தில்லாலங்கடி

ஜெயா டிவியிலே ரபிபெர்னார்ட் அம்மாவை பேட்டி எடுக்குற அழகைப் பார்த்தேன். உட்டா ஜெ. எதிரே உக்கார்ந்தா மரியாதையா இருக்காதுன்னு, பள்ளம் தோண்டி உக்கார்ந்து எட்டி எட்டி பார்த்து பேசுவாரு போல! நேருக்கு நேர் நிகழ்ச்சியிலே நக்கீரனா மாத்தி மாத்தி எல்லாரையும் நோண்டி நுங்கெடுத்தவரு, இந்த நேர்முகத்துலே 'ஜிங்குச்சா ஜிங்குச்சா பச்சை கலரு ஜிங்குச்சா'ன்னு பாடாத குறையா என்னை நொந்து நூடுல்ஸாக உட்டாரு. மொதல் எடுத்தவுடனே கண்ணதாசனோட பாடல் வரியிலேந்து உதாரணம் ...அப்பிடியே படிப்படியா பில்ட் அப் பண்ணி 'எப்படி ஒங்களால மட்டும் முடியுது?', 'நீங்க எப்படி இதை சாதிச்சீங்க?'ன்னு ஒரே வழிசல் தான்! இதுக்கு அம்மா வேற 'இதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தான் அலச வேண்டும்'னு அடக்கமா பீத்திக்கிட்டாங்க! உண்மையிலே சொல்றேன், இந்தப் பேட்டியை எடுத்து முடிச்சு எடிட் பண்ணும் போது இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூசாது? "என்னடா ...இப்படி பம்முறோமே, பார்க்க சகிக்கலையே...கேக்க கூசுதே'ன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க?! தேர்தல்லே ஜெயிக்கணும்னா என்னலாம் தில்லாலங்கடி பண்ண வேண்டிக் கெடக்கு - மானங்கெட்ட பொழப்புடா சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!



- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



7 comments: to “ தில்லாலங்கடி