ஜெ.பேட்டிக்கான பில்ட் அப் மற்றும் கற்பனைப் பேட்டி!

அமைதி தவழும் நந்தவனமாகிய தமிழ்நாட்டில், ஒரு பூங்காவனமாய் போயஸ் தோட்டம். வாசலில் செக்யூரிட்டி நம்மைப் பார்த்து அன்பாய் வழிந்தபடி, 'உள்ளே போங்க சார்!' என்று கதவின் தாழ்ப்பாளை சத்தம் வராமல், மெதுவாய் நீக்குகிறார். உள்ளே ஒரு செம்பருத்தி செடி நம்மைப் பார்த்து கண் சிமிட்டுகிறது. வரவேற்பறையில் 'தமிழக மக்களுக்காக விழித்தபடி இருப்பேன்' என்று கொட்டை எழுத்தில், கொத்து கொத்தாய் புகைப்படங்களுக்குக் கீழே ஒரு வாசகம் தொங்குகிறது.அதைப் படித்த மாத்திரத்தில், கண்கள் கலங்கியபடி இருக்க ...ஜெ. பச்சைப் புடைவையில் வருவது தெரிந்ததும், கண்களில் நீர் தானாக கரு விழிக்கு வழி விட்டு தரிசனம் தங்குதடையில்லாமல் கிடைக்க வழிசெய்கிறது. முதல்வர் வாயைத் திறந்து, நாவை அசைத்து...நாபிக்கமலத்திலிருந்து ஒலி எழுப்பி, 'நல்லா இருக்கீங்களா' என்று கேட்கிறார். நாம் 'நல்லா இருக்கேம்மா' என்று பதில் அளித்ததும், 'காலைலே என்ன சாப்பிட்டீங்க' என்று ஒரு புன்னகையோடு கேட்கிறார்.


'நாலு இட்லி' என்று நாம் சொன்னதும், " 'நாலு இட்லிகள்' என்று தான் சொல்ல வேண்டும் - பன்மை அல்லவா?" என்று நமது இலக்கணப்பிழையை, தலைக்கனமில்லாமல் திருத்துகிறார். நாம் அதை ரசித்தபடி அமர்ந்திருக்க, மீண்டும் முதல்வர் வாயைத் திறந்து, நாவை அசைத்து...நாபிக்கமலத்திலிருந்து ஒலி எழுப்பி (உஷ்ஷ்ஷ்..அப்பாடா!) 'ஏதாவது கேளுங்க' என்று அன்பாய் சொல்கிறார்.கே:- எதிர்க்கட்சியினரின் அறிக்கைகள் எல்லாம் ஒரே வெத்து சவடால்களாகவே இருக்கே....அதுக்கு எப்படி பதில் சொல்லப் போறீங்க?ப:- மக்கள் எனது ஐந்து வருட செம்மையான ஆட்சியில், சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த தீபாவளியின் போது, ஆர்.எம்.கே.வியின் கின்னஸ் பட்டு சேலை மட்டுமே, பத்தாயிரத்து ஒன்றே முக்கால் விற்றிருப்பது மக்களின் சௌபாக்கியத்தை ஜம்மென்று காட்டுகிறது. சரவணபவனில் கடந்த ஒரு வருடம் மட்டும் டிரைபுரூட் ரவா தோசை, இருபத்தேழாயிரத்து முப்பத்திரண்டு விற்றிருக்கிறது என்பதை நினைத்தால் மக்களின் பணப்புழக்கம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. சந்திரமுகி சாந்தி தியேட்டரில் 365 நாட்களில் ஓடியதிலிருந்து, செல்வி ஒன்பதிலிருந்து ஒன்பதரை வரை ஒளிபரப்பாகியவது வரை எல்லாமே சுபிட்சத்தின் அடையாளங்கள் தான்.புள்ளி விவரங்களை, புலி போல பொல பொலவென அம்மா கொட்டிய அழகைப் பார்த்த போது, அவர் கேள்விக்கான பதிலை சொல்லவே இல்லை என்ற குறைந்த பட்ச அறிவு கூட நமக்கு குன்றிப் போனது.அதைப் பொருட்படுத்தாமல், அம்மா அடுத்த கேள்விக்குத் தயார் என்பதை, புடவை முந்தானையை லாவகமாக நகர்த்துவதிலிருந்து நமக்குத் தெரிந்தது.கே: உங்களால் மட்டும் எப்படி சொன்னதை சொன்னபடி நடத்திக் காட்ட முடிகிறது?ப:- பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் எடுக்கும் போதே, அடக்கமாய் நான் அடிக்கடி அவரிடம் சொல்வது இது தான் 'மன உறுதி இல்லாதவர்கள் மக்கிப் போவார்கள்!'. எம்.ஜி.ஆரும் அதை அழகாய் மனப்பாடம் செய்து, எல்லாத் தேர்தல்களிலும் ஜெயித்தார். அதையே தான், அவரது ஆசிகளோடு இப்போது நான் பின்பற்றி வருகிறேன்.(குலுங்கி குலுங்கி சிரித்தபடி) தவிர, இதையெல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தான், வெண்கல ஏட்டில் தங்க ஆணியால் பொறிக்க வேண்டுமே தவிர, நானே இதை சொல்லிக்கொள்ளக் கூடாது!அவரது தன்னடக்கம் ஒரு எக்ஸ்ட்டிரா லார்ஜாக நமது கண் முன் விரியும் போது, நாமெல்லாம் எத்தகைய ஸ்மால் ...ஸ்மால் என்ன ஸ்மால்? டைனி...ஊஹும்...மைக்ரோ என்று புரிந்தது.(சரி சரி...மிச்சத்தை எல்லாம் குமுதத்திலேயோ அல்லது ஜெயா டிவியிலோ பாத்துக்குங்க!)

- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories13 comments: to “ ஜெ.பேட்டிக்கான பில்ட் அப் மற்றும் கற்பனைப் பேட்டி!