ஸ்டார்ட்...காமெரா...ஆக்ஷன்!

(இப்போ இருக்கற தலைவருங்களுக்கெல்லாம், புதுப்படத்துலே நடிக்க ஒரு ரோல் கொடுக்கப்போறோம். அவங்க கிட்டே போய் கதை மற்றும் சில சீன்களை விவரிக்கும் போது, பிரத்யேகமா எடுத்த நோட்ஸ் இது!)
கருணாநிதி :-
சார் கதைப்படி...நீங்க ஒரு இட்லி கடை வெச்சு இருக்கீங்க. உங்க கடைக்கு எதிரேயே ஒரு அம்மா தோசைக்கடை வெக்குது. நீங்க கடுப்பாகி, "இந்த அம்மாவுக்கு எதிர்லேலாம் நான் வியாபாரம் பண்ண வேண்டிய நெலைமை வந்துடுச்சே" அப்படீன்னு சோகமா ஒரு பாட்டு பாடறீங்க. ஒங்க கடை வியாபாரத்தை எப்படி பெருக்கறதுன்னு நீங்க யோசிக்கறப்போ, ஒங்க அண்ணன் கனவுலே வர்றாரு. (அவர் அப்பப்போ வந்து ஐடியா கொடுக்கறது படத்தோட ஹைலைட்!).
அவரு கொடுக்கற ஐடியாப்படி, 'இந்த வருஷத்தோட என் கடையை மூடுறேன்னு' சொல்றீங்க. இதைப்பார்த்துட்டு ஒங்களுக்கு வியாபாரம் அதிகமாகும்னு நெனைக்குறப்போ, எதிர்பாராத விதமா தோசைக்கடை சும்மா ஐ.பி.ஓ ரிலீஸ் பண்ற அளவுக்குப் பிக்கப் ஆய்டுது. அப்ப தான் சார் நீங்க ஒரு முடிவு எடுக்கறீங்க - அதாவது, 'இழுத்து மூட இந்த இட்லிக்கடை ஒண்ணும் சாதா இல்லை.....ஸ்பெஷல் சாதா!' அப்டீன்னு குணா கமல் கணக்கா ஒரு சவுண்டு விடுறீங்க! (இதற்கு மேல் கதை சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு, கலைஞர் தனது குண்டு பேனாவால்...அக்ரீமெண்டில் கையெழுத்துப் போடுகிறார்)வை.கோ :- இந்த எலெக்ஷன் முடிஞ்சவுடனே, அண்ணன் திருமா மாதிரி நீங்களும் ஒரு படத்துலே நடிக்கணும் சார். அதுலே கதைப்படி நீங்க ஜெயிலுக்குப் போறீங்க. அப்போ உங்க அண்ணன் தள்ளாடற வயசுலே, ஒரு மஞ்சத்துண்டைப் போத்திக்கிட்டு....உங்களைப் பார்த்துக் குலுங்கி குலுங்கி அழுவுறாரு. நீங்க அதைப் பார்க்க சகிக்காம, மூக்குலேந்துலாம் தண்ணி வர்ற அளவுக்கு அழுவுறீங்க. அண்ணனை அப்புடியே கட்டிப்புடிச்சுட்டு, காமராவைப் பார்த்து மன்மதன் சிம்பு கணக்கா கண்ணடிச்சு ஒரு ஸ்மைல் உடுறீங்க! மொத படங்கிறதாலே, நீங்க காரெக்டரோட ஒன்றி நடிக்கறா மாதிரி ஒரு கதை. புடிச்சுருக்கா சார்?! (வை.