தடவாதே..

மேல இருக்குற போட்டோவை பார்த்த உடனே கலைஞர். எம்.ஜி.ஆர் ஸ்டைலுல தன்னோட வேட்பாளர்கள், அடிப்பொடிகள் கிட்ட பாடினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை..

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆத்மா தயவு செய்து என்னை மன்னிக்கட்டும்.

பல்லவி:
=======
தடவாதே.. தலையை
தடவாதே

தடவாதே.. (என்) தலையை
தடவாதே

என்
வழுக்கையை கண்டு தடவி விடாதே..
மக்கள் இருக்கார் மறந்து விடாதே..

(தடவாதே)

சரணம் 1:
==========

சட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது -அதை
திட்டம் போட்டு கவுக்கும் நம் கூட்டம்
கவுத்துக்கொண்டே இருக்குது

குருடனாய் இருக்கும் ஜனங்களுக்கெல்லம்
தொலைக்காட்சி பெட்டி தாரேனே..

(தடவாதே)

சரணம் 2:
==========

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
பெருசா இருந்தா அமுக்கிக்கோ - பொருள்
பெருசா இருந்தா அமுக்க்கிக்கோ - காசு
தெரிஞ்சும் தெரியாம வாங்கிருந்தா அது
வெளியே வராமே பாத்துக்கோ

(தடவாதே)

கெடுக்குற காலம் நெருங்குவதால் நாம்
கொடுக்குற வாக்கு செல்லாது - வரும்
தேர்தலின் பின்னே செல்லாது

ஏய்க்கிற நோக்கம் தோல்வி ஆயிட்டா
எடுக்குற ஓட்டம் நிக்காது - நாம
எடுக்குற ஓட்டம் நிக்காது - பணம்
கீழும் மேலும் புரளாது

இருக்குறதெல்லாம் நமது ஆயிட்டா..ஆ...
இருக்குறதெல்லாம் நமது ஆயிட்டா..ஆ...
சூரியன் குடும்பத்துக்(கு) இணை யாரு ?

(தடவாதே)
Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories9 comments: to “ தடவாதே..