுய்யா! கடமையைக் கரெக்டா செய்யுறது சாதனைன்னா...நான் இன்னைக்குக் காலைல, டாட்டா டீ ஸ்டால்லே ஆனியன் போண்டா சாப்புட்டது கூட சாதனை தான்டா! இந்தம்மா நல்லா படிச்ச பொம்பளைன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா கலைஞரு சொல்றா மாதிரி திமுக ஒரு படி இலவசம்னா, இந்தம்மா பத்து கிலோ இலவசம்னு திமுக காரன் என்னெல்லாம் சொல்றானோ, அதை அடுத்த நாள் ஈயடிச்சான் காப்பியடிச்சு கொஞ்சம் எக்ஸ்டிராவா சொல்லுது! இந்த மானங்கெட்ட பொழப்புக்கு பேரு அரசியல்னு சொல்றதுக்குப் பதிலா, மோடி மஸ்தான் வித்தைனு சொல்லிட்டுப் போலாம்.


இந்த பிஜேபி காரன் எதுக்கு தேர்தால்ல நிக்குறான்? அவனுங்களுக்கே நல்லா தெரியும்...தமிழ்நாட்டுலே ஒரு தொகுதியிலே கூட டெப்பாஸிட் கெடைக்கறது கஷ்டம்னு! என்னாத்துக்கு இவ்ளோ தொகுதியிலே நிக்கறானுங்க! பிஜேபிக்கு சப்போர்ட் பண்றது யாருன்னு கேக்குறீங்களா...சுப்பிரமணிய சுவாமி, டேய்....வெளங்குமாடா?! அந்தாளு என்னைக்காவது நாலு வார்த்தை கோர்வையாப் பேசியிருக்கானாடா? சேட்டு பாஷை, அய்யரு பாஷை எல்லாத்தையும் கலந்து கட்டி, இங்கிலிஷ்தனமா தமிழ்லே பேசுறவன் தான்....இந்த சுப்ரமண்ய சாமி. அவன் பேசறதைப் புரிஞ்சுக்குற ஒரே ஆளு, தமிழ்நாட்டுலேயே சந்திரலேகா தான்! நீ வேணாம் நல்லா பாரு...அந்தம்மா எல்லா பிரெஸ் மீட்லேயும் அந்தாளுக்குப் பக்கத்துலேயே ஒக்காந்துருக்கும். ஏன்னா...அந்தாளு பேசுற கருமத்தையெல்லாம், டிரான்ஸ்லேட் பண்ணி பத்திரிக்கையாளனுக்கு சொல்ற ஒரே வேலைக்குப் பரிசாத் தான், அது மயிலாப்பூர் தொகுதியிலே நிக்குது! கோடி ரூபாக் கொட்டிக் கொடுத்தாலும், நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன்னு வெச்சுக்க...அது வேற விஷயம்!


தமிழ்நாட்டுலே கட்சி மார்ற அரசியல்வாதியெல்லாம், அம்மணமா அலையணும்னு ஒரு சட்டம் போட்டா, அதிமுகலே இருக்கற பாதி பேரு 'முதல் பாவம் அபிலாஷா' மாதிரி தான் அலைவானுங்க! திமுககாரனும் இதுக்கு சளைச்சவன் இல்லைனு வெச்சுக்க..தாமரைக்கனி புள்ளை, இப்போ அடிச்சுருக்கான் ஒரு அந்தர் பல்டி! 'அப்பாவைக் கூட பார்க்க உடல இந்தம்மா'ன்னு....டேய், வெக்கமா இல்லை! அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்த இந்தப் பய, இன்னைக்கு பயில்வான் ரங்கநாதன் மாதிரி இருக்கான்னா....அதுக்கு யாரு காரணம். நல்லா அமைச்சர் பதவிங்கற பந்தாவை வெச்சுக்கிட்டு, அஞ்சு வருஷம் சீட்டைத் தேச்சுட்டு....பெத்த அப்பனுக்குக் கொள்ளி கூட போடப் போகாத தடிமாடு, இன்னைக்கு திமுகலே சேர்ந்தவுடனே, ஞானோதயம் வந்தாமாதிரி பேசுது! ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, ஒங்கப்பா ஒடம்பு கரைஞ்சு, குமுதத்துலே கடிதம் எழுதின போது...நீ உண்மையிலேயே இன்னைக்கு சொல்றா மாதிரி வருத்தப்பட்டுருந்தன்னா, 'நீயும் வேணாம், ஒன் பதவியும் வேணாம்'னு ஓடிப்போயிருக்க மாட்டே?! ஏண்டா...நீ தலைவி தலைவின்னு இவ்ளோ நாள் சொல்லிக்கிட்டு இருந்த அந்தம்மா, ஒரு பிரெண்டை விட்டுக் கொடுக்கமாட்டேன்னு உடும்புப்புடியா இருக்கறப்ப....கேவலம், பெத்த அப்பனை பதவிக்காகவும், பணத்துக்காகவும் வித்துப் பொழச்சிருக்கேயே, இதெல்லாம் ஒரு பொழைப்பா? ஒங்கப்பா ஆத்மா உன்னை மன்னிக்குமா? அந்தாளு இப்போ உயிரோட இருந்தா, ஒன்னை மோதிரத்தாலேயே மூஞ்சியைப் பேத்துருப்பாரு!- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories12 comments: to “ மைக் டெஸ்டிங் - பாகம் 2