அப்டிப் போடு அருவாளை!

வை.கோ நிற்கிறார் மிரண்டு. இப்போ ஊரெல்லாம் அலைகிறார் உருண்டு - விஜய. ராஜேந்தர்அண்ணா...ஏதோ ரைமிங்கா இருக்குன்னு என்ன வேணா பேத்தறதா? 'அலைகிறார் உருண்டு' - இதுக்கு என்னா அர்த்தம்?! சரி, இதுலேலாம் லாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது. நானும் ஒங்களோட சேர்ந்து, கொஞ்சம் அடிச்சு உடறேன். அடுத்த கூட்டத்துலே சேர்த்து சும்மா தூள் கிளப்புங்க! காப்பிரைட், ராயல்டி ஒண்ணும் வேணாம். ஏதோ என்னால கொடுக்க முடிஞ்ச இலவசம், என்சாய்ய்ய்ய்ய்ய்!வை.கோ நிற்கிறார் மிரண்டு.
இப்போ அலைகிறார் உருண்டு.
சிம்புவுக்கு பிடிச்சது நண்டு.
தாமரைக்கு இருக்குது தண்டு.
உங்களுக்கு கலர் டிவி உண்டு.
திமுகவுக்கு ஓட்டு போடுடா மண்டு!தொட்டில் முதல் சுடுகாடு வரை உதவுபவர் தான் கருணாநிதி - தயாநிதி மாறன்.ஹி...ஹி...இதெல்லாம் அப்புடியே தானா வர்றது தான் இல்லை?! நல்லவேளை, சொர்க்கம், நரகம் போன்ற விஷயத்துலேலாம் ஒங்க கட்சிக்கு நம்பிக்கை இல்லாம போச்சு. இல்லாட்டி, சொர்க்கத்துக்கு சென்றால் ரம்பா, மேனகை டான்சுக்கு டிக்கெட் இலவசம். நரகத்துக்கு சென்றால், எண்ணைக் கொப்பறையில் பொறிக்கப்படுபவர்களுக்கு 'பர்னால்' (யோவ்..பர்னாலா இல்லைய்யா, அவர் கவர்னர்...நான் சொல்றது ஆயின்மெண்ட்) இலவசம்னு மேலோகமே வியக்கும் வண்ணம் தேர்தல் அறிக்கையிலே ஜமாய்ச்சுருப்பீங்க!இன்னொரு பொற்காலத்தை உருவாக்க பேராதரவு தாருங்கள் - முதல்வர் ஜெ.ஆங்...நீங்க சேரன் இயக்கத்துலே, முரளி - மீனா நடிச்ச படத்தை தானே சொல்றீங்க ?!
(ஆமாம்..மீனா சும்மா தானே ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்க, அவங்களை ஏன் பிரச்சாரத்துலே புடிச்சுப் போடலை நீங்க?). புடிக்காதவங்களைப் புடிச்சு ஜெயில்லே போடுறது, தலையாட்டி பொம்மைங்களை அமைச்சருங்களா வெச்சுக்கறது, தாம் தூம்னு சட்டம் போடுறது - அப்டியே ஒரு அந்தர் பல்டி அடிச்சு அத்தனையும் வாபஸ் வாங்குறது - இதெல்லாம் தான் ஒங்க பொற்காலத்தோட டெபனிஷன்னா, எங்களுக்கு மக்கள்லாம் அம்மணமா அலைஞ்ச கற்காலமே போதும்டா சாமி! (நீங்க என்ன பொற்காலம், புள்ளி விவரம்னு போர் அடிக்கறீங்க. இன்னும் பத்து நாள் தான் இருக்கு ...களத்துலே எறங்கி கருணாநிதியோட கபடி ஆட வாங்க, சொல்லிப்புட்டேன்!)உண்மையிலேயே கலைஞருக்கு சமூகப்பார்வை இருந்திருந்தால், கலர் டிவி கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்க மாட்டார். கம்ப்யூட்டர் தருகிறேன் என்று சொல்லியிருப்பார் - திருமா


நீங்க மாட்டும் எதுனாச்சும் மைக்குக்கு முன்னாடி சொல்லிட்டுப் போய்டுவீங்க...நிருபர்கள் இதை அவருகிட்டே கேட்டு வெச்சாங்கன்னா, கலைஞரும் 'கொடுத்துத் தொலைக்கறேன்'னு சொல்லிடுவாரு! இப்படியே டிவி, கம்ப்யூட்டர், பிரிட்ஜுன்னு எல்லாம் இலவசமாக் கொடுக்கறதுன்னு முடிவு எடுத்து ஜெயிச்சும் வெச்சுட்டாருன்னா, தமிழ்நாடு அரசு அப்படீங்கற பேரை வசந்த் அன் கோன்னு மாத்தறா மாதிரி ஆயிடப்போவுது! (இந்த டயலாக்கைக் கேட்டுட்டே, தயாநிதி பில்கேட்ஸோட ஏதோ முப்பத்து மூணு, முப்பத்து மூணுன்னு பேச ஆரம்பிச்சுட்டாராமே - மெய்யாலுமா?!)- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories4 comments: to “ அப்டிப் போடு அருவாளை!