தில்லாலங்கடி


சர்க்கஸ்லே கிளைமாக்சுக்காக காணத்தவறாதீர்கள் 'பார் ஆட்டம்'னு சொல்லி, மஜாவா நம்மளை உசுப்பேத்துவாங்க. ஆனா, நம்ம தேர்தல் 'பார் ஆட்டம்' மாதிரி ஜெமினி சர்க்கஸாலே கூட குஷிப்படுத்த முடியுமான்னு தெரியலை! சர்ருனு பாக்யராஜ் இந்த முனையிலேந்து அந்த முனைக்குத் தாவுறாரு! அட ...அப்படீன்னு பிரமிச்சுப் போய் பார்த்தா, ஜிவ்வுனு சரத்குமார் அந்த எடத்துலேந்து நடுவுலே வந்து ஜோரா நிக்கறாரு! அதுலே அசந்து போய் நின்னா, தொபுக்கடீர்னு எங்கிருந்தோ ராஜேந்தர் விழுற சத்தம் கேக்குது. அடடா...இது கொஞ்சம் காமெடியா இருக்கேனு சிரிச்சுக்கிட்டு இருக்கறப்போ, கார்த்திக் 'நான் ஆண்டிப்பட்டிலே நிக்கணும்னு தொண்டர்கள் விருப்பப்படறாங்கன்னு' ஏழு மணி தலைப்பு செய்திலே வீராவேசமா சொல்லிட்டு, எட்டு மணி நியூசுல 'தலைவர்கள்ளை எதிர்த்துப் போட்டி போடுறது நாகரீகம் இல்லைனு' பவ்யமா பம்மிட்டு, நவரச நாயகன் பட்டத்தை டக்கரா தக்க வெச்சுக்கறாரு. இன்னும் ஒரு விஷயம் மட்டும் நடந்துச்சுன்னா தேர்தல் கலை கட்டிடும் - அட்ரஸ் இல்லாம இருக்கற ராமராஜன், 'நான் எந்த கட்சியிலே இருக்கேனோ (எவனுக்கு தெரியும் ?!?!), அதுலேந்து விலகி கேப்டன் கட்சிலே சேர்ந்துடறேன் புள்ளே'னு சைக்கிள் கேப்புலே தில்லலங்கடியா சொன்னா, சூப்பரபுங்கோவ்வ்வ்வ்வ்வ்!



- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories