விஜய்காந்திற்கே என் ஓட்டு - ஏனென்றால்?!

(1) காவியங்கள், புராணங்கள் என்று எதையாவது சொல்லி, 'பாஞ்சாலி செல்போனில் பேசினாள்', 'பரசுராமன் பைக் ஓட்டினான்' என்றெல்லாம் கழுத்தை அறுப்பதில்லை. உளறலோ, உண்மையோ...எல்லாம் யதார்த்தமாக இருக்கிறது.

(2) சராசரி ஆண்மகன் போல, பொண்டாட்டிக்குப் பம்மியபடியே இருந்தாலும் 'கெத்'தோடு இருப்பது போல பாவ்லா காட்டுவதால்...என்னால் அவரோடு ரிலேட் செய்து கொள்ள முடிகிறது.

(3) மகன்கள் இருவரும் மிக சிறியவர்கள். முக்கினாலும் இப்போதைக்கு வாரிசு அரசியல் செய்ய முடியாது.

(4)வெளியே நாத்திகம், பெரியார் என்றெல்லாம் ஜல்லியடித்து விட்டு, மாரியம்மன் கோயிலுக்குக் கொல்லைப் புறமாய் போய் தோப்புக்கரணம் போடுவதெல்லாம் கிடையாது.

(5)ஜெயா டிவியிலும், சன் டிவியிலும் முகம் அடிக்கடி காண்பிக்கப்படும் அவலம் கிடையாது.

(6) இவர் முழு நேர அரசியல்வாதியாகி விட்டால், தவசி, ராஜ்ஜியம், நரசிம்மா போன்ற காமெடி படங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். வாக்குறுதியில் தன்னடக்கத்தோடு அவர் அதை சொல்லா விட்டாலும், நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை , சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழ்க்குடிமகனுக்கும் இருக்கிறது!

(7) கலைஞர், 'பதவி ஒரு முள்கிரீடம்' என்று அடிக்கடி சொல்கிறார். வயசான காலத்தில் பாவம் எதற்காக அவருக்கு முள்கிரீடம் எல்லாம் சூட்டி கஷ்டப்படுத்த வேண்டும். தலையில் முடி வேறு இல்லாததால், முள்கிரீடம் எங்காவது எசகு பிசகாய் குத்தி, 'உவ்வா' வந்து செப்டிக் ஆகி விடும் அபாயம் வேறு இருக்கிறது. ஜெ.வோ ஒரு மணி நேரம் தான் தூங்குகிறாராம். ஓய்வே இல்லாமல், அயராது பாடுபடும் அன்பு சகோதரிக்கு ஒரு வெக்கேஷன் வேண்டாமா? அவரே வெளிப்படையாக அப்படியெல்லாம் கேட்க மாட்டார். அவரின் எஜமானர்களாய் இருக்கும் நாம் தான், தேவையறிந்து செயல்பட வேண்டும்.

(8) விஜய்காந்தையும் அரசியலில் இருக்கும் மற்ற நடிகர்களையும் எடுத்துக் கொண்டால், விஜய்காந்த் எவ்வளவு சூப்பர் என்று தெரிய வரும். கார்த்திக் கண்ணாமூச்சி ஆடுகிறார். கார்த்திக் அரசியலுக்கு வந்ததில் ஏதாவது பாராட்டலாம் என்றால், அந்தப் புது விக்கும், கண்ணாடியும் நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றித் தொலைக்க மாட்டெனென்கிறது. சரத்குமார் பார் ஆட்டம் ஆடுகிறார். திருச்சி மாநாட்டில் திமுக கொடியைத் தான் உடலில் போர்த்த வேண்டும் என்று கர்ஜித்தவர், தேனி சென்ற போது 'திமுக கொடியில் சின்னதாய் வெள்ளை பெயிண்ட் அடித்து, ரீடிசைன் செய்து போர்த்துக்கள்' என்று மாற்றி உளறுகிறார்...ஸாரி, பிளிறுகிறார்! ராஜேந்தர் 'நான் மூணு முதலமைச்சரை எதிர்த்து அரசியல் செய்து வந்தவன்' என்பதையையே முடியை சிலுபி சிலுப்பி, எல்லா தேர்தல்களிலும் சொல்லி வருகிறாரெயொழிய, முன்னேறுவதற்கு ஒரு வழியையும் காணும். (அது போக, இப்போதே சிம்பு ஆட்டம் தாங்க முடியாத டார்ச்சராய் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது ). பாக்யராஜ் 'பாரிஜாதம்' ரிலீஸாகி விட்டால், திமுகவுக்கு சவுண்டு கொடுப்பதை விட்டு, மூலையில் முடங்கிக் கிடக்கும் பாக்யாவில் குட்டிக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்.

எட்டு பாயிண்ட் புட்டு புட்டு வெச்சாச்சு, தமிழக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு இவ்வளவு காரணம் சொல்றதே ஜாஸ்தி. எங்கே சத்தமா சொல்லுங்க பார்ப்போம்.....தானைத் தலைவர் விஜய்காந்த் வாழ்க வாழ்க!


- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories10 comments: to “ விஜய்காந்திற்கே என் ஓட்டு - ஏனென்றால்?!


 •  

  nalla sonneenga munsamy...aana avar arasiyalukku poyitta dheeviravathikala yaaru pudikkaruthu?

 • Anonymous

   

  interesting post.. check this link..
  http://vote4vijaykanth.blogspot.com

 • Anonymous

   

  Dear Balaji

  Hilarious. Very good satire. There is not paucity of comdians in TN politics. I was never a fan of Karthik even in cinema. He is a directionless, misguided confused guy. His wig does not fit his bald head. But you wont believe such a clown is also attracting huge crowd. Unfortunately one these sort of clowns emerge as their role model. Pathetic.

  Regards
  Rajan

 • RangA

   

  5.ஜெயா டிவியிலும், சன் டிவியிலும் முகம் அடிக்கடி காண்பிக்கப்படும் அவலம் கிடையாது.

  Jaya Tvlayum SunTVlayum kaaNbikkiRa maathiri mugamaa adhu?. cinemascope TV illa vENum?


 •  

  Hi Mikesettu..correecta sonnapa..sugura vijaykanthu renduper cakeulenthum sema thunda kadikka porar! (atha eating in to their cakesnu sonnenpa)
  generally liked ur sarcasm..keep it up..


 •  

  Mikeset - sonnalum soneenga nachunu sollitinga :)..Engal then natin Tsunami Captain Vjkanth thaan adutha muthalvar...Thamil nattoda thalai eluthey maatha kudiya singam enga Captain...Ellarum Captain-key vote-u podunga endru thaalmaiyudan ketu kolikren..Ippadiku Akila Ulaga Captain Rasigar Madra Thalaivar Aberdeen Branch.


 •  

  http://thatstamil.oneindia.in/specials/cinema/heroes/kamal26.html

  read the dialogs 'spelled' by kamal. think what kamal will 'say' suppose if he decided to accept ???!!!

  imagine if diiferent tamil actors are approached, and how they will react if they r given 1oo Cr??? this can be ur next article


 •  

  http://thatstamil.oneindia.in/specials/cinema/heroes/kamal26.html

  read the dialogs 'spelled' by kamal. think what kamal will 'say' suppose if he decided to accept ???!!!

  imagine if diiferent tamil actors are approached, and how they will react if they r given 1oo Cr??? this can be ur next article

 • Anonymous

   

  Looking for information and found it at this great site... »

 • Anonymous

   

  Keep up the good work »