கோ கண்கள் கலங்கி, நமது கைகளைப் பற்றுகிறார்)ஜெயலலிதா :- அம்மா, இது ஒரு ஹாரர் படம்மா! ஒங்க காரெக்டருக்கு பேர் என்னன்னே சொல்ல முடியாத மாதிரி ஒரு வியாதி. நீங்க எதுக்கு யாரைப் புடிச்சு உள்ளே போடுவீங்கன்னே யாருக்கும் தெரியாது? அடுத்தது யாரு, அடுத்தது யாருன்னு எல்லாரும் சீட் நுனிலே ஒக்கார்றா மாதிரி சஸ்பென்ஸ் திரில்லர். இந்த வியாதியோட இன்னொரு எஃபெக்ட் என்னான்னா, மொத சீன்லே நீங்க சொல்ற டயலாக்குக்கு அப்டீயே டோட்டல் ஆப்போஸிட்டா, அடுத்த சீன்லே ஒரு டயலாக் சொல்வீங்க.இது ஒங்களுக்கு நகைச்சுவை வரும்னு நிரூபிக்கறதுக்காகம்மா! ஆனா, இதே மாதிரி ஆல்டர்னேட் சீன்லே அராஜகம் பண்ணிக்கிட்டே வர்ற நீங்க, கடைசிலே ஆடியன்ஸைப் பார்த்து,பயங்கரமா புள்ளிவிவரம்லாம் சொல்லி 'என்னோட பொற்காலம் எப்படி இருந்துது'ன்னு ஒரு கேள்வி கேப்பீங்க பாருங்க...அப்டீயே பாக்குற ஒவ்வொருத்தனுக்கும் ஹார்ட் வெடிச்சு சுக்கு நூறாப்போய்டும்! (அம்மா புன்னகை செய்கிறார். நாம் பவ்யமாய் விடைபெறுகிறோம்)
விஜய்காந்த் :- சார், கதைப்படி நீங்க ரொம்ப யதார்த்த வாதி. ஏழை மக்கள் படுற பாடுலாம் ஒங்களுக்கு நல்லா தெரியும்னு நிரூபிக்கறதுக்காக, மொத நாலஞ்சு சீன்லே ரொம்ப கஷ்டப்படுறீங்க! பாய்லே படுக்குறீங்க, வேப்பங்குச்சியாலே பல் தேய்க்குறீங்க, வேலியோரமா ஒதுங்கறீங்க....இப்புடிக் கதைப் போய்க்கிட்டே இருக்கும் போது, திடீர்னு நீங்க அங்கே நடக்குறே நாட்டாமை தேர்தல்லே கலந்துக்குறீங்க! ஒங்களை எதிர்த்து ரெண்டு பெரும்புள்ளிங்க போட்டி போடும் போது, நீங்க தைரியமா நிக்குறதைப் பார்த்து ஊருக்குக் கை தட்டுறதா, இல்லை.... ஒங்க தலையிலே தட்டுறதான்னு புரியாம கொழம்பி நிக்கறாங்க! ஒங்கக் குடிசையை, குதிரை வண்டி ஓட்டக் கஷ்டமா இருக்குன்னு சொல்லி வில்லன் இடிக்கப் பார்க்குறான். நீங்க ஒடனே, 'குதிரை வண்டி போக எடமா இல்லை' அப்டீன்னு ஒரு ரூட் மேப் போட்டுக் கொடுக்கறீங்க. வில்லனும் அசந்து போய் நிக்கும் போது தான், நீங்க கொடுத்தது ரூட் மேப் இல்லை, ஆப்பிரிக்காவோட மேப்புன்னு அவனுக்குத் தெரிய வருது! இந்த சமயத்துலே இன்னொரு வில்லன் ஒங்களைப் பெரிசாக் கண்டுக்காதது ஏன்னு ஆடியன்சுக்குலாம் ஒரே கொழப்பமா இருக்கு! எப்படி நீங்க இந்த ரெண்டு வில்லனையும் சமாளிச்சு, மேலே வர்றீங்கங்குறது தான் மிச்சப் படம்! (நாம் சொல்லி முடித்ததும், 'ஸூட்டிங் சீக்கிரம் வைங்க...கதை ரொம்ப டெம்ப்டேசனா இருக்கு'ன்னு காப்டன் சொல்கிறார்)- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories10 comments: to “ ஸ்டார்ட்...காமெரா...ஆக்ஷன்!