அதிமுக பக்கம் சாயும் குமுதம்

கலாநிதி மாறனின் மீடியா ராஜ்ஜியத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குமுதம் பத்திரிகை தான். சன் டிவி மூலமாக இடைவிடாது விளம்பரத்தாலும், உதிரிகள் ஏகமாக இலவசமாக கொடுத்ததினாலும் குங்குமத்தின் சர்க்குலேஷன் குமுதத்தை மிஞ்சிவிட்டது. இவர்களின் cross-marketingஐ குமுதம் தனிப்பத்திரிகையாக எதிர்ப்பது கஷ்டம். இதில் திமுக ஆட்சிக்கு வந்தால் குமுதத்தின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இருக்காது. இதெல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

கடந்த சில இதழ்களாக குமுதம் தமிழகம் முழுவதும் சர்வே நடத்தி வருகிறது. ஒரு தேர்தல் கணிப்புக்குத் தேவையான statistical rigor இதில் இருக்கிறதா என்பது சந்தேகமே. இதை நான் கூர்ந்து படிக்கவில்லை. மேலோட்டமாக பார்த்ததில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது போல கணித்திருக்கிறது குமுதம். இதில் எத்தனை அளவு உண்மை நிலவரம், எத்தனை அளவு குமுதத்தின் சார்பு என்று தெரியவில்லை. இதில் கருத்து கூறுபவர்களும் எதிர்பார்த்ததையே சொல்கிறார்கள் - திமுக சார்பில் "கருத்துக் கணிப்பை நாங்கள் நம்புவதில்லை" என்றும் அதிமுக சார்பில் "உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறது குமுதம் சர்வே" என்றும்.

சென்ற வாரக் குமுதத்தின் எக்ஸ்க்ளூசிவ், ஜெயலலிதாவுடன் ஒரு பேட்டி. ஜெயலலிதா அவ்வளவு எளிதாக பேட்டி அளிக்கமாட்டார். குமுதம் தன் கூட்டணியை வெற்றி பெறும் என்று சொன்னதற்கு அதன் மூலமாகவே மேலும் விளம்பரம் பெற நினைத்திருக்கலாம். குமுதத்திற்கும் ஜெயலலிதாவின் பேட்டி சர்க்குலேஷனுக்காகவும், எதிர்காலத்தில் திமுக மீடியாவை எதிர்கொள்ள ஒரு ஆரம்பமாகவும் இது தேவையாக இருந்திருக்கலாம். ஆகவே, இரண்டு பேருக்கும் இது நல்ல விஷயந்தான்.

ஆனால், ஒரு பேட்டியில் சிறிதளவேனும் நடுநிலைமையை எதிர்பார்க்கும் நாம் தான் ஏமாளிகள் போலிருக்கிறது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்:

* தண்ணீர் பஞ்சமே தமிழகத்தில் இருக்காது என்கிற உன்னத நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அந்த அற்புத திட்டம் (மழை நீர் சேகரிப்பு) உருவான இல்லம்.


* வலது பக்கத்தில் வீட்டின் சொந்தக்காரர் மட்டுமல்ல, தமிழக மக்களின் சொந்தக்காரரின் பெயர்!


* "வாங்க, உங்களுக்காகத்தான் காத்திருக்கேன், நல்லா இருக்கீங்களா" என்று தாய்ப் பாசத்துடன் வரவேற்கிறார்.


* இத்தனை எளிமையாக சகஜமாகப் பழக்ககூடியவரா நம்
முதல்வர்? என்ற வியப்பு இழையோடுகிறது.


* இடையறாத அரசுப் பணியிலும் அரசியல் பணியிலும் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் நாட்டு மக்களுக்காக கடுமையாக உழைக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் குமுதத்திற்காக நேரம் ஒதுக்கி, குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.


* உங்கள் ஆட்சி என்றாலே நல்ல மழை, விவசாயம் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்களே?


* உழவர்கள், விவசாயிகள் மீது எப்போதுமே உங்களுக்குக் கருணை
உண்டு.


* நீங்கள் சந்தித்த போராட்டங்களும் மீண்டு பெற்ற வெற்றிகளும் இளைய தலைமுறைக்குப் பயன் உடையதாக இருக்குமே?


* அரசின் பல நல்ல திட்டங்களையும், தற்போது உள்ள சூழ்நிலையையும் பார்த்து எதிர்க்கட்சிகள் சற்று கலக்கம்
அடைந்துள்ளனவா?


* திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓர் அட்வைஸ் சொல்லச் சொன்னால் என்ன சொல்வீர்கள்?

படித்தது குமுதமா, நமது எம்.ஜி.ஆரா தெரியவில்லை. அடுத்த வாரம் மிச்சம்.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



3 comments: to “ அதிமுக பக்கம் சாயும் குமுதம்