ஒரு கடிதமெழுதினேன்..(தினகரன்)


http://www.dinakaran.com/epaper/2006/Apr/21/8_3.jpg

தினகரனில் வந்த "கடிதங்கள்" பகுதி:

(1) ஒரு ரூபாய்க்கு எந்தப் பொருளும் வாங்க முடியாது. ஆனால் ஒரு ரூபாய் தினகரன் மூலம் உலகத்தையே வாங்கலாம்.

- அதாவது ஒரு ரூபாயில பொருள் வாங்க முடியாது. பொய் தான் வாங்க முடியும்.

(2) தி.மு.க ஒரு ரூபாயில் இந்தியா முழுதும் பேச வைத்தது. தினகரனோ ஒரு ரூபாயில் உலகெங்கும் பேச வைத்தது.

-என்னத்த பேச வெச்சுது ?


(3) இரண்டு வரியில் அறிவைக் கொடுத்தது திருக்குறள். ஒரு ரூபாயில் அனைத்துமே கொடுத்தது தினகரன்.

- சாரி, இது கொஞ்சம் ஓவர். உண்மையில ஒரு சின்ன தப்பு அந்த வரியில. ஒரு ரூபாயில் மற்ற அனைத்துமே கொடுத்தது தினகரன். (அறிவுக்கும் தினகரனுக்கும் வெகு தூரமுங்கோ)

(4) தரமான தாள், கண்ணில் ஒற்றிக்கொள்ளா வைக்கும் தெளிவான அச்சு, கைசரக்கு சேர்த்து திரித்துக் கூறாமல் செய்திகளாஇ அப்படி அப்படியே வழங்குகிறது தினகரன்.

- எழுதினவர் வடை வியாபாரி. பலசரக்கு / பழைய பேப்பர் கடையும் வெச்சு இருப்பார் போல. தாள் நல்லா இருக்கு, சரக்கு அது இதுன்னு பேசுறார். வடை மடிச்சு கொடுக்க வசதியான பேப்பர் தான்.

=======================

இது போக ஒரு கடித முத்து:

சேதுக் கால்வாயிலே நீந்திக் களித்தவர்
சூதுக் கால்வாயில் சிக்கிய
சேது சினிமா நயகன் போலாகி இன்று
கூவக் கால்வாயில் குப்புறக் கிடக்கிறார்.

- இதை வாசகர் எழுதி நீங்க பிரசுரிக்கரீங்கன்னு நாங்க நம்பணும் ? கவிதை முத்துலயே தெரியுதே உங்காளுல யாரோ உக்காந்து சூனாவுக்கு சேனா, கூனாவுக்கு கூனான்னு எழுதுறது. இந்த மாதிரி பத்திரிக்கை நடத்துறதுக்கு வெட்கமாயில்ல ? அது எப்படி இருக்கும் ? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories