கலைஞரே..

கருணாநிதியிடம் ஒரு பிடித்தமான அம்சம் என்னவென்றால், சுறுசுறுப்பில தேனீ கூட தோற்றுப் போகும். இவ்ளோ வயாச்ச்சு..என்னிக்காவது அவரு சோம்பிப்போய் அரசியல் ல இருப்பதை பாத்திருக்க முடியுமா ? காலைல எழுந்திரிச்சு வாக்கிங் போவாரு, எழுதுவாரு, மேடைபேச்சுக்கு போவாரு, அறிவாலயத்துல கூட்டம், இப்படி பம்பரமா வேலை செய்து கொண்டே இருக்கும் ஒரு தேனீ தான்.

ஆனா இந்த குணத்தை கொஞ்சம் நாட்டு நல்லதுக்கு பயன்படுத்தி இருந்தா, தமிழ் நாடு பூங்காவனமா மாறி இருக்கும். ஆனா எப்படி அடுத்தவனை கவிழ்க்கலாம் ? எப்படி புதிய புதிய முறையில் திட்டலாம்னு நெனச்சு நெனச்சே வாழ்க்கையை ஓட்டுகிற ஒரு அற்புத ஜீவன். இப்போ வைகோ இடம் மாறிப் பறந்து போனதில இருந்து, இவரு நெதமும் என்னத்தியாவது எழுதிக்கிட்டே இருக்காரு.

மு. க வுக்கு ராமாயணமும் மகாபாரதமும் ஆகாது. எவனையாவது திட்டணும்னா, அதுல இருக்குற கதையில ஒண்ணை நல்லா திரிச்சு பாத்திரங்களை இஷ்டப்பட்ட மாதிரி தன் வாய் சாதுர்யத்தாலே மாத்திக்காட்டுவாரு.

(1) வைகோ வந்து துரோகத் தம்பி வீடணன்னு முரசொலி யில முதல்ல கவிதை எழுதி அழுதாச்சு. அண்ணா சொல்லிட்டாராம் வீடணன் தான் அரக்கன்..ராவணன் அல்லன்னு..உடனே இந்தாளு அண்ணாவே சொல்லிட்டாரு அதுக்கப்புறம் கம்பன் என்னத்த அப்படிங்கறமாதிரி, தன்னை அண்ணனாகவும், வைகோவை தம்பியாகவும் சித்தரிச்சு ஒரு கவிதை எழுதியாச்சு. இதுல காமெடி என்னன்ன, "அண்ணா சொன்னார் ராவணன் நல்லவன், வீடணன் கெட்டவன்"னு சொல்லிக்க வேண்டியது. "வைகோ என் தம்பி யாக இருந்தான்"னு சொல்லிக்க வேண்டியது. இதுல இருந்து "நான் மகா நல்லவன்" அப்டின்னு பீத்திகிட்டாச்சு.

(2) கலர் டீவி கொடுத்தா, தொழில்நுட்ப அறிவு முன்னேறுமாம். எப்படி ? மெட்டி ஒலி , முட்டி வலி ங்கர மாதிரி அழுவாச்சி சீரியலாலயா ? யுஜிசி போன்ற பல்கலைக்கழக ஒளிபரப்பெல்லாம் தூர்தர்ஷன் ல வருது. சன் டீவில இந்த மாதிரி ரோதனை அழுகை சீரியல் தான் வருது. ஒரு கட்டத்துல எப்படி தன் தமிழுக்கு அடிமையா மக்களை வைக்கப் பாத்தாரோ, அதே மாதிரி இப்போ தன்னுடைய குடும்ப டீவிக்கு அடிமையாக்க பாக்குறார். எதோ ஒரு மாஸ் மீடியா கைல கிடைக்கணும், தான் பணம் பண்ணணும், ஜனங்க தன் கைக்குள்ள இருக்கணும் - என்ன ஒரு எண்ணம் ..ஆகா..

(3) வைகோவை திட்ட அமிர்தமதின்னு ஒரு ஐஞ்சிருங் காப்பியத்துல இருந்து சோரம் போன ஒரு பெண்ணை எடுத்துக்காடு தருகிறார். முதல்ல அமிர்தம்தியோட உணமியான காரணம் இவருக்கு தெரியுமா ? இவரு என்னவோ போய் அங்க விளக்கு பிடிச்ச மாதிரி இல்ல பேசறாரு ? சரி, அது வேண்டாம். என்னதான் தன்னை விட்டு ஒருத்தன் பிரிஞ்சு போனாலும், இப்படியா அசிங்க அசிங்கமா பேசுறது ? நல்ல தமிழ்ல கேவலமான கருத்துக்களை சொல்லிட்ட நாகரீகம் ஆயிடுமா ? இந்தாளு நல்ல தமிழ்ல பேசுறதை தயானிதி மாறன் மெட்ராஸ் தமிழ்ல சொல்றாறு. அவருக்கு இவரு "இப்படி எல்லாம் பேசக்கூடாது..இது தாத்தாவின் அறிவுரை"ன்னு நாடகம் வேற. பேசும்போத்து தடுக்காம பேசிமுடிச்சப்ரம் என்னத்தை அறிவுரை ? அது சரி, உங்களுக்கு யாருய்யா அறிவுரை சொல்ரது ?

(4) அதே மாதிரி இன்னிக்கு தினகரன் ல (1 ஆம் நம்பர் புருடா பேப்பர்) பாஞ்சாலி சோரம் போயிட்டான்னு ஒரு கதை. எப்போ பார்த்தாலும் எவ சோரம் போனான்னு பார்த்து பார்த்து கதையை எடுத்துக்காட்ட சொல்ற இந்தாளுக்கு, கண்ணகி சிலை பத்தி என்ன கவலை ? என்னவோ இந்தாளு ரொம்ப கற்பு நெறி தவறாம வாழுற மாதிரி. ஒன்றுக்கு இரண்டா மனைவி. இதுல அடுத்தவனுக்கு புத்திமதி.

(5) விஜயகாந்த் கேட்டிருக்காரு - 2 ஏக்கர் நிலம் கொடுத்தீங்கன்னா, பம்ப் செட் வச்சு தருவீங்களா ? எனக்கு என்னவோ நியாமான கேள்வியா தான் பட்டுது. இப்டி கேட்டிருக்காரேன்னு ஒரு நிருபர் கேட்டா "அடுத்து கல்யாண நண்டபமும் கட்டித் தருவீர்களா என்று கேட்கவில்லையா" ?னு ஒரு நக்கல் பதில். ஏன்யா ? விஜயகாந்த் கேக்குறது மக்கள் பிரச்சனை. கல்யாண மண்டபம் அவர் சொந்தக் காசுல கட்டினது. எதுக்கு குள்ளநரித்தனமா இரண்டையும் முடிச்சு போட்டு கேள்விக்கு பதில் சொல்லாம பதுங்குறே ? "முடியாது..இயலாது"னு தமிழ்ல சொல்லு. சரி தேர்தலை அது பாதிக்கும் நா "வழங்க முயற்சி செய்யலாம்"னாவது சொல்லி வையேன். மக்கள் பிரச்சனை பத்தி ஒருத்தன் குரல் கொடுத்தா, அவன் மேல நக்கலா ?

கேவலமான இந்தப் புத்தியை கொஞ்சம் நாட்டு நலனுக்காக செலவு பண்ணித் தொலையுங்களேன்யா. தன் சட்டைப்பையை நிரப்பிக்கிட்டே இருக்கிறதை என்னிக்கு நிறுத்தப் போரீங்க ? சாவு வேற நெருங்கிட்டு வருது. கொஞ்சம் நல்ல மனிதனா இருக்க பாருங்க.

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories9 comments: to “ கலைஞரே